உலகக் கிண்ணம் - 2019


 முடிவை மாற்றியமைத்தார் மிட்செல் ஸ்டாக்!

150 விக்கெட்டுக்களை வேகமாக சாய்த்த 2 ஆவது வீரர்

டெய்லரின் அதிரடியுடன்  வீழ்ந்தது பங்களாதேஷ்!

முதல் வெற்றியும் மூன்றாவது தோல்வியும்

பழி தீர்த்த பாகிஸ்தான் !

மிட்செல் ஸ்டாக் முதலிடத்தில் !

கைவிடப்பட்டது இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம்!

சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி!

இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி.முடிவை மாற்றியமைத்தார் மிட்செல் ஸ்டாக்!

06/06/2019 மிட்செல் ஸ்டாக்கின் அபாரமான பந்து வீச்சினால் அவுஸ்திரேலிய  அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 15 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ண தொடரின் 10 ஆவது லீக் போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கிடையிலும் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றது.
289 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் விக்கெட் 7 ஓட்டத்துக்குள் வீழ்த்தப்பட்டது. அதன்படி 1.4 ஆவது ஓவரில் லிவீஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அதிரடிகாட்ட ஆரம்பித்த கிறிஸ் கெய்லும் 4.5 ஆவது ஓவரில் 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இதனால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 31 ஓட்டத்துக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது. பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக நிகோலஷ் பூரண் மற்றும் ஷெய் ஹோப் கை கோர்த்து அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாடினர்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி 10 ஓவர்கள் நிறைவில் 54 ஓட்டத்தையும், 15 ஓவர்கள் நிறைவில் 78 ஓட்டத்தையும் பெற்றனர். இந் நிலையில் 19.1 ஆவது ஓவரில் நிகோலஷ் பூரண் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிம்ரன் ஹேட்மேயரும் சற்று நேரம் நிலைத்தாடி  34 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 21 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் (190-5).
ஆறாவது விக்கெட்டுக்காக ரஸல் களமிறங்கி அதிரடி காட்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது எனினும் ரஸல் 38.5 ஓவரில் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, பிரித்வெய்ட் களமிறங்கினார்.
40 ஓவர்களின் நிறைவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றிருக்க, வெற்றிக்கு 60 பந்துகளில் 66 ஓட்டங்கள் என்ற நிலையிருந்தது. ஆடுகளத்திளத்தில் அணித் தலைவர் ஹோல்டர் 37 ஓட்டத்துடனும் பிரித்வெய்ட் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
இந் நிலையில் 43.4 ஆவது ஓவரில் ஹோல்டர் 50 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசியதுடன் அந்த ஓவரின் முடிவில் மேற்கிந்தியத்தீவுள் அணியும் 243 ஓட்டங்களை எடுத்தது.
46 ஆவது ஓவருக்காக மிச்செல் ஸ்டாக் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் பிரத்வெய்ட் 16 ஓட்டத்துடனும் இறுதிப் பந்தில் ஹோல்டர் 51 ஓட்டத்துடனும்  ஆட்டமிழந்தார் (252-8).
இதனால் வெற்றியின் வாய்ப்பி அவுஸ்திரேலிய அணிப் பக்கம் திரும்பியது. 9 ஆவது விக்கெட்டுக்காக அஷ்லி நர்ஸ் மற்றும் ஷெல்டன் கோட்ரெல் ஜோடி சேர்ந்தாட மேற்கிந்தியத்தீவுகள் அணி 47 ஓவர்களின் முடிவில் 255 ஓட்டங்களை பெற்றதுடன் வெற்றிக்கு 18 பந்துகளுக்கு 34 ஓட்டம் என்ற நிலை இருந்தது.
எனினும் மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுது. இதனால் அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.
பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாக்ஸ் 5 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும், சாம்பா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
Photo credit : ICC
நன்றி வீரகேசரி 


150 விக்கெட்டுக்களை வேகமாக சாய்த்த 2 ஆவது வீரர்

06/06/2019 நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஐ.சி.சி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரசங்கில் வேகமாக 150 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை 80 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 148 விக்கெட்டுகளை எடுத்திருந்த டிரெண்ட் போல்ட் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மொசாடெக் ஹுசைனையும், மெஹீடி ஹசனையும் ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இந்த பெருமையை பெற்றுள்ளார்.
வேகமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக் (78 போட்டி), முதலிடத்திலும், டிரெண்ட் போல்ட் (81 போட்டிகள்) இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய அணியின் பிராட் லீ (82 போட்டிகள்) மூன்றாம் இடத்திலும், இலங்கையின் அஜந்த மெண்டீஸ் (84 போட்டிகள்) நான்காம் இடத்திலும், தென்னாபிரிக்காவின் ஆலன் டொனால்ட் (89 போட்டிகள்)ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


டெய்லரின் அதிரடியுடன்  வீழ்ந்தது பங்களாதேஷ்!

06/06/2019 பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியல் நியூஸிலாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்றைய தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 6.00 மணிக்கு கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணிக்கும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிக்கிடையிலும் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 244 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் சஹிப் அல்ஹசன் 64 ஓட்டத்தையும், மொஹமட் சைஃபுடின் 29 ஓட்டத்தையும், மொஹமட் மிதுன் 26 ஓட்டத்தையும், சவுமிய சர்க்கார் 25 ஓட்டத்தையும், தமிம் இக்பால் 24 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன், மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிரேண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
245 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 47.1 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து பங்களாதேஷ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கனை கடந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் ரோஷ் டெய்லர் மொத்தமாக 91 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 82 ஓட்டத்தையும், கேன் வில்லியம்சன் 40 ஓட்டத்தையும், மார்டின் குப்டில் 25 ஓட்டத்தையும், கொலின் முன்ரோ 24 ஓட்டத்தையும், ‍ஜேம்ஸ் நீஷம் 25 ஓட்த்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணிசார்பில் மெய்டி ஹசன், சஹிப் அல்ஹசன், மொஹமட் சைஃபுடின் மற்றும் ஹுசேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.  
Photo credit : ICC
நன்றி வீரகேசரி 


முதல் வெற்றியும் மூன்றாவது தோல்வியும்

05/06/2019 ஆறு விக்கெட்டுகளினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்த இந்திய அணி, தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 8 ஆவது லீக் போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே சவுத்தம்டனில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை குவித்தது.
228 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 47.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
இந்திய அணி சார்பில் தவான் 8 ஓட்டத்துடனும், விராட் கோலி 18 ஓட்டத்துடனும், ராகுல் 26 ஓட்டத்துடனும், தோனி 34 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், பாண்டியா 15 ஓட்டத்துடனும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா மொத்தமாக 144 பந்துகளில் 13 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 122 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணிசார்பில் ரபடா 2 விக்கெட்டுக்களையும், ஆண்டில் பெஹல்குவே மற்றும் கிறிஸ் மொறிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இத் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo credit : ICC
நன்றி வீரகேசரி 


பழி தீர்த்த பாகிஸ்தான் !

03/06/2019 இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது.
349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோசன் ரோய் 8 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ 32 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 13 ஓட்டத்துடனும், இயன் மோர்கன் 9 ஓட்டத்துடனும், ரூட் 107 ஓட்டத்துடனும், பட்லர் 103 ஓட்டத்துடனும், மொய்ன் அலி 19 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 21 ஓட்டத்துடனும், ஜோப்ர ஆர்ச்சர்  ஒரு ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் மார்க்வூட் 10 ஓட்டத்துடனும், அடில் ரஷித் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 ஷெடப் கான், மொஹமட் அமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஹபீஸ், மலிக் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துடனான தொடரில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழி தீர்த்ததுடன், கடந்த 11 ஒரு நாள் போட்டிகளிலும் அடைந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
photo credit : ICC
நன்றி வீரகேசரி மிட்செல் ஸ்டாக் முதலிடத்தில் !

07/06/2019 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 விக்கெட்டுக்களை வேகமாகக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர்  மிட்செல் ஸ்டாக் படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 150 விக்கெட்டுக்களை சாய்த்த வீரர் பட்டியலில் இதுவரை பாகிஸ்தான் அணியின் சக்லைன் முஸ்தாக் முதல் இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் மிச்செல் ஸ்டடாக் 10 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு, 46 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுக்களை சாய்தார்.
இதன் மூலம் அவர் 77 போட்டிகளில் விளையாடி வேகமாக 150 விக்கெட்டுக்களை எடுத்த வீரர் என்ற பட்டியலில் ஸ்டாக் முதலிடம் பிடித்தார். 
வேகமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக் (78 போட்டி), இரண்டாம் இடத்திலும், டிரெண்ட் போல்ட் (81 போட்டிகள்) மூன்றாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணியின் பிராட் லீ (82 போட்டிகள்) நான்காம் இடத்திலும், இலங்கையின் அஜந்த மெண்டிஸ் (84 போட்டிகள்) ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.
இதுவரை 77 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டாக் 151 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி கைவிடப்பட்டது இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம்!

07/06/2019 இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவிருந்த உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி எதுவித பந்துகளும் வீப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு பிரிஸ்டலில் இடம்பெறவிருந்தது. இந் நிலையில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக போட்டி நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் பாகிஸ்தான் மற்றும இலங்க‍ை அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 

சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி!

08/06/2019 இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106  ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான போட்டி தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் மோத்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே கார்டீப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்கள‍ை குவித்தது.
387 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 106 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் அணி சார்பில் அதரடியாக துடுப்பெடுத்தாடிய சகிப் அல்ஹசன் 119 பந்துகளில் 12 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 121 ஓட்டத்தையும், முஷ்பிகுர் ரஹிம் 44 ஓட்டத்தையும், மாமதுல்ல 28 ஓட்டத்தையும், ஹுசேன் 26 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணிசார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜேப்ர ஆச்சர் தலா 3 விக்கெட்டுக்களையும், மார்க்வூட் 2 விக்கெட்டுக்களையும், பிளாங்கட் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
நன்றி வீரகேசரிஇந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி.

09/06/2019 அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 36 ஓட்டத்தனால் தோல்வியைத் தழுவியது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வோர்னர் 56 ஓட்டத்தையும், ஆரோன் பிஞ்ச் 36 ஓட்டத்தையும், ஸ்டீபன் ஸ்மித் 69 ஓட்டத்தையும், உஷ்மன் கவாஜா 42 ஓட்டத்தையும், மெக்ஸ்வெல் 28 ஓட்டத்தையும், பேட் கம்மின்ஸ் 8 ஓட்டத்தையும் கோல்ட்டர் நைல் 4 ஓட்டத்தையும், மிட்செல் ஸ்டாக் 3 ஓட்டத்தை, சம்பா ஒரு ஓட்டத்யைும், ஸ்டோனிஸ் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் அலெக்ஸ் கரி 55 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சாஹல் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
Photo credit : ‍ICC 
நன்றி வீரகேசரி 

No comments: