03/08/2019முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இராஜி­னாமா செய்து எதிர்ப்பை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­திய முஸ்லிம் அமைச்­சர்கள் நால்வர் தங்­க­ளது முன்­னைய அமைச்­ சுப்­ப­த­வி­களை மீண்டும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் கடந்த 29ஆம் திகதி பொறுப்­பேற்­றுக்­கொண்­டுள்­ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக் கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யு தீன் உட்­பட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அப்­துல்லா மஹ்ரூப் ஆகிய இரு­வரும் ராஜாங்க அமைச்­ச­ரா­கவும் மற்றும் பிரதி அமைச்­ச­ரா­கவும் பதவி ஏற்றுக் கொண்­டுள்­ளனர்.
இதே­வேளை இராஜி­னாமா செய்த ஒன்­பது பேரில் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த கபீர் ஹாசிமும் எம்.எச்.ஏ.ஹலீமும் ஏற்­க­னவே அமைச்­சுப்­ப­த­விகளை பொறுப்­பேற்­றி­ருந்த நிலையில் மேற்­படி நால்­வரும் மீண்டும் பொறுப்­பேற்­றுள்­ளனர். இதே­ வேளை முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அமைச்சுப் பத­வியை பொறுப்­பேற்க மறுத்த நிலையில் இன்னும் இரு­வரும் பத­வி­களை பொறுப்­பேற்க மறுத்­துள்­ளனர்.
முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாக இராஜி­னாமா செய்­த­தற்கு ஒரு காரணம் மட்­டுமே பின்­னணி வகித்த போதும் அமைச்சுப் பத­ வி­களை ஏற்­றுக்­கொண்­ட­தற்கும் ஏற்­காமல் இன்னும் இருப்­ப­தற்கும் பல கார­ணங்கள் இருக்­க­லா­மென ஊகிக்க முடி­கி­றது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்­பா­ளர்­க­ளான, கபீர் ஹாசிமும் ஹலீமும் அவ­சர அவ­ச­ர­மாக பொறுப்­பேற்றுக் கொண்­ட­ மைக்குக் காரணம் அவர்கள் அங்கம் பெறும் கட்சி, மற்­றை­யது அவர்கள் தெரி­ வாகி வந்­துள்ள தேர்தல் தொகுதி என்­ப­ன­வாகும்.
ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும், அதன் வழி அமைச்­சர்­க­ளா­கவும் பதவி வகித்துக் கொண்­டி­ருக்கும் மேற்­படி இரு­வரும் கட்­சியின் பிர­தான பொறுப்­புக்­களை ஏற்­க­னவே வகித்­த­வர்கள் மாத்­தி­ர­மல்ல அக்­கட்­சியின் செயற்­படு முறைக்கு முக்­கிய பங்­காற்­றியும் வரு­ப­வர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இரு முன்னாள் ஆளு­நர்கள் ஒரு முஸ்லிம் அமைச்சர் பத­வி­வி­லக வேண்­டு ­மென்று இன­வா­தி­க­ளாலும், அர­சியல் பேரின போக்­கா­ளர்­க­ளாலும் வலி­யு­றுத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த 9 முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாக பதவி வில­கினர். ஒரு மாத காலத்­துக்குள் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை செய்து முடிவு அறி­விக்­கப்­ப­டு­வ­துடன் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டு­மென்ற நிபந்­த­னை­யுடன் முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி வில­கினர்.
இப்­ப­தவி வில­க­லின்­போது இனத்­து­வத்தை முன்­னி­றுத்தி கட்சி பேதங்­களை மறந்து கருத்து முரண்­பா­டு­களை ஒதுக்­கி ­விட்டு சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து அவர்­களை காப்­ பாற்ற வேண்­டு­மென்ற தோர­ணை­யி­லேயே அவர்­களின் முடிவு எடுக்­கப்­பட்­டது. ஆனால் இன்று அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொண்­டவர்­களின் தீர்­மா­னங்­ க­ளுக்கும் ஏற்க மறுக்கும் எம்.பி.க்களி னுடைய கொள்கை அல்­லது நிலைப்­பாடு தொடர்பில் பாரிய கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.
ஏலவே பத­வி­களை ஏற்­றுக்­கொண்ட ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள் எந்த நிபந்­த­னை­க­ளையும் முன்­வைக்­கா மல் பத­வி­களை ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும் நிலையில் கிழக்கு முஸ்­லிம்­களின் தீர்க்­கப்­ப­டா­துள்ள பிரச்­சி­னைகள் உட்­பட முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடித் தீர்­வுகள் வழங்­கப்­பட்டால் மட்­டுமே தன்னால், தம்மால் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்க முடி­யு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­துள்ளார். இவர் கூறிய கார­ணத்தின் பின்­ன­ணி­யி­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த பைசல் காசீம், அலி­ஸாஹீர் மௌலானா ஆகியோர் தமக்­கு­ரிய அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­க­வில்­லை­யென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­நேரம் இவர்கள் மூவரும் விரைவில் கட­மை­களை பொறுப்­பேற்­பார்கள் என்றும் ஆருடம் கூறப்­ப­டு­கி­றது. மேற்­படி மூவரும் பின்­வாங்­கு­வ­தற்­கு­ரிய காரண காரி­யங்­களை ஆராய்­வ­தற்கு முன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்­பா­ளர்­க­ளான கபீர் ஹாசீம் மற்றும் ஹலீம் தொடர்­பான விவ­கா­ரங்­களை நோக்­குவோம்.
ஏலவே குறிப்­பிட்­ட­துபோல் இவர்கள் இரு­வரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்கு அளிப்பால் வந்­த­வர்கள் மாத்­தி­ர­மல்ல, சிங்­கள மற்றும் முஸ்லிம் வாக்கு ஆத­ரவின் மூலம் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள். இன்னும் தெளி­வாக கூறு­வ­தானால் சிங்­கள மக்­களின் கணி­ச­மான வாக்குப் பலத்­தினால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் என்று கூறி­னாலும் பொருந்தும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பல­முள்ள கோட்­டை­யி­லி­ருந்து தெரி­வாகி வந்­த­வர்கள். உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்­துடன் ஏற்­பட்­டி­ருக்கும் முறுகல் நிலை, சிறு­பான்மை மக்­க­ளா­கிய முஸ்லிம் மக்கள் மீது பேரி­ன­வாத சமூ­கத்­துக்கு வெறுப்­பையும் விரி­ச­லையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிலையில் தொடர்ந்து அதி­ருப்­தி­களை தவிர்த்துக் கொள்ள வேண்­டிய கட்­டாய சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்கும் கார­ணத்­தி­னா­லேயே அவ­ச­ர­மான முடி­வுக்கு அவர்கள் வந்­தி­ருக்க முடியும். அது­வு­மின்றி விரைவில் வர­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்தல், பொதுத்­தேர்தல் என்­ப­ன­வற்றை இலக்கு வைத்து காய் நகர்த்திக் கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமைப் பீடத்­துக்கு இவ்­வி­ரு­வரும் தமது சமூகம் சார்ந்த விட­யத்தில் தொடர்ந்து எட்ட நிற்­பது எதிர்­கால அர­சி­ய­லுக்கு ஆபத்­தாக முடி­யு­மென்ற கார­ணத்தின் அடிப்­ப­டையில் கொடுக்­கப்­பட்ட அழுத்தம் கார­ண­மாக அந்த முடி­வுக்கு வந்­தி­ருக்க முடியும்.
முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வரை வட­கி­ழக்­குக்கு அப்பால் அவர்­களின் வாழ்­வியல் ஒன்று கூடிய தன்மை கொண்­டவை. இதன் அர்த்தம் யாதெனில் சிங்­கள மக்­களின் கிரா­மங்­க­ளுடன் கோர்க்­கப்­பட்டு இருப்­பவை. இவ்­வா­றான யதார்த்த வாழ்வு முறையில் முரண்­பாட்டு பிடி­மா­னங்­க­ளையோ, வேறு­பா­டு­க­ளையோ காட்டி வாழ்­வ­தென்­பது நிதர்­ச­னத்­துக்கு அப்­பாற்­பட்­டவை. அது போலவே வட­–கி­ழக்கு சாயல்­களும். எனவே தான் தொடர் முரண்­பா­டு­களை அறுத்­தெ­றிய வேண்­டிய தேவை­யுள்­ளது.
இரண்­டா­வது விட­ய­மாக இவ்­வார ஆரம்­பத்தில் அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொண்ட, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் அவர் கட்­சியைச் சேர்ந்த அப்­துல்லா மஹ்ரூப் ஆகி­யோரின் பத­வி­யேற்­பா­னது முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­வரை நல்­ல­தொரு சமிக்­ஞை­யா­கவே சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.
முஸ்லிம் அமைச்­ச­ரான ரிஷாத் பதி­யு­தீ னும் ஆளுநர் இரு­வரும் பதவி வில­க­வேண்­டு­மென்ற கோஷத்­தையும் கோரிக்­கை­யையும் முன்­வைத்து ரத்­ன­தேரர், பொது­ப­ல­சேனா பொதுச்­செ­ய­லாளர் தலை­மை­யி­லான பௌத்த குருமார் கண்டி தலதா மாளிகை முன் முன்­னெ­டுத்த பௌத்­த­வாதப் போராட்­ட­மா­னது பாரிய இன அழி­வு­களை உண்­டாக்­கி­விடும் என்ற தீர்க்­க­த­ரி­ச­ன­மான பார்­வை­யுடன் பொருத்­த­மான வேளையில் தமது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இராஜி­னாமா செய்­தமை வர­லாற்­றுக்கு அப்பால் பேசப்­ப­டு­கிற சம்­பவம் மாத்­தி­ர­மல்ல, மிகச் சிறந்த அர­சியல் சாணக்­கி­யத்தை பிற தலை­மை­க­ளுக்கு எடுத்­துக்­காட்டும் சிறந்த உதா­ர­ண­மாகும்.
இவ்­வி­வ­கா­ரத்தால் முஸ்லிம் சமூக தலை­ மை­க­ளுக்­கி­டையே இரு சாத்­திய விவ­கா­ரங் கள் நடந்­தே­றி­யுள்­ளன. ஒன்று சிறு­பான்மை இனத்தின் கூட்டு நோக்கு ஒற்­றுமை. இரண்­டா­வது விடயம் அர­சி­யலில் நிரந்­த­ர­மான எதி­ரி­யு­மில்லை, நிரந்­த­ர­மான நண்­ப­னு­மில்­லை­யென்ற தர்க்­க­மு­றை­யான தத்­துவம்.
அமைச்சுப் பத­வி­களை மீள ஏற்­பது தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ரு­ட னும் பல கட்டப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி ஒரு தீர்­மா­னத்­துக்கு வந்த பின்பே மீளப்­பொ­றுப்­பேற்­றுள்­ளனர். இப்­பேச்சு வார்த்­தை­களின் போது தமது சமூகம் சார்ந்த, பிர­தேசம் சார்ந்த பல கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளனர். அக்­கோ­ரிக்­கைகள் கொள்­கை­ய­ளவில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பின்பே மூவரும் மீள்­ப­தவி ஏற்­றுள்­ளனர்.
கடந்த 28, 29ஆம் திக­தி­களில் இடம்­பெற்ற இறு­திப்­பேச்­சு­வார்த்­தையின் போது பிர­த­ம­ரு­டனும் அமைச்சர் வஜிர அப­ய­வர்த்­த­ன­வு­டனும் பல விவ­கா­ரங்கள் தொடர்பில் பேசி முடிவு காணப்­பட்­ட­தாக கூறப்­பட்­ட­போதும் கிழக்கு முஸ்­லிம்­களின் தீர்க்­கப்­ப­ டாத பிரச்­சி­னைகள் உட்­பட்ட முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்­கப்­பட்டால் மாத்­தி­ரமே தம்மால் அமைச்சுப் பத­வியை பொறுப்­பேற்க முடி­யு­மென ஹரிஸ் நிபந்­தனை விதித்­துள்­ள­தா­கவும் தக வல் தெரி­விக்­கின்­றன.
கல்­முனை வடக்கு உப­செ­ய­லக விவ­கா ரம், தோப்பூர் பிர­தேச செய­லகம் மற் றும்  வாழைச்­சேனை பிர­தேச செய­லகம் போன்ற விவ­கா­ரங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருப்­ப­துடன் வன்­செ­யல்­க­ளுக்­கான நட்­ட­ஈடுகள், அம்­பாறை பள்­ளி­வா­ச­லுக்­கான நட்­ட­ஈடு, ஏனைய சேதங்கள், அவ­சி­ய­மற்ற சிறை­ய­டைப்­புகள், குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் விவ­ர­மாக பேசி முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இப்­பேச்­சு­வார்த்­தையில் இடம்­பெற்ற மேற்­போன்ற விவ­கா­ரங்­களில் நட்­ட­ஈடு தொடர்­பா­கவோ, சிறை­ய­டைப்­புகள் சம்­பந்­த­மா­கவோ பிரச்­சி­னைகள் தோன்­று­வ­தற்கு சந்­தர்ப்பம் ஏற்­பட்­டி­ருக்க முடி­யாது. தொங்கிப் பார்க்­கிற ஒரே­யொரு விடயம் கல்­முனை, தோப்பூர் மற்றும் வாழைச்­சேனை பிர­தேச செய­லக விவ­கா­ரங்கள் கார­சாரம் கொண்­ட­வை­யாக இருந்­தி­ருக்­க­லா­மென ஊகிக்க முடி­கி­றது.
கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­ கத்தை தரம் உயர்த்த வேண்­டு­மென்ற கோரிக்கை நீண்­ட­கா­ல­மா­கவே முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இது தொடர்பில் பல உண்­ணா­வி­ரதப் போராட்­டங்கள் கவ ­ன­யீர்ப்புப் போராட்­டங்கள், ஆத­ரவுப் பேராட்­டங்கள், தொடர்ந்து நடத்­தப்­பட்டு வரு­கி­றது. இப்­போ­ராட்டம் ஒரு வெகு­ச னப் போராட்­ட­மா­கவும் விரி­வு­ப­டுத்­தப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கி­றது.
இன்னும் கவ­ன­மாகப் பார்க்­கப்­போனால் இப்­போ­ராட்­டமும், எதிர்­வா­தி­களின் விடாத்­தன்­மையும், இரு­து­ரு­வங்­க­ளாக ஆகி­விட்ட நிலையே தோன்­றி­யுள்­ளது. கிழக்கைப் பொறுத்­த­வரை அர­சியல் அதி­கா­ரங்­க­ளையும் செல்­வாக்­கு­க­ளையும் வைத்­துக்­கொண்டு தமிழ் மக்கள் நிந்­திக்­கப்­ப­டு­கி­றார்கள் என்ற பேத எண்ணம் இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­தூக்கி நிற்­ப­தையே காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. ஊர் இரண்­டு­பட்ட நிலையில் கூத்­தா­டிக்கு கொண்­டாட்டம் என்ற பழ­மொ­ழிக்கு அமைய இரு சமூ­கத்­துக்­கு­மி­டையில் தீர்வு காணும் தர­கர்­க­ளாக பிக்­குமார் நுழையும் சந்­தர்ப்­ப­மொன்று உரு­வா­கி­விட்­டது.
அம்­பாறை மாவட்­டத்தின் ஒரு பிர­தே­ச­மாக கல்­முனை காணப்­ப­டு­கி­றது. அம்­பாறை மாவட்­ட செய­ல­கத்தின் கீழ் இயங்கும் கல்­முனை தெற்கு பிர­தேச செய­லகம் முஸ்லிம் செய­ல­க­மா­கவும், கல்­முனை வடக்கு தமிழ் உப­செ­ய­ல­க­மா­கவும், சாய்ந்த மருது பிர­தேச செய­லகம் மற்­றொன்­றா­கவும் மூன்று செய­லகப் பிரிவு கல்­மு­னையில் இயங்கி வரு­கின்­றன. இதில் கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் முற்று முழு­தாக தமிழ் மக்கள் வாழும் கிரா­மங்­களைக் கொண்­டது.
