மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற முஸ்லிம் எம்.பி.க்கள்
யாழில் பட்டதாரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரித்த சி.ஐ.டி. குழுவிடம் ஷாபியின் சொத்து விவகாரம் ஒப்படைப்பு
இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக பலாலி !
கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக மதவழிபாடுகள் !
48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானம்
உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் புகையிரத சேவைகள் 6 ஆக அதிகரிப்பு
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி
வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்
மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற முஸ்லிம் எம்.பி.க்கள்

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
1. ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்
2. ரிஷாத் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தக அலுவல்கள்,
நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சர்
3. அமீர் அலி செய்யத் முஹம்மத் சிஹாப்தீன்- விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
4. அப்துல்லாஹ் மஹ்ரூப்- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்
5. புத்திக பத்திரண- கைத்தொழில், வர்த்தக அலுவல்கள்,
நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சர்
எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், அலிசாஹிர் மெளலான, பைஷல் காஷீம் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
29/07/2019 யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனப் பெயர்ப் பட்டியலில் உள்ளவாங்கப்படாத அதாவது, 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுரை நியமனம் கிடைக்காத பட்டதாரி மாணவர்களான உயர் தொழில்நுட்பக் க ல்லூரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் மாணவர்ளே இந்த கவனயீர்பபுப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதில் கலந்து கொண்ட பட்டாதரிகளிடைடைய வெளிவாரி உள்வாரி என்ற பாகுபாடு காட்டோத, பதிவு செய்யப்படாத மாணவர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள், பட்டம் முடித்த பட்டதாரி மாணவர்களை புறக்கணிக்காமல் உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கு, போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, யாழ்.மாவட்ட செலயத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறீதரன் பட்டதாரி மாணவர்களின் போராட்ட களத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்தனர்.
இதில் கலந்து கொண்ட கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவிககையில், நாட்டில் உள்ள சகல பட்டாதாரி மாணவர்ளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு ஐக்கய தேசிய அரசாங்கம் அமைச்சரரைவை பத்திரைத்தை போடவுள்ளது. இனிவரும் காலங்களில் பட்டம் பெற்று வெளியியேறிய மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் வேலை வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், இனிமேலும் பட்டதாரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த அரசாங்கம் இடமளிக்காமல் வேலைவாப்பினை வழங்க ஆலோசித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது போராட்டத்தினை மேற்கொணடு வரும் மாணவர்ளின் கோரிக்கை அதாவது நியமனம் தொடர்பான பிரச்சினை ஒகஸ்ட் மாத இறுதிக்குள் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரித்த சி.ஐ.டி. குழுவிடம் ஷாபியின் சொத்து விவகாரம் ஒப்படைப்பு
30/07/2019 வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக, மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தை விசாரணை செய்த சிறப்பு சி.ஐ.டி. குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சி.ஐ.டி.யின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷனை அபேசேகர ஆகியோரின் மேற்பார்வையில், பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் பியசேன அம்பாவலவின் கீழ், சி.ஐ.டி.யின் நிதிக் குற்றங்களைக் கையாளும் விசாரணை அறை இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பெண் பொலிஸ் பரிசோதகர் தர்மலதா சஞ்ஜீவனீ தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நன்றி வீரகேசரி
30/07/2019 யாழ் குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் விமானத்தின் ஓடு பாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாவது விமான சேவை பலாலி விமானநிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சென்னைக்கிடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. தற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளன.
யு - 320 ரக விமானங்கள் தரையிறங்கக் கூடியதாக 3800 மீற்றர் நீளமான ஓடு பாதை அமைக்கப்படவுள்ளது.
இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக மதவழிபாடுகள் !
31/07/2019 ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது.

இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது.

இதேவேளை இப்பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர்.




நன்றி வீரகேசரி
48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானம்
31/07/2019 இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் நாளைமுதல் அமுல்படுத்தப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகல நாடுகளுக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு கட்டணமற்ற முறையில் வீசாக்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் விளமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
அமைச்சர் ஜோன் அமரதுங்க ,அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். வெளிநாட்டு தூதுவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.
மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளுடன் ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா, பெலிஜியம், பெல்காரியா, கனடா, கம்போடியா, சீனா, கொராடியா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்டோனியா. பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, க்றீஸ், ஹங்கேரி, இந்தோனிசியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, லட்வியா, லிதுஹானியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
மேலும் மலேசியா, மல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிபைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரோமானியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவானியா, ஸ்பெயின், சுவிடன், சுவிஸ்லாந்து, தாய்லாந்து , செக் குடியரசு, ஸ்லொவொக் குடியரசு மற்றும் உக்ரைன் ஆகிய 48 நாடுகளுக்கே இவ்வாறு கட்டணமற்ற வீசாக்கல் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில் குறித்த நாடுகளுக்கான வீசாக்களை தற்போது இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக www.eta.lk என்ற இணையத்தளத்தினூடாக வீசாக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் முடியும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்
31/07/2019 பிராந்திய வணிக விமான சேவைகளை முன்னெடுப்பதற்காக உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்ளக விமான சேவையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபவிருத்தி செய்யவும் இரத்மலானை விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக வசதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட தரத்திற்கு அமைய வெளிநாட்டு விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளும் பிராந்திய வணிக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த விமான நிலையங்களில் உறுதி செய்யுமாறு இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபைக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் இந்த விமான நிலையங்களில் சட்ட ரீதியில் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய எல்லை நிர்வாக விதிமுறைகளை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் புகையிரத சேவைகள் 6 ஆக அதிகரிப்பு
01/08/2019 கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் தினமும் இடம்பெற்று வரும் புகையிரத சேவைகள் எதிர்வரும் 3ஆம் திகதியிலிருந்து ஆறு சேவைகளாக அதிகரிக்கப்படவுள்ளன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய புகையிரதங்களை யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் இதுவரை காலமும் நான்கு சேவைகளாக நடைமுறையிலிருந்த புகையிரத சேவைகள் 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆறு சேவைகளாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் உத்தரதேவி புகையிரத சேவைக்கு அடுத்ததாக புதிய புகையிரத சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 1.45 மணிக்கு இடம்பெறும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதிக்குப் பின்னர் மாலை 5.45 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு மற்றுமொரு புகையிரத சேவையும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இரவு தபால் புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு யாழ்.மத்திய புகையிரத நிலையத்தை வந்தடைந்து கொழும்புக்குப் புறப்படும். தற்போது கொழும்பிலிருந்து இரவு 8.30 மணிக்கு யாழ்.நோக்கிப் புறப்படும் இரவு தபால் புகையிரதம் இரவு 9 மணிக்கு யாழ்.நோக்கி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி
01/08/2019 தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி. எனவே கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்துக்களின் மனவுணர்வை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்
04/08/2019 சைவத் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் போலியான வரலாற்றை உருவாக்கி விகாரைகள் அமைத்தலை நிறுத்துதல், வடகிழக்கில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்கும் அரசின் திட்டம் நடைமுறைப்படுத்துவதை தடை செய்தல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை இந்து அமைப்புக்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.

அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நல்லை ஆதீனம் முன்பாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக் காலம் முதல் அமைக்கப்பட்டிருந்த இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் ஆலய வளைவு உடைக்கப்படுவதும், பௌத்தர்கள் வாழ்ந்திராத பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்டுவதும் இலங்கை வாழ் இந்துக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதை நன்கு உணர்ந்த நிலையில் இந்து அமைப்புக்களின் ஒன்றியமானது அமைதி வழியில் மேற்படி அதர்ம செயல்களைக் கண்டித்தும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் அகிம்மை முறையில் கவனவீர்ப்பை இந்து சமயப் பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய தலைமை அமைச்சர் மற்றும் இலங்கையின் இந்து சமய விவகார அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்துக்கள் அனைவரும் அச்சமின்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தி உதவுமாறு தயவாக வேண்டுகின்றோம்.
இலங்கை வேந்தன் இராவணண் காலம் முதல் இந்துக்களால் பாதுகாக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டுவந்த கன்னியா வெந்நீருற்றுப் பகுதியையும் அங்கிருந்த ஆலயங்களையும் தடையேதுமின்றி மீளவும் அமைத்து வழிபாடு செய்பவதற்கும் இந்தப் பகுதி சைவத் தமிழரின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதையும் உறுதிப்படுத்தல். இந்தப் பிரதேசத்துக்கு அண்மையில் பௌத்த விகாரைகள் அமைத்தலைத் தடுத்தல். வவுனியா வெடுக்குநாறி சிவன் ஆலயத்துக்குச் செல்லும் பாதையூடாக தடையின்றி போக்குவரத்துச் செய்வது, அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கான ஏணிப் படிகளை அமைக்க பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தாது இருத்தல்.
மதநல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் இடித்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்தில் சமாதானமான முறையில் மீள அமைப்பதற்கு ஏற்பாடு செய்து மத நல்லிணக்கத்தைப் பேணுதல்.
தொல்லியில் திணைக்களம் நடுநிலைமை தவறி பக்கச்சார்பாகச் செயற்பட்டு பௌத்த வரலாற்றுச் சின்னங்கள் காணப்படாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை ஊக்கப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிப்பதோடு அத்திணைக்களத்துக்கு தகுதியான சைவத் தமிழர் களையும் நியமித்து குறித்த திணைக்களம் பக்கச்சார்பின்றி செயற்படு வதை உறுதிப்படுத்துதல்.

மதமாற்றங்களைத் தடை செய்தல்.
முல்லைத்தீவு செம்மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்யாதிருத்தல்.
நீராவியடிப்பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் இருந்தமைக்கான ஆதாரமே இல்லை என்று தொல் பொருள் திணைக்களமே கூறியுள்ள நிலையில் அங்கு விகாரைகள் அமைத்தலைத் தடை செய்யதல்.
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை நிறுத்துதல்.
மேலே விவரிக்கப்பட்ட எமது நியாயமான கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலித்து அவற்றைச் செயற்படுத்துவதற்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத் தித் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம், என்றுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment