உயிர்த்த ஞாயிறில் வெடித்த குண்டுகள் சதியா? - செ .பாஸ்கரன்



.
கர்த்தர் உயிர்த்த ஞாயிறு இலங்கையில் கோர நாளாக மாறியது. வழிபாட்டிடற்கு சென்றமக்கள் கொடூரமாக கொல்லப் பட்டார்கள் 
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய 9 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று போலீஸ்  அதிகாரிகள் உள்பட 207 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் வெளிநாட்டவர்களாகும் மேலும் 450 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன, ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்து "இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள். என்று குறிப்பிடடார். அத்தோடு இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். என்றும் குறிப்பிடடார். 
இறுதியாக குண்டுவெடித்த தெமட்டகொடவில் சந்தேகநபர்களை கைதுசெய்ய போலீசார் சென்றபோது குண்டுத்தாக்குதல் மேட்கொள்ளப் பட்டதால் 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப் பட்டார்கள். 



இலங்கையை அதிரவைத்த இந்த குண்டுத்தாக்குதல் பற்றி முக்கூட்டியே எச்சரிக்கப் பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரால் பாதுகாப்பு அமைச்சிறகு எச்சரிக்கை அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அப்படியாக இருந்தால் அது ஏன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்ற கேள்வி இது சதியா என்று எண்ணத் தோன்றுகின்றது. 
தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இலங்கையில் முக்கிய சமூக ஊடகங்களை அரசு முடக்கியுள்ளது அத்துடன் மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என்று கோரியதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தம் கொடுக்க மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.










No comments: