தமிழ் சினிமா - கொலைகாரன் திரைவிமர்சனம்

சில நடிகர்களின் படங்கள் மீது எப்போதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியான ஈர்ப்பை கொண்டவர் விஜய் ஆண்டனி. அழுத்தமான கதைகளில் நடிக்கும் அவர் இப்போது கொலைகாரனாக வந்துள்ளார். வாருங்கள் நடந்த சம்பவம் என்ன என பார்க்கலாம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி ஒரு தனி மனிதர். கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் அவர் தனியே வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு ஹீரோயின் ஆஷிமா அறிமுகமாகிறார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆஷிமா தன் அம்மா சீதாவுடன் வசித்து வருகிறார். சந்தோசமாக செல்லும் இவரின் வாழ்க்கை பின்னணியில் பெரும் சோகம். இதற்கிடையில் விஜய் ஆண்டனிக்கும், ஆஷிமாவுக்கும் காதல் மலர்கிறது.
ஒரு நாள் ஆஷிமாவை காண மர்ம நபர் அவரின் வீட்டின் நுழைகிறார். அம்மா, மகளின் உயிருக்கு ஆபத்தான வேளையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தேறுகிறது. இந்நிலையில் போலிஸ் அதிகாரி அர்ஜூன் கொடூர கொலை சம்பவம் தொடர்பாக ஆஷிமா, விஜய் ஆண்டனியை விசாரிக்கிறார்.
இதில் கொலை செய்யப்பட்டது யார், ஆஷிமா ஆபத்திலிருந்து தப்பித்தாரா, ஆஷிமா, விஜய் ஆண்டனி இருவரும் காதிலில் ஒன்று சேர்ந்தார்களா, அர்ஜூன் தேடி வந்த கொலைகாரன் யார் என்பதே கதை.

படத்தை பற்றி அலசல்

விஜய் ஆண்டனியின் படங்களை மக்கள் மிகவும் எதிர்பார்த்து தியேட்டருக்கு வர காரணம் அவரின் முந்தய படங்களில் ஒன்றான பிச்சைக்காரன் தான். அதன் பின் சில திகில் கதைகளில் நடித்து வந்தாலும் தற்போது கொலைகாரனில் மிரட்டியுள்ளார்.
அவருக்கேற்ற படியான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். எந்த சிரிப்பும் இல்லாமல், சீரியஸாக அவர் போனது நம் கண்களை ஷார்ப் ஆக்குகிறது. அதே வேளையில் ஹீரோயினுடன் குளோசப் ரொமான்ஸையும் இங்கும் தொடர்ந்துள்ளார். ஆக்‌ஷன், செண்டிமெண்ட், அதிரடி என கலவை காட்டியுள்ளார்.
ஹீரோயின் ஆஷிமா நர்வால் நம் சினிமாவுக்கு புதுமுகம். இந்திய ஆஸ்திரேலியா வம்சாவளியை சார்ந்த இவருக்கு விஜய் ஆண்டனிக்கு இணையாக படத்தில் பயணிக்கிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளதால் கொஞ்சம் முன் அனுபவம் இருக்கிறது என அவரின் நடிப்பு சொல்கிறது.
ஹீரோயினுக்கு அம்மாவாக வரும் சீனியர் நடிகை சீதா ஒரு காலத்தில் டாப் ஹீரோயின். தொடர்ந்து படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இப்படத்தில் அவர் தனக்கு வரும் பிரச்சனையை கையாளும் விதம், என்ன நடந்தது என நம் கவனத்தை கூட்டுகிறது.
ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இப்படத்திலும் ஒரு போலிஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். அவர் வழக்கை அணுகும் விதம், அவருக்கே உண்டான தோரணை, ஸ்டைல் என கேரக்டருடன் பொருந்துகிறது. வழக்கு விசாரணையில் அவருக்கு ஆலோசனை வழங்கும் நாசரின் வசனும் நம்மை யோசிக்க வைக்கிறது.
படத்தில் காமெடிகள் என தனியாக எதுவும் இல்லை. ஆனால் அதை எதிர்பார்க்காத அளவிற்கு படத்தை போக்கிலேயே நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். என்ன நடந்திருக்கும் நமக்குள் தேடும் அளவிற்கு அனைத்து காட்சிகளையும் கவனமாக கையாண்டுள்ளார். திறமை இருக்கிறது இயக்குனரே.
யவ்வன்னா பாடல் ஹிட் கொடுத்த இசையமைப்பாளர் சைமன் கிங் இப்படத்தில் பின்னணி இசை, பாடல்கள் என விஜய் ஆண்டனியின் டேஸ்டுக்கு ஏற்றார் போல் அமைத்து கொடுத்திருக்கிறார்.

கிளாப்ஸ்

அர்ஜூனின் அடுக்கடுக்கான சந்தேக யூகங்கள் நமக்கு திரில்லர் டிராவல் அனுபவம்.
இயக்குனர் சஸ்பென்ஸை கடைசி வரை தெளிவாக கொண்டு போனது.
ஆக்‌ஷன், பின்னணி இசை, பாடல்கள், என அனைத்தும் விஜய் ஆண்டனிக்கான ஸ்டைல்.

பல்பஸ்

ரொமான்ஸ் பாடல் ஒன்று இடையில் தேவை தானா என்ற ஃபீல்.
மொத்தத்தில் கொலைகாரன் எதிர்பாராத திகில். ஓகே. ஆனால் கவனமாக பார்த்தால் தான் கச்சிதமாக புரியும்.   நன்றி  CineUlagam
No comments: