உலகச் செய்திகள்


பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வாழ்த்து

வாழ்த்து தெரிவித்தோருக்கு  தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன?

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே

நியூ­ஸி­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் மோச­மான பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள்

மூடிமறைக்கும் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் மறுப்பு!

வடகொரிய கப்பலை கைப்பற்றி வைத்துள்ளமை இருதரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படத்தும்:வட கொரிய தூதுவர்

 "ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்"

 பிரான்சில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்

 மத்திய கிழக்கிற்கு படைகளை அனுப்ப அமெரிக்க முடிவு- பாரிய ஆபத்து என்கிறது ஈரான்

மோடி பிரதமராகக் கிடைக்கப்பெற்றது இந்தியர்கள் செய்த அதிர்ஷ்டம் - ட்ரம்ப்


பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி


 23/05/2019 மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. 
அதை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி மே 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. 
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 
273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது. 
வாக்குப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு  எண்ணிக்கை ஆரம்பமாகியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது. 
காலை 8.30 மணிக்கு அதாவது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது. 
9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன. 
10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது. 
காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது. மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன. 
காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க நேற்று மாலை வரை ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. 
காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன. 
பிற்பகல் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. 
பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது. 
இந்த தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மீண்டும் இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது. 
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 
421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது. 
பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை பா.ஜனதா கூட்டணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது. 
எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி 









மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வாழ்த்து

23/05/2019 இந்திய பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். 
நமது நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் புதிதாக அமையும் ஆட்சியில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதி பேச்சுக்கு நல்ல வாய்ப்பு அமையும் என்று கடந்த மாதம் இம்ரான் கான் தெரிவித்தார். 
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் சுமார் 350 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன், அமைதியும் முன்னேற்றமும் வளங்களும் நிறைந்த தெற்காசியாவை உருவாக்க அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 










வாழ்த்து தெரிவித்தோருக்கு  தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன?

23/05/2019 இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும் தனித்தனியே தனது நன்றிகளையும் பதில்களையும் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த இந்தியாவின் 17 ஆவது பாராளுமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரும் மற்றும் அயல் நாட்டு அரசியல் தலைவர்கள் சிலரும் குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது டுவிட்டா் பக்கத்தில் தனித்தனியே நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே

24/05/2019 பிரிட்டன் பிரதமர் திரேசா மே தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற  பிரிட்டன் அரசு முடிவு செய்தது. 
ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன்  பிரிட்டன் பிரதமர் திரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால்  பிரிட்டன் பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆளும் பழமைவாத  கட்சி உறுப்பினர்களே திரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்தனர்.
 இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள திரேசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3 ஆம் திகதி நான்காவது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.
 இந்த  வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.
இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான திரேசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் அமைச்சர் ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து திரேசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7 ஆம் திகதி இராஜினாமா செய்வதாக திரேசா மே அறிவித்துள்ளார்.
லண்டன் நகரில் டவுனிங் வீதியிலுள்ள உள்ள தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த திரேசா மே, 
‘பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கௌரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











நியூ­ஸி­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் மோச­மான பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள்

24/05/2019 நியூ­ஸி­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் மோச­மான  பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள், அத்­து­மீ­றல்கள் மற்றும் கேலிப்­பே­ச்சுகள்  இடம்­பெற்று வந்­துள்­ள­தாக  புதிய சுயா­தீன விசா­ர­ணை­யொன்று தெரி­விக்­கி­றது.
இது தொடர்பில்  அந்­நாட்டு பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் திரேவர் மெயிலார்ட் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தெரி­விக்­கையில்,  இது சகிப்­புத்­தன்மை காண்­பிக்க முடி­யாத தீவிர  நிலை­மை­யாகும் எனக் குறிப்­பிட்டார்.
பாரா­ளு­மன்ற எல்­லைக்குள்  பணி­யாற்றும் 14 பேர் தாம் அங்கு பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக  தெரி­வித்­துள்­ள­தாக அந்த 120 பக்க விசா­ரணை அறிக்கை தெரி­விக்­கி­றது.
அத்­துடன்  ஒரே மனி­தரால்  3 மோச­மான பாலியல் தாக்­குதல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­தாக  அந்த அறிக்கை  கூறு­கி­றது.
மேற்­படி குற்­றச்­சாட்டுக்­குள்­ளான தனி­நபர் தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தில் பணி­யாற்றிக் கொண்­டி­ருப்­ப­தாக தான் நம்­பு­வ­தாக திரேவர் மெயிலார்ட் கூறினார்.
இந்­நி­லையில் அந்­நாட்டு பிர­தமர் ஜசிந்தா அர்டேர்ன் இது தொடர்பில் கலந்­து­ரை­யாட திரேவர் மெயி­லார்ட்டு­டனும் ஏனைய கட்சி உறுப்­பி­னர்­க­ளு­ட­னு­மான கூட்­ட­மொன்றை  கூட்ட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. 
மக்கள்  கௌர­வத்­துடன் நடத்­தப்படும் இடத்தின் பாது­காப்பை  உறு­திப்­ப­டுத்த  வேண்டும் என்­பதே பாரா­ளு­மன்ற சபா­நா­யகரின்  நோக்­க­மா­க­வுள்­ள­தாக அவர் குறிப் பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள்   தமக்கு நடந்த அநீதி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வது அவர்களது  சொந்த விருப்பம் என அவர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 











