16/03/2019 நியூசிலாந்தில் முஸ்லீம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கைதுசெய்யப்பட்டுள்ள நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.
தீவிரவாத போக்குடைய வலதுசாரி பயங்கரவாதியின் தாக்குதல் குறித்து நாங்கள் கடும் சீற்றமடைந்துள்ளோம், என தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் நாங்கள் எந்த வித தயக்கமும் இன்றி இதனை கண்டிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
அவுஸ்திரேலியர்கள் எவரும் கொல்லப்பட்டுள்ளனரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment