சிட்னியில் திருக்குறள் அனைத்துலக மாநாடு

.
மேற்கு சிட்னியில், பல்கலையில் திருவள்ளுவர் சிலையும் , பல்கலையில் தமிழ்  இருக்கையும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர்  ஹியூ மெக் டெர்மெட்   உறுதி.


‘இலக்கியங்களில் ஊடாக  அமைதியும் நல்லிணக்கமும்’ என்ற பரந்த தலைப்பின் கீழ் ‘திருக்குறள் ஓர் அனைத்துலக இலக்கியம் ‘ என்ற சிறப்புத் தலைப்பில் தமிழ் வளர்ச்சி மன்றம் , சிட்னி  ஷ்ரேமாயா அமைப்பு, அனைத்துலக திருக்குறள் அமைப்பு மொரீஷியஸ்ஆசியவியல் கல்வி நிறுவனம் சென்னை ஆகிய அமைப்புக்கள் ,  சிட்னி பல்கலைக் கழகத்துடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கம்  ஒன்றை நடத்தியது . ஜூலை மாதம் 31 காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை  சிட்னி பல்கலைக் கழக , சட்டத்துறை அரங்கில் அனைத்துலக அறிஞர்களும் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிற மாநில அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

வான் புகழ் கொண்ட வள்ளுவத்தை அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான உலகப் பொது மறையாக , ஆய்வு நோக்கில் உலக அளவில் தமிழர் அல்லாதோர்க்கும்  அறிமுகப்படுத்தும் முயற்சி இது ஆகும்.
இன்னும் ஒரு படி மேலே போய் திருக்குறளை யுனெஸ்கோவில் அனைத்துலக இலக்கியமாக அங்கீகரிக்க முயற்சிகள் மேற் கொண்டிருக்கும் மொரிஷீயசில் உள்ள அனைத்துலக திருக்குறள் அமைப்பின் தலைவர் ஆறுமுகம் பரசுராமன் நிகழ்வில் இணைந்து சிறப்புரை ஆற்றினார். . சிட்னிப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஸ்பென்சர் அறிமுக உரை ஆற்றினார் ஷ்ரேமேயா

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு , காலை 9.30 மணிக்கு நாட்டுக்கு வரவேற்பு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சிட்னி பல்கலைக்கழகத்தில் இனிதே துவங்கியது. ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர் அனைவரையும் இந்த நாட்டிற்கு வரவேற்றுப் பேசினார்.
உலக அமைதி அமைப்பின் ஆஸ்திரேலிய பொறுப்பாளர்  திருமிகு விக்டோரியா ஷார்ப் அமைதிக்கானத் விளக்கை ஏற்றி வைத்தார்.
மாநாட்டின் புரவலர் மற்றும் ஷ்ரேமாயா அமைப்பின் இணை நிறுவுனர் திரு நிமலன் இரத்தினம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவரும் , மாநாட்டு இயக்குனருமான முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மாநாடு பற்றிய விளக்க உரை  ஆற்றினார் .
சிட்னி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர்  மைக்கேல் ஸ்பென்ஸ் தலைமை  உரையாற்றினார்.

மாநாட்டின் சிறப்பம்சமாக சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்  அடங்கிய ஆய்வேடு ஒன்றினை   சிட்னி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர்  மைக்கேல் ஸ்பென்ஸ்  வெளியிட முதல்  பிரதியை இந்திய தூதரக முக்கிய பிரதிநிதி சந்துரு அப்பர் பெற்றுக் கொண்டார்.


மாநாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் துர்கா ஓவன் நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர்  மற்றும் இந்திய தூதுவர் அனுப்பிய  வாழ்த்துச் செய்திகளை  வாசித்தார்.
தொடர்ந்து , நியூ சவுத் வேல்ஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஹியூ மெக் டெர்மட் திருக்குறளில் அமைதி மற்றும் நல்லிணக்கம்’ என்ற மையக் கருத்துரையை ஆஸ்திரேலியரான சிட்னி லேபர் கட்சி நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் ஹியூ மெக்டெர்மட்  (Dr Hugh McDermott MP ) சிறப்புரை ஆற்றினார். திருக்குறளின் பெருமையைப் பற்றி ஆஸ்திரேலியரான அவர் ஆற்றிய உரை எல்லோரையும் வியக்க வைத்தது. சிட்னியில் , மேற்கு சிட்னி பல்கலைக்கழக் வளாகத்தில் திருவள்ளுவர் நிலை ஒன்றை நிறுவுவதற்கும், பல்கலையில் தமிழ்  இருக்கை ஒன்றை அமைப்பதற்கும் முயற்சி எடுத்திருப்பதாகவும் விரைவில் வள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும்  உறுதியளித்தார்.
அனைத்துலக திருக்குறள் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் பரசுராமன் அவர்கள் திருக்குறளும் யுனஸ்கோவும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அத்துடன் மாநாட்டின் காலை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

மூன்று வெவ்வேறு அறைகளில் பேராளர்கள் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அதன் முடிவில் அவர்களுக்கு சான்றிதழ்பரிசுகள் வழங்கப்பட்டது
திருக்குறளில்,  அமைதி  மற்றும் நல்லிணக்கம் சார்ந்த குறள்களை அடைப்படையாகக் கொண்டு தமிழ் வளர்ச்சி மன்றத்தின்செயலாளர் அன்பு ஜெயா தலைமையில்  ,கவிதா ஜெயக்குமார் ஆகியோர்  ஒழுங்கு செய்திருந்த ஓவியப்போட்டி மற்றும் ,பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன. தன்னார்வப் பணி செய்தவர்கள் அனைவருக்கும்  சான்றிதழ், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பரிசுகளை ஸ்ரீஸ் பொன்னையாபிள்ளை , திருமதி ராஜ் கொன்சலாகாரோ, வாணி சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர்.

  

மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக, இலங்கை வல்பொல ராகுல கல்வியகத்தின் நிர்வாக இயக்குனர் , வணக்கத்துக்குரிய தம்மனானந்தா தேரோ அவர்கள் திருக்குறளில் அமைதி  மற்றும் நல்லிணக்கம் மற்றும் பௌத்தம் என்ற தலைப்பில் நிறைவு உரை வழங்கினார்.
விழாவுக்கு மகுடம் சூட்டுவதாக தமிழுக்கும் தமிழர்க்கும் பணியாற்றிய திரு திரு நந்த குமார் அவர்களுக்கு தமிழ்த்தாய்  விருதும் , திரு மாணிக்கம் அருச்சுனமணி அவர்களுக்கு திருவள்ளுவர் விருதும் சிட்னிப்பல்கலைக் கழக துணை வேந்தரால் வழங்கப்பட்டன.

சிட்னி பல்கலைக்கழக அமைதித் துறையின் கல்விப் பொறுப்பாளர் திரு ஆபிரகாம் குடனின் நன்றி உரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. அரங்கு நிறைய மக்கள் கலந்து சிறப்பித்தது மானாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.நிகழ்ச்சிக்கு  வருகை தந்திருந்த தமிழ்  மூத்த குடிமக்கள்  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை  தமிழ் வளர்ச்சி மன்ற உறுப்பினர்கள் ஜெய்க்குமார் மற்றும் ஷண்முகப்பிரியன் ஆகியோர் தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து சிறப்புற கவனித்து நடாத்திய பொறுப்பு பராட்டுதற்குரியது,2 comments:

Anonymous said...

Exceptional post however I was wondering if you could
write a litte more on this topic? I'd be very thankful if
you could elaborate a little bit more. Many thanks!

Anonymous said...

This post is invaluable. When can I find out more?