தமிழ் சினிமா - சார்லீ சாப்ளின் 2 திரை விமர்சனம்

.
பிரபுதேவா, பிரபு 90’ஸ் கிட்ஸ் பேவரட் நடிகர்கள். இவர்கள் இருவரும் பெரும்பாலும் காமெடி படங்களில் தான் நடிப்பார்கள், அந்த வகையில் இருவரும் நடித்து செம்ம ஹிட் அடித்த படம் சார்லீ சாப்ளின். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வர, இந்த படம் முந்தைய பாகம் போல் ஹிட் அடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

பிரபுதேவா மேட்ரி மோனி வைத்து நடத்துபவர். ஊருக்கே திருமணம் செய்யும் இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஆதங்கம் அவருடைய குடும்பத்திற்கு இருக்கிறது.
அந்த நேரத்தில் பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை பார்த்தவுடன் பிரபுதேவா காதலில் விழுகின்றார். ஒரு சில கலாட்டாவிற்கு பிறகு இவர்கள் ஒன்று சேர்கிறார்கள்.
அந்த நேரத்தில் பிரபுதேவா நண்பர் நிக்கி ஒருவரை முத்தமிடும் வீடியோவை அவரிடம் காட்ட, பிரபுதேவா வீடியோ காலில் செம்ம திட்டு திட்டுகின்றார்.
அதை தொடர்ந்து தான் தெரிகிறது. அந்த முத்தம் கடலில் விழுந்த ஒருவர் உயிரை காப்பாற்ற கொடுத்தது என்று, அதே நேரத்தில் அந்த வீடியோ மெசேஜை நிக்கி இன்னும் பார்க்கவும் இல்லை, அதற்குள் அந்த மெசேஜை அழிக்க பிரபுதேவா அவருடைய நண்பர்கள் முடிவு செய்ய பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பிரபுதேவா இயல்பாகவே அவருக்கு காமெடி என்பது கைவந்த கலை போல, அதிலும் ஆள்மாறாட்டம், சமாளிப்பது போன்ற விஷயம் என்றால் புகுந்து விளையாடுகின்றார். அதேபோல் தான் இதிலும் தனக்கான கதாபாத்திரத்தில் சிக்ஸர் அடித்துள்ளார்.
படத்தில் பிரபுதேவா தாண்டி நம்மை கவர்வது அவருடைய நண்பர்கள் கேங் தான் அதிலும் துபாய் நண்பர் தான் அட்டகாசம் செய்கிறார். பிரபுதேவா பெற்றோராக வரும் டி. சிவா காது கேட்காத தன் மனைவிடம் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றது.
இதை தாண்டி ஒரு அதர பழசான ஒரு டெம்ப்ளேட் திரைக்கதை தான் இந்த சார்லீ சாப்ளின், 90களுக்கு ஓகே, அதற்காக 2020 வரப்போகிற நேரத்தில் இன்னும் துளிக்கூட லாஜிக்கே இல்லாத ஒரு திரைக்கதையை அங்கங்கே சிரிக்க வைத்து கொண்டு சென்றுள்ளார் ஷக்தி சிதம்பரம்.
அதிலும் நிக்கி கல்ராணியை அவர் காதலிக்கும் போது பிரபுதேவா காதலிப்பது வேறு பெண் போல காட்டி ஒரு ஆள்மாறட்ட காமெடி இந்த காலத்திலும் அழகை வைத்து கிண்டல் செய்து இப்படி ஒரு காட்சிகள் தேவையா? அதிலும் காமெடி என்பதற்காக டொய், டிங் என்றெல்லாம் இசையை பின்னால் கொடுத்து நம்மை சிரிக்க சிக்னல் கொடுக்கிறார் அம்ரிஷ்.
பாடல்களில் என்ன மச்சா மட்டுமே ரசிக்க வைக்கின்றது, பிரபுதேவாவின் நடனம் கூட காப்பாற்ற முடியவில்லை.

க்ளாப்ஸ்

பிரபுதேவா முடிந்த அளவிற்கு சிரிக்க வைத்துள்ளார்.
ஒரு பொய்யை சொல்லிவிட்டு அதை மறைக்க போராடும் ஒரு சில காட்சிகள்.
கிளைமேக்ஸில் ரவி மரியாவை வைத்து செய்யும் காமெடி காட்சிகள்.

பல்ப்ஸ்

காமெடி படம் தான், அதற்காக கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் எடுப்பதா?.
படம் திருப்பதியில் நடப்பதற்காக அப்படியேவா தெலுங்கு படம் போல் எடுப்பது.
மொத்தத்தில் 90'ஸ் கிட்ஸை ரசிக்க வைத்த சார்லீ சாப்ளின் என்பதற்காக 90களில் வந்தது போலவே இப்போதும் எடுப்பதா?.

No comments: