03/08/2019 தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை தொலைத்­து­விட்டு  அவர்­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி  போரா­டிக்­கொண்­டி­ருக்கும்   காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வுகள்   தற்­போது பாரிய விரக்­தி­நி­லையை நோக்கி சென்­று­கொண்­டி­ருக்­கின்­றனர்.  தமது  காணா­மல்­போன உற­வு­களை  மீண்டும் காணவே முடி­யாதா, அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறிய முடி­யாதா, அவர்கள்  உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா போன்ற கேள்­வி­க­ளுக்கு பதில் தெரி­யாமல்   இந்த மக்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். 
யுத்­த­கா­லத்­திலும்  அதன் முடி­விலும் இவ்­வாறு பலர்  காணா­மல் ­போ­ன­தாக முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.  வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் இவ்­வாறு காணாமல் போன­வர்கள் தொடர்பில்  சுமார்   19ஆயிரம் முறைப்­பா­டுகள் எழுத்­து­மூலம்    காணப்­ப­டு­கின்­றன. கடந்த காலங்­களில்  இவ்­வாறு  காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக  நிய­மிக்­கப்­பட்ட    அமைப்­புக்­க­ளுக்கு  எழுத்­து­மூலம் கிடைக்­கப்­பெற்ற  முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­யவே 19ஆயிரம் என்ற எண்­ணிக்கை    வெளிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. 

தமது உற­வு­களை   தொலைத்­து­விட்டு  பாரிய வேத­னை­யு­டனும் துய­ரத்­து­டனும் வாழ்க்­கையை கொண்­டு ­ந­டத்தும் காணா­மல்­போ­னோரின் உற­வுகள்   சமூக ரீதி­யாக பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். பொரு­ளா­தாரப் பிரச்­சினை, வாழ்­வா­தாரப் பிரச்­சினை,  சமூக பாது­காப்பு பிரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­களால்  இந்தப் பாதிக்­கப்­பட்ட மக்கள் சிக்கித் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.  கண்­ணீரே நிரந்­தர  பதி­லாக  இந்த மக்­க­ளுக்கு  கிடைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.  இந்­நி­லையில்  காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வு­களின்  பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆழ­மாக ஆராய்ந்து  அது தொடர்பில் சரி­யான அணு­கு­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய   அவ­சரத் தேவைகள் காணப்­ப­டு­கின்ற போதிலும்   பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்­தி­ய­டை­யக்­கூ­டிய வகை­யி­லான செயற்­பா­டுகள் இது­வரை இல்­லா­ம­லேயே இருக்­கின்­றன. ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தமது உற­வு­களை காணாமல் ஆக்­கி­விட்டு இன்று நடு­வீ­தியில் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.  உற­வு­களைத்  தேடித்­த­ரு­மாறு  தொடர்  போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். 
ஆனாலும்  அந்த மக்­களின் போராட்­டங்­க­ளுக்கு இது­வரை வலு­வான பதில்­களோ  திருப்­தி­க­ர­மான  விடிவோ கிடைக்­க­வில்லை. காணா­மல்­போ­ன­வர்கள் காணாமல் போன­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள்.  அவர்­களைத்  தேடி அலையும் உற­வுகள் தொடர்ந்து அலைந்­து­கொண்டே இருக்­கின்­றார்கள்.   இந்த மக்­களின்  ஏக்­கத்­திற்கு இது­வரை பதில் வழங்­கப்­ப­டாத சூழலில் நாடோ அடுத்த  ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரா­கி­வ­ரு­கின்­றது.  பிள்­ளை­களை தொலைத்­து­விட்டு தவிக்கும்  பெற்றோர், கண­வனை தொலைத்­து­விட்டு கஷ்­டப்­படும் பெண்,  சகோ­த­ரர்­களைத் தொலைத்­து­விட்டு   துய­ரு­ருகின்­ற­வர்கள் என  மக்கள்   சொல்­லொணா துன்­பங்­களை  எதிர்­கொண்டு வரு­கின்­றனர். ஐக்­கி­ய­நா­டுகள் சபை, சர்­வ­தேச சமூகம்,  சர்­வ­தேச மனித  உரிமை அமைப்­புக்கள் என்­பன   இந்தக் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் பாரிய அழுத்­தங்­களை  பிர­யோ­கித்து வரு­கின்ற போதிலும்  இது­வரை இது தொடர்பில் சரி­யான  தீர்­வுகள்  கிடைக்­கப்­பெ­ற­வில்லை. யுத்தம் 2009ஆம் ஆண்டு   முடி­வ­டைந்­ததும்   விரை­வாக இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.  ஆனால் பத்­து­வ­ரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யிலும் காணா­மல்­போனோர் பிரச்­சினை இன்னும்  பெரும் பிரச்­சி­னை­யா­கவே இருக்­கி­றது.   
பாதிக்­கப்­பட்ட மக்­க­ளினால் தமது வாழ்க்­கையில்  எந்­த­வி­த­மான முடி­வு­க­ளையும் எடுக்க முடி­யாத சூழல் நில­வு­கின்­றது.  இந்த மக்கள்   ஆத­ர­வற்ற தன்­மை­யையே   தொடர்ந்து எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.  2009ஆம் ஆண்டு பல்­வேறு அழி­வு­க­ளுக்கு  மத்­தியில் யுத்தம்   முடி­வுக்கு வந்­தது.   அப்­போது  அந்தக் காணா­மல்­போனோர் விவ­காரம் ஒரு மிகப்­பெ­ரிய பிரச்­சி­னை­யாக காணப்­பட்­டது.  பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக கதறி அழு­து­கொண்­டி­ருந்­தனர்.  தாம் தமது உற­வு­களை பல்­வேறு தரப்­பி­ன­ரிடம்  ஒப்­ப­டைத்­த­தாக  மக்கள் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். 
தமது உற­வு­களை தேடித்­த­ரு­மாறு  ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும்  முன்­னெ­டுத்­தனர். இந்தப் பின்­ன­ணியில்  2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளவில்  இலங்கை அர­சாங்­க­மா­னது  ஜெனிவா மனித உரிமை பேர­வையில்    ஒரு  பிரே­ர­ணையை  கொண்­டு­வந்­தது. அந்தப் பிரே­ரணை வெற்­றி­பெற்­றது. எனினும் அதன்­பின்­னரும் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் சரி­யான தீர்வு கிடைக்­க­வில்லை.   அதனைத் தொடர்ந்து  2010ஆம் ஆண்டு கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு அப்­போ­தைய அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டது. அந்த   நல்­லி­ணக்க ஆணைக்­குழு  வடக்கு, கிழக்கு முழு­வதும் விசா­ரணை அமர்­வு­களை நடத்­தி­யது.  அவற்றில் சாட்­சி­ய­ம­ளித்த பொது­மக்கள்   காணா­மல்­போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி கதறி  அழு­தனர். 
எங்கள்  பிள்­ளை­களை எங்­க­ளிடம் காட்­டுங்கள் என  நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ள­ரிடம் உருக்­க­மா­கவும் மன்­றாட்­ட­மா­கவும் கோரி­ நின்­றனர்.   அதே­போன்று 2013ஆம் ஆண்டு அப்­போ­தைய அர­சாங்­கத்­தினால்    ஓய்­வு­பெற்ற  நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தலை­மையில்   காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரிக்கும்  ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­கு­ழுவும் விசா­ர­ணை­களை   நடத்­தி­வந்த போதிலும்   தீர்­வுகள் கிடைக்­க­வில்லை.   2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்­ததும் அந்த ஆணைக்­கு­ழுவின் செயற்­பாடும்   குறு­கிய காலத்தில் முடி­வுக்கு வந்­தது.  இதற்­கி­டையில் 2012, 2013,  2014ஆம் ஆண்­டு­களில்  இலங்கை தொடர்­பாக  ஜெனிவா மனித உரிமை பேரவை அமெ­ரிக்கா உள்­ளிட்ட   நாடு­க­ளினால் பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அந்தப் பிரே­ர­ணை­க­ளிலும் இந்­தக்­கா­ணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் முக்­கிய ஏற்­பா­டுகள்  உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. 
