மெல்பனில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கும் தமிழ்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் 04/11/2018





அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில்,  எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி ( 04-11-2018)  ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மெல்பனில் " தமிழ் எழுத்தாளர் விழா 2018 "   நடைபெறுகிறது.

            முகவரி:       Keysborough Secondary College மண்டபம்
                                        (28 Isaac Road, Keysborough, Vic 3173)                       

                            இவ்விழாவில்  ஓவியக்கண்காட்சி - மறைந்த தமிழ் அறிஞர்கள் - படைப்பாளர்கள்  ஒளிப்படக்காட்சி -  அவுஸ்திரேலியாவில் வெளியான தமிழ் நூல்கள் - இதழ்கள் - பத்திரிகைகள் கண்காட்சி  - நாவல் இலக்கிய கருத்தரங்கு - கவிஞர்கள் அரங்கு - மெல்லிசை அரங்கு என்பன இடம்பெறவுள்ளன.

அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில்   பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்திலும் தோற்றவிருக்கும் எமது தமிழ் மாணவர்களுக்கு,   தமிழ் எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகள் உசாத்துணையாக ( Resource ) திகழும்.  அத்துடன்  அனைத்து தரத்திலும் கற்கும் மாணவர்களுக்கும் அவர்களது ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாகவும் அமையும்.

தமிழ் எழுத்தாளர் விழா 2018 நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்குமாறு, மெல்பன் தமிழ் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
                                                     அனுமதி இலவசம்

மேலதிக விபரங்களுக்கு:      முருகபூபதி 04 166 25 766

                                           ( விழாக்குழுவின் சார்பில்)
-----------------------------------------------------------------------------------------
     atlas25