மேற்­படி கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இதனால் தமிழ் மக்கள் நேர­டி­யா­கவே பாதிக்­கப்­பட்டு வரும் நிலை­யி­லேயே தமிழ்ப் பிர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய ஒரு பிர­தேச செய­ல­க­மொன்று கல்­மு­னையில் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன் வைத்து தொடர் போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இப்­போ­ராட்­டங்கள் தொடர்பில் அர­சாங்­கங்கள் எந்­த­ளவு கவனம் செலுத்­தி­யுள்­ளன என்­பது தொடர்பில் தெளி­வான தக­வலை யாராலும் பெற முடி­ய­வில்லை.
சில அர­சியல் தலை­மை­களின் விடாப்­பி­டித்­தன்மை. முரண்­பா­டு­க­ளையும் விரி­சல் ­க­ளையும் வளர்த்து செல்­கி­றதே தவிர கூர்­மை­யான ஒற்­று­மைக்கு வழி சமைக்க முடி­ய­வில்லை. கல்­முனை விவ­காரம் தொடர் பில் எந்­த­வொரு விட்டுக் கொடுப்­புக்கும் இட­மில்லை என்று மூர்க்­கத்­த­ன­மாக பேசு­ வது இன­வு­ற­வுக்கு குந்­தகம் விளை­விக்கும். இவ்­வி­வகா­ரத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் போட்டு அர­சியல் இலாபத்தை தேடப்­பார்க்­கி­ற­தென்­பது தெளி­வாக உண­ரப்­ப­டு­கிற விடயம்.
வஜிர அப­ய­வர்த்­தன முஸ்லிம் தரப்­பி­ன­ருக்கு சில வாக்­கு­று­தி­களை நல்­கி­யி­ருப்­ப­துடன் சுமுக­மான தீர்­வு­க­ளுக்கு உறுதி வழங்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் புத்தி ஜீவி­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது கல்­முனை வடக்கு தமிழ் உப பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­தப்­ப­டு­கிற அதே­வேளை சாய்ந்த மரு­துக்­கான தனி உள்­ளூ­ராட்சி சபை­யொன்றை உரு­வாக்கி தருவேன். இவ்­வி­ட­யத்தில் நான் உறு­தி­யாக இருக்­கிறேன். அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறேன் எனவும் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.
கல்­முனை வடக்கு உப செய­லக விவ­கா ரம் தொடர்பில் கல்­முனை வாழ் தமிழ் மக் கள் மாத்­தி­ர­மன்றி வட – கிழக்­கி­லுள்ள ஒட்­டு­மொத்த தமிழ்த்­த­ரப்­பி­னரும் தமிழ் தலை­மைகள் மீது அதி­ருப்தி கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள்.
தமிழ் மக்கள் குறிப்­பாக கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நீண்­ட­கா­லப்­ப­ய­ணத்தில் ஒன்று­பட்டு பய­ணிக்கும் நேர்த்­த­ன­மான எண்ணங் கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்து வந்­துள்­ளார்கள் என்­பதை பல சந்­தர்ப்­பங்­களில் நிரூ­பித்­துள்­ளார்கள் என்­பதை மறு­த­லித்து கூற­மு­டி­யாது.
2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற மாகாண சபைத் தேர்­தலின் போது கூட்­ட­மைப்பு 11 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்த நிலை­யிலும் கிழக்கில் நாம் இரு­வரும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்­துக்­கொள்வோம். எந்­த­வொரு விட்டுக் கொடுப்­புக்கும் நாம் தயா­ரா­க­வுள்­ளோ­மென கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தேர்­தலின் முன்னும் பின்னும் மான­சீ­க­மாக அழைப்பு விட்­டி­ருந்­த­போதும் ஒரு சில சுய­லா­பங்கள் அடிப்­ப­டையில் அவரின் கோரிக்கை உதா­சீனம் செய்­யப்­பட்­டது. அதன் விளைவு முஸ்லிம் சகோ­த­ரத்­துவம் நேர­டி­யா­கவே பாதிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்­டது. இதை அண்­மையில் ரவூப் ஹக்கீம் அழ­காகக் கூறி­யி­ருந்தார்.
தீர்வு விட­யத்தில் தமி­ழர்­களைப் போன்று நாங்­களும் விரக்தி நிலையில் உள்ளோம். புதிய அர­சியல் அமைப்­புக்கு இந்த அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை வழங்­கப்­பட்­டது. ஆனால் அர­சாங்­கத்தால் அதனை நிறை­வேற்ற முடி­யாமல் போயுள்­ளது. அதனால் தமிழ் மக்கள் போலவே நாங்­களும் தீர்வை எட்­டு­வதில் விரக்­தி­யுற்­றி­ருக்­கி­றோ­மென கூறி­யி­ருந்தார்.
2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்­றத்தைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை­யிலும் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றது. 11 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்சி ஆச­னத்­தி­லி­ருந்து ஆளும் வாய்ப்பு உரு­வா­கிய நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் தயா கமகே கூட்­ட­மைப்­பி­ன­ருடன் ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.
எங்­க­ளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வாருங்கள், என்னை முத­ல­மைச்சர் ஆக்­குங்கள், தேவை­யான அமைச்­சுக்­களை எடுத்­துக்­கொள்­ளுங்கள், இன்னும் சில மாதங்­களில் பொதுத்­தேர்தல் வந்­து­விடும். நான் அங்கு சென்­று­வி­டுவேன். நீங்கள் முத­ல­மைச்­ச­ராக கூட வர­லா­மென ஆசை காட்­டி­ய­போதும் வளைந்து கொடுக்­காமல் அற்ப சொற்ப சலு­கை­க­ளுக்­காக எமது சகோ­தர இனத்தை பகைக்க மாட்­டோ­மென்று கூறியே, விட்­டுக்­கொ­டுப்பின் அடிப்­ப­டையில் 11 உறுப்­பினர் கொண்ட கூட்­ட­மைப்பு 7 உறுப்­பினர் கொண்ட முஸ்லிம் காங்­கி­ரஸை கிழக்கின் முத­ல­மைச்சர் ஆக்­கி­யது. அத்­த­கைய பண்பு நிலை மாறிப்போய் சாதா­ரண பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த விடாமல் கங்­கணம் கட்­டு­வது என்­பது வருந்­தக்­கூ­டிய விட­ய­மாகும்.
இதே­போன்­ற­தொரு நிலை தான் சற்றும் மாறு­பட்ட கோணத்தில் காணப்­ப­டு­வது தோப்பூர் விவ­கா­ர­மாகும். தமிழ் மக்­களும் முஸ்லிம் சகோ­த­ரர்­களும் கூடிக்­கு­லாவி வாழும் மூதூர் பிர­தேச செயலகத்தை உடைத்து தோப்பூர் என்னும் இன்­னு­மொரு பிர­தேச சபையை உரு­வாக்­கு­வதில் எடுத்­து­வரும் முயற்­சி­யா­னது நேர­டி­யா­கவே தமிழ் மக்­களை பாதிக்கும் நட­வ­டிக்­கை­யென்­பது மூதூர் வாழ் மக்­க­ளு­டைய கவலை.
தோப்­பூ­ருக்கு தனி­யான ஒரு பிர­தேச செயலகத்தை உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்­பது அப்­ப­குதி மக்­களின் கோரிக்­கை­க­ளாகும். இக்­கோ­ரிக்­கை­களை நிறை­வேற்­றும்­படி அவர்கள் அர­சியல் தலை­மை­க­ளுக்கு அழுத்தம் கொடுத்து வரு­வதும் தெரி­யப்­பட்­ட­வி­டயம். இது முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் தமிழ் மக்­களை இன்னும் இன்னும் ஒதுக்கும் செயற்­பாடு மாத்­தி­ர­மன்றி இன உற­வு­க­ளுக்கு வேலி­போடும் நட­வ­டிக்­கை­க­ளாக மாறி­வி­டு­மென்­பது தமிழ் மக்­களின் கவ­லை­யாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