மூடிமறைக்கும் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் மறுப்பு!

24/05/2019 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மூடி மறைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­வ­தாக  ஜன­நா­யகக் கட்சித் தலை­வர்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்ள நிலையில் அதற்கு ட்ரம்ப்  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.
நான் மூடி மறைக்கும் நட­வ­டிக்கை  எதிலும் ஈடு­ப­ட­வில்லை என அவர்  வெள்ளை மாளி­கையில் ஆற்­றிய உரையின் போது தெரி­வித்தார்.
அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையின் சபா­நா­யகர் நான்ஸி பெலோஸி டொனால்ட் ட்ரம்­பிற்கு எதி­ராக கண்­டனத் தீர்­மானம் கொண்டு வரும் முக­மாக ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த சக உறுப்­பி­னர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்த நிலை­யி­லேயே ட்ரம்பின் மேற்­படி விமர்­சனம் வெளியா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 
ஆஜ­ரா­வ­தற்­கான ஆணை­களை  அலட்­சி யம் செய்­தமை,  ஆவ­ணங்­களை நிறுத்தி வைத்­தமை மற்றும் தற்­போ­தைய மற்றும் முன்னாள் ஆலோ­ச­கர்­களின்  சாட்­சி­யங்­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போட்­டமை  என்­ப­ன­வற்றின் மூலம் ட்ரம்ப் பாரா­ளு­மன்ற  விசா­ர­ணை­க­ளுக்கு ஊறு விளை­விக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் டொனால்ட் ட்ரம்ப்   நான்ஸி பெலோஸி மற்றும்  செனட் சபை தலை­வ­ர் ஆகி­யோ­ருடன் குறு­கிய நேர   சந்­திப்பை மேற்­கொண்­ட­மைக்கு ஒரு சில நிமிட நேரத்­தி­லேயே  தான் எத­னையும் மூடி மறைக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­ட­வில்லை என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
ஜன­நா­யக  கட்சி தலை­வர்­க­ளு­ட­னான அந்த சந்­திப்பின் போது  ட்ரம்ப்  எவ­ரு­ட னும் கைகு­லுக்கிக் கொள்­ளவோ அன்றி  அமர்ந்து  உரை­யா­டவோ முயற்­சிக்­க­வில் லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
தனக்கு எதி­ரான விசா­ர­ணை­களை ஜன­நா­யகக் கட்­சி­யினர் முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என மட்டும் தெரி­வித்து விட்டு எது தொடர்­பிலும்  கலந்­து­ரை­யா­டாது சந்­திப்பு இடம்­பெற்ற அறையை விட்டு  ட்ரம்ப் வெளியேறியுள்ளார். 
இந்­நி­லையில் வெள்ளை மாளி­கையில் ஆற்­றிய உரையின் போது ட்ரம்ப், "ஜன­நா­யகக் கட்­சி­யி­னரால் மேற்­கொள்­ளப்­படும் போலி­யான விசா­ர­ணை­க­ளுக்கு நான்  கண்­ட­னத்தைத் தெரி­விக்­கி­றேன்" என்று கூறினார். தனது அர­சியல் எதி­ரா­ளிகள்  தனக்கு எதி­ராக  கண்­டனத் தீர்­மா­னத்தைக் கொண்டு வர அணி திரண்டுள்ளதாக  அவர் குற்றஞ்சாட்டினார். ஜனநாயகக் கட்சியினர் தனக்கு எதிரான விசாரணைகளை கைவிடாத  வரை தான்  அவர்களுடன் அரசாங்க கொள்கைகள் குறித்து  கலந்துரையாடப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 











வடகொரிய கப்பலை கைப்பற்றி வைத்துள்ளமை இருதரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படத்தும்:வட கொரிய தூதுவர்

23/05/2019 அமெ­ரிக்கா வடகொரிய சரக்குக் கப்பலை மூர்க்­கத்­த­ன­மான முறையில் கைப்­பற்றி வைத்­துள்­ளமை அமெ­ரிக்க மற்றும் வட கொரிய உற­வு­களின் எதிர்­கா­லத்தில்  பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடியது என ஐக்­கிய நாடுகள் சபைக்­கான வட கொரிய தூதுவர்  கிம் சோங்  எச்­ச­ரித்­துள்ளார்.
அந்த சரக்குக் கப்­பலை அமெ­ரிக்கா உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என அவர்  நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாடொன்றில் கலந்து கொண்டு  கருத்து வெளியி­டு­கையில்  வலி­யு­றுத்­தினார்.
வட கொரி­யாவின் இரண்­டா­வது மிகப் பெரிய சரக்குக் கப்­ப­லான வைஸ் ஹொன ஸ்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெரு­ம­ளவு நிலக்­க­ரியை ஏற்றிச் சென்றவேளை இந்­தோ­னே­சி­யாவால் முதலில் தடுத்து வைக்­கப்­பட்­டிருந்தது. 
இந்­நி­லையில் அந்தக் கப்பல் ஐக்­கிய  நாடுகள் தடையை மீறி  நிலக்­க­ரியை ஏற்றிச் சென்­றதால் அதனை கைப்­பற்­றி­யுள்­ள­தாக  அமெ­ரிக்கா கடந்த 9 ஆம் திகதி அறி­வித்­தி­ருந்­தது.
வட கொரி­யா­வு­ட­னான உற­வுகள் தொடர் பில் மென்­மை­யான போக்கு கடை­பி­டிக்­கப்­படும் தரு­ணத்தில் இத்­த­கைய நடவடிக்கையொ­ன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது இதுவே முதல் தடவை­யாகும். 
சரக்குக் கப்பல் கைப் ­பற்­றப்­பட்­டது முதற்­கொண்டு அமெரிக்கா வின் ஒவ்­வொரு நகர்­வையும் வடகொரியா உன்­னிப்­பாக அவதானித்து வரு­வ­தாக கிம் சோங் தெரி­வித்தார்.
அந்தக் கப்­பலை கைப்­பற்றும் நட­வ­டி க்கை வடகொரியா மீது ஆகக் கூடிய அழுத்­தத்தைப் பிர­யோ­கித்து அந்த நாட்டை மண்டியிடச் செய்யும் நோக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக  அவர் கூறினார்.
அமெ­ரிக்கா தனது மூர்க்­கத்­த­ன­மான  செய ற்­பா­டுகள்  எதிர்­கால முன்­னேற்­றத்தில்  ஏற்­ப­டுத்தக் கூடிய விளை­வுகள் குறித்து  சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கிம் சோங் மேலும் தெரி­வித்தார். அந்த சரக்குக் கப்­பலை கைப்­பற்­றி­யுள்­ளமை வடகொரியா ­வுக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் தீவிர விரோத மனப்­பான்­மையின் வெளிப்­பா டொன்றாக உள்­ள­தாக  அவர் கூறி­னார்.
அமெ­ரிக்கா  சர்­வ­தேச சட்­டத்­தையும் நாடு­க­ளுக்கும் அவற்றின் உடை­மை­க­ளுக்கும் எதி­ராக  பிற நாடுகள்  சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தி­லி­ருந்து பாது­காப்பு அளிக்கும் 2004 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் உடன்­ப­டிக்­கை­யையும் மீறி வரு­வ­தாக அவர் குற்றஞ்சாட்டினார். 
இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ கட்­டரெஸ்,  கொரிய தீப­கற்­பத்­தி­லான ஸ்திரத்தன்­மைக்கு பங்களிப்புச் செய்யக் கூடிய அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை  முன்னெ­டுக்க அழைப்பு விடுத்­துள்ளார். ஆனால் அந்நடவடிக்கைகள் எவை என்­பது தொடர்பில் வின­வப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளிக்க அவர்  மறுத்­ துள்ளார்.  நன்றி வீரகேசரி 










 "ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்"

20/05/2019 ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் பல்வேறு பொருளாதார  தடைகளை ட்ரம்ப் விதித்து வருகிறார். 
இதனால் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. 
வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு  நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வருகிறது. 
இந்த நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும் என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி வீரகேசரி 











 பிரான்சில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்

25/05/2019 பிரான்சின் லயன் நகரில் இடம்பெற்ற பார்சல் குண்டுவெடிப்பில்13 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான லயனில் மக்கள் அதிகமாக காணப்படும் வீதியொன்றில் வெதுப்பகத்திற்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது எட்டு வயது சிறுமி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நகரின் வரலாற்று பழமை வாய்ந்த விக்டர் கியுகோ வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரிய சத்தமொன்று கேட்டது என அருகில் உள்ள ஹோட்டலொன்றின் வரவேற்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பதற்றமடைற்து ஓடுவதையும் பல அலறல்களையும் கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சைக்கிளில் அந்த பகுதிக்கு வரும் நபர் ஒருவர் குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து தகவல்களை கோரியுள்ளனர்  நன்றி வீரகேசரி 










மத்திய கிழக்கிற்கு படைகளை அனுப்ப அமெரிக்க முடிவு- பாரிய ஆபத்து என்கிறது ஈரான்

25/05/2019 மத்திய கிழக்கிற்கு 1500 படையினரையும் போர் விமானங்களையும் அனுப்ப தீர்மானித்தள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
1500 படையினரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளி;ல ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போது மோதலில் ஈடுபடவிரும்பவில்லை என நான் கருதுகின்றேன்,அவர்கள் எங்களுடன் மோதலில் ஈடுபடவிரும்பவில்லை என நினைக்கின்றேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மத்திய கிழக்கில் பாதுகாப்பை கொண்டிருக்க விரும்புகின்றோம் சிறிய எண்ணிக்கையிலாக துருப்பினரை அனுப்ப தீர்மானித்துள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1500 படையினரில் ஏவுகணை பொறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும்,வான்வெளி கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களும் பொறியியலாளர்களும்  இடம்பெறவுள்ளனர்.போர் விமானங்களையும் அமெரிக்க அனுப்பவுள்ளது
 ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலா முறுகல் நிலை கடந்த மூன்று வாரங்களாக தீவிரமடைந்துள்ள நிலையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கிற்கு மேலதிக படையினரை அனுப்பும் அமெரிக்காவின் முடிவு உலக சமாதானத்திற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தங்கள் மோதல் கொள்கையை நியாயப்படு;த்துவதற்காகவும் வளைகுடாவில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவும் ஈரானிற்கு  குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னம் அதிகரிப்பது மிகவும் ஆபத்தான விடயம் இது சர்வதேச அமைதி பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 










மோடி பிரதமராகக் கிடைக்கப்பெற்றது இந்தியர்கள் செய்த அதிர்ஷ்டம் - ட்ரம்ப்

25/05/2019 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 'மாமனிதர்" என்றும், 'மகத்தான தலைவர்" என்றும் வர்ணித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரைப் பிரதமராகக் கொண்டிருப்பதற்கு இந்திய மக்கள் அதிஷ்டம் செய்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வெள்ளியன்று தனது டுவிட்டர் தளப்பதிவில், மோடி பெற்றிருக்கும் பெரிய அரசியல் வெற்றி குறித்து அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாகவும், மகத்தான தலைவரான அவர் பிரதமராகக் கிடைக்கப்பெற்றுள்ளமை இந்தியர்கள் செய்த அதிஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 டுவிட்டர் பதிவை செய்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், 'சற்று முன்னர் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு எமது நாட்டின் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தேன். அவர் ஒரு பெரிய தேர்தலுக்கு முகங்கொடுத்தார். அவர் எனது நல்லதொரு நண்பர். இந்தியாவுடன்  நாம் நல்ல உறவுகளைக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறினார்.   நன்றி வீரகேசரி 







No comments: