11/11/2019 இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.
ஹைதராபாத்தில் கச்சிகுடா ரயில் நிலையம் நம்மூர் எக்மோர் ரயில் நிலையத்தை போல் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தான் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு, தமிழகம், கர்நாடகா உள்ளிட்டமாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் இன்று காலை பயங்கரமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன. 
மின்சார ரயில் ஒன்று மற்றொரு ரயில் மீது பயங்கரமாக மோதிக்கொண்டது
இந்த விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தும் உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன. 
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
நன்றி வீரகேசரி