தோப்­பூ­ருக்கு ஒரு புதி­தான பிர­தேச சபை உரு­வாக்கும் திட்­டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிரா­மங்­க­ளான இக்பால் நகர், அல்லை நகர் மேற்கு, அல்லை நகர் கிழக்கு, தோப்பூர் ஆசாத் நகர், ஜின்னா நகர், பாலத்­தோப்பூர் ஆகிய ஏழு கிரா­மங்­க­ளுடன் தமிழ் மக்­களை முழு­மை­யாகக் கொண்ட கிரா­மங்­க­ளான கிளி­வெட்டி, மேன்­காமம், கங்­கு­வேலி, பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு, பாலத்­த­டிச்­சேனை ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரி­வு­க­ளையும் ஒன்­றி­ணைத்து 12 கிராம சேவ­கர்கள் பிரி­வு­களைக் கொண்ட தோப்பூர் பிர­தே­ச­ச­பை­யொன்றை உரு­வாக்க வேண்­டு­மென்­பதே விடுக்­கப்­பட்­டி­ருக்கும் கோரிக்­கை­யாகும். தற்­போது இதில் சின்ன சின்ன மாற்­றங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
ஏலவே குறித்த தமிழ் கிரா­மங்கள் மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் உள்­ள­டங்­கி­யி­ருப்­பவை. இவற்றை தோப்­பூ­ருக்­கென உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள பிர­தேச சபைக்­குள்ளும் இணைக்­கப்­ப­டு­மாக இருந்தால் தாம் சிறு­பான்மை ஆக்­கப்­ப­ட­வுள்ளோம் என்­பது குறித்த தமிழ் கிரா­மங்­களைச் சேர்ந்த மக்­களின் கவ­லை­யாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மூதூர் பிர­தேச செய­லகம் 42 கிராம சேவ­கர்கள் பிரி­வு­களைக் கொண்­டது. இவற்றில் 22 பிரி­வுகள் தமிழ்ப் பிரி­வு­க­ளா­கவும் 20 முஸ்லிம் பிரிவுகளாகவும் காணப்படும் நிலையில் தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு 68 வீதமாகவும், முஸ்லிம் கிராமங்களைக் கொண்ட நிலப்பரப்பு 32 வீதமாகவும் இருக்கும். கணக்கின்படி தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களின் வாதம்.
இதறகு இன்னொரு மாற்றீடாகவே மூதூர் பிரதேசத்தில் தமிழ்ப்பகுதியை உள்ளடக்கிய கொட்டியாரப்பற்று என்னும் புதிய பிரதேச செயலகமும் பிரதேச சபையும் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக தமிழ் மக்கள் தங்கள் நியாயங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இவ்வாறு பார்க்கும்போது அண்மைக்காலமாக, குறிப்பாக யுத்த கெடுபிடிகளிலிருந்து நாடு விடுபட்டு சீர்குலைவை நோக்கி நகர்ந்து கொண்டு போகும் நிலையில் இனமுறுகல்களையும் விரிசல்களையும் உண்டாக்கும் பலவித சவால்கள் வெளிவரும் நிலையில் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தேசிய அரசு தளம்பிக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. சுதந்திரம் பெற்று 70 வருடங்களை கடந்த நிலையிலும் அரசியல் இலாபங்கள், வீம்பு நிலைகள் காரணமாக நாடு இனச்சமநிலையை அடைய முடியாத கொடுமை நிலைக்குள் கொதித்துக் கொண்டிருப்பதையே அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் உரசவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் கூத்தாடிகளின் அரசியல் சதுரங்கத்துக்குள் அமிழ்ந்து போகாமல்நிதானமாகவும் நிதர்சனமாகவும் செயற்பட வேண்டிய பொறுப்பு சமூகத்தை சார்ந்தது மாத்திரமல்ல, அரசியல் தலைமைகளுக்குரிய தார்மீகக் கடமை. 70 வருட போராட்டம், 30 வருட யுத்தம் தமிழ் மக்களை தொலைந்து போன நிலைக்கு தள்ளியது போலவே அண்மைக்கால சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது. குண்டு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்களுக்கு  எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை தமிழ் மக்களோ தலைமைகளோ கைகட்டி பார்க்கவில்லையென்பதை திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அழகாக கூறியுள்ளார். எனவே இனத்துவமான சமூகப் பார்வை நோக்கங்களை அனைவரும் கைவிடுவதே எதிர்காலத்தை பலமுள்ளதாக ஆக்கும்.
திரு­மலை நவம் - நன்றி வீரகேசரி