எப்­ப­டி­யி­ருப்­பினும் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இந்த விட­யத்தில் ஒரு  விடிவு கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்பு  அனைவர் மத்­தி­யிலும் காணப்­பட்­டது.   குறிப்­பாக  2015ஆம் ஆண்டு   ஐ.நா. மனித உரிமைப்பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை  தொடர்­பாக அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட  பிரே­ர­ணைக்கு    இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. 
அந்த  பிரே­ர­ணையில்   காணா­மல்­போனோர் அலு­வ­லகம்  மற்றும் இழப்­பீட்டு அலு­வ­லகம் என்­பன நிறு­வப்­ப­ட­வேண்டும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. குறித்த பிரே­ரணை 2017ஆம், 2019ஆம் ஆண்­டு­களில் மீண்டும்    புதுப்­பிக்­கப்­பட்டு நீடிக்­கப்­பட்­டன. தற்­போது 40/1 என்ற  பேரில் குறித்த ஜெனிவா பிரே­ரணை 2021 ஆம் ஆண்டு வரை   நடை­மு­றையில் இருக்­கி­றது.  அதன்­படி   காணா­மல் ­போனோர் அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்டு அதற்கு ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்டு   அதன் தொழிற்­பாடு ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதே­போன்று இழப்­பீட்டு அலு­வ­ல­கமும்  நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 
காணா­மல்­போனோர் அலு­வ­லக நிய­மனம் தொடர்பில் நேர்­மறை மற்றும் எதிர்­ம­றை­யான கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. இதன்­மூ­ல­மாக  ஏதா­வது ஒரு தீர்வை அடை­யலாம் என்ற நிலைப்­பாடும் இதில்  எந்தப் பயனும் இல்லை என்ற  நிலைப்­பாடும் கடந்த காலங்­களில் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. எனினும் இதில் மக்கள் முழு­மை­யாக நம்­பிக்கை   வைத்­த­தாக தெரி­ய­வில்லை. 
 ஒரு சந்­தர்ப்­பத்தில் இந்த காணா­மல்­போனோர் அலு­வ­லகம் குறித்து  எம்­முடன் தகவல் பகிர்ந்­து­கொண்ட அதன் ஆணை­யாளர் நிமல்கா பெர்­னாண்டோ, காணா­மல்­போனோர் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கவே  எமது அலு­வ­லகம்  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எம்மைப் பயன்­ப­டுத்தி எம்­மீது நம்­பிக்கை வைத்து உங்கள் பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொள்­ளுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். 
அதே­போன்று முன்­னைய அர­சாங்­கத்தில் நிய­மிக்­கப்­பட்ட காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் தலை­வ­ராக இருந்த ஓய்­வு­பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கமவும்  பாதிக்­கப்­பட்ட  குடும்­பங்­க­ளுக்கு சுமார் 5 இலட்சம் ரூப­ாவரை இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென    கோரிக்கை விடுத்­தி­ருந்தார். 
இந்த நிலை­யி­லேயே தற்­போது  பாதிக்­கப்­பட்ட மக்­களின்   போராட்­டங்கள்  தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.  ஆனால்  கடந்த பத்து வரு­டங்­க­ளாக இவ்­வா­றான பல்­வேறு படி­மு­றைகள் கடந்­து­சென்­றுள்­ள­போ­திலும் காணா­மல்­போ­னோரின் உற­வு­க­ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்­திகள் எதுவும் கிடைக்­க­வில்லை.  தொலைந்­து­போன தமது  உற­வு­களைத்   தேடி அலையும் பலர்  அண்­மைக்­கா­ல­மாக  உயி­ரி­ழந்து வரு­வ­தையும் காண முடி­கின்­றது. கடந்­த­வாரம் கூட தாயொ­ருவர்    கால­மா­கி­யி­ருந்தார்.   இந்­நி­லையில் இந்தப்  பிரச்­சி­னையைத் தீர்­வுகள் இன்றி இழுத்­த­டித்­
துக்­கொண்டு செல்­வ­தற்கு இட­ம­ளிப்­பதா அல்­லது  இந்தப் பிரச்­சினை தொடர்பில் விரை­வாக   தீர்­மா­னங்­களை எடுப்­பதா என்­பது  குறித்து அர­சாங்கம் சிந்­திக்­க­வேண்டும். காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில்  கருத்து  வெளியிட்­டுள்ள     காணா­மல்­போ­னோரின் உற­வுகள் அமை­யத்தின் பிர­தி­நிதி  ஒருவர் முல்­லைத்­தீவில் கடந்த சனிக்­கி­ழமை காணா­மல்­போன தனது மகனைத் தேடி தொடர்ச்­சி­யாகப் போரா­டி­வந்த தாயொ­ருவர் மர­ண­ம­டைந்­து­விட்டார். எமது அமை­யத்தின் பதி­வு­க­ளின்­படி இவ்­வாறு போராடி வந்­த­வர்­களில் மர­ணித்த 31 ஆவது நபர் அவ­ராவார். நாம் காணா­மல்­போன எமது உற­வு­க­ளைத்­தேடிப் போரா­டி­வரும் நிலை­யிலும், இது­வ­ரையில் எவ்­வித தீர்­வு­களும் கிட்­ட­வில்லை. ஆனால் போராட்­டத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் வயது முதிர்ந்து, நோய்­வாய்ப்­பட்டு, தமது உற­வு­களைத் தொலைத்த ஏக்­கத்­துடன் மர­ண­ம­டை­கி­றார்கள்   என்று கூறி­யுள்ளார். 
அத்­துடன் இவ்­வி­ட­யத்தில் தமிழ்த் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்தால் நிச்­ச­ய­மாக அர­சாங்­கத்தின் மீது ஒரு அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க முடியும். அவர்­களின் ஒற்­று­மையும், பத­வியும் தான் அர­சுக்கு எதி­ரான ஆயுதம் என்­பதை உண­ர­வேண்டும். உரி­மைகள் என்றும், அதி­கா­ரங்கள் என்றும் மேடை­க­ளிலே பேசு­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களால் ஏன் ஒன்­றி­ணைந்து செயற்­பட முடி­யாமல் இருக்­கின்­றது? இந்த அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சர்­வ­தே­சத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத நீதியை பிள­வு­பட்ட தமிழ் அர­சி­யல்­வா­தி­களால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யுமா? எனவே அவர்கள் ஒரு­மித்து, ஒற்­று­மை­யுடன் எமது பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்து அர­சாங்­கத்­திடம் பேரம் பேச­வேண்டும் என்றும்   காணா­மல்­போ­னோரின் உற­வுகள் அமைப்­ப­கத்தின் பிர­தி­நிதி குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 
அந்­த­வ­கையில் தமிழ் மக்கள் பிர­தி­நி­தி­க­ளி­டத்தில் தமக்­கான நீதியைப் பெறு­வதில்  ஒற்­றுமை குறை­வாக இருக்­கின்­றது என்று காணா­மல்­போ­னோரின் உற­வுகள்  கரு­து­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.  இந்த விட­யத்தில் உண்­மையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின்  பக்கம் இருந்து அணு­கு­மு­றையை முன்­னெ­டுப்­பது அவ­சி­ய­மாக உள்­ளது. தற்­போது நாடு அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.  பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் யார் என்­பது தொடர்பில் விவா­தங்­களும் பேச்­சு­வார்த்­தை­களும் ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டன.  எனவே இந்தக் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் தலை­யிட நிச்­சயம்  தென்­னி­லங்கை அர­சியல் கட்­சிகள் தயங்கும் என்­பதை   மறுக்க முடி­யாது. காரணம்   தற்­போ­தைய சூழலில் எந்தப் பிரச்­சி­னையில் தலை­யிட்டு தென்­னி­லங்­கையில்  தமது வாக்கு வங்­கி­களை வீழ்ச்­சிக்­குட்­ப­டுத்த  தென்­னி­லங்கை கட்­சிகள்   விரும்­பப்­போ­வ­தில்லை. எனவே    காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் பிர­தான கட்­சி­களின் தலை­யீ­டு­களும் அணு­கு­மு­றை­களும் எந்­த­ள­வு­தூரம் சாத்­தி­ய­மாகும் என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அதா­வது காணா­மல்­போ­னோரின் உற­வு­களின் துயரம் மட்டும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அவர்­க­ளுக்கு விடிவு கிட்­டாத நிலைமை தொடர்­கி­றது.
இந்த மக்­க­ளுக்கு  தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற  உண்மை   அறிந்­து­கொள்­வ­தற்­கான முழு­மை­யான  உரிமை காணப்­ப­டு­கின்­றது. அந்த உரி­மையை   யாரும் கேள்­விக்­குட்­ப­டுத்த முடி­யாது.   அது ஒரு சர்­வ­தேச  உரி­மை­யாகும்.  எனவே  அவர்­களின் உணர்வைப்  புரிந்து     அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும்.   அர­சாங்கம்  பல்­வேறு சர்­வ­தேச சாச­னங்­களில் கைச்­சாத்­திட்­டி­ருக்­கின்­றது. எனவே தமது பிர­ஜைகள் தொடர்­பான பாது­காப்­புசார் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதனை தட்டிக்கழித்து யாரும் செயற்பட முடியாது. தென்னிலங்கையில் அரசியல் இருப்புக்கு   நெருக்கடி ஏற்படும் என்ற காரணத்தை முன்வைத்து    காணாமல்போனாரின் பிரச்சினையை ஆராயாமல் இருக்கக்கூடாது. எனவே இந்த விடயம் தொடர்பில் ஒரு சரியான அணுகுமுறை அவசியமாகும்.  தற்போது தொழில்பட்டு வருகின்ற காணாமல்போனோர் அலுவலகம்   மக்கள் மத்தியில்  மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில்  தமது பணிகளை முன்னெடுக்கவேண்டும்.  யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்கள் பறந்துவிட்டன. ஆனால்  மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.  காணாமல்போனோர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாமல் இருக்கின்றது.  எனவே தொடர்ந்தும் தாமதம் வேண்டாம். காணாமல்போனோரின்  உறவுகள் தனிநாட்டைக்  கோரவில்லை. யாரையும் தண்டிக்கவேண்டும் என்றும் கோரவில்லை, மாறாக  தொலைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை தருமாறு     கோருகின்றனர்.   அதனை  செய்துகொடுக்கவேண்டியது அதிகாரத்தில் இருப்போரின் முக்கிய கடமையாகும்.  குறிப்பாக   தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில்  அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே   அழுத்தங்களை பிரயோகித்து   தமது பிரச்சினைக்கு   
விடிவை பெறலாம் என  பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றனர். எனவே  அந்த மக்களின் உணர்வுகளை  புரிந்து விரைவாக அவர்களுக்கு ஒரு  விடிவைப் பெற்றுக்கொடுத்து அந்த மக்களின் வாழ்க்கையில்   புதிய எதிர்பார்ப்பை  உருவாக்கவேண்டியது  அவசியம் என்பதே  அனைவரதும்  நோக்கமாகும். 
ரொபட் அன்­டனி - நன்றி வீரகேசரி