புத்தர் மதம் பேசவில்லை

புனித வழிதான் சொன்னார்
சித்தர் நிலை தானுற்றார்
சொத்தையெலாம் துறந்து நின்றார்
எத்தனையே ஆசை வரும்
எல்லாமே அடக்கு என்றார்
இன்ப நிலை எய்துதற்கு
இச்சையினை விலக்கு என்றார் !
மதம் காணா புத்தர்தமை
மதங்காண வழி சமைத்தார்
மதம் என்னும் மாயைக்குள்
மகான் தன்னை நுழைத்துவிட்டார்
அவர் பெயரால் பலவற்றை
ஆக்கியவர் பெயர் கொடுத்து
அவர் வெறுத்த ஆட்சியிலே
அவர் பெயரை அமர்த்திவிட்டார்
காவி உடை என்றவுடன்
கையெடுத்து வணங்கி நின்றோம்
காவி உடை கண்ணியத்தை
நாறி நிற்கச் செய்கின்றார்
சத்தியத்தை காத்த புத்தர்
சந்தி எல்லாம் சிலையாக
சதி எல்லாம் சகிக்காமால்
சப்தம் இன்றி அமர்ந்துள்ளார்
பஞ்சசீலம் சொன்ன புத்தர்
பரி தவித்து நிற்கின்றார்
பஞ்சசீலம் அவர் நோக்கில்
படும் பாடோ பரிதாபம்
அட்ட சீலம் எல்லாமே
கெட்ட வழி போகிறது
அந்த மகான் புத்தபிரான்
அமைதி காத்து அமர்ந்துள்ளார் !
No comments:
Post a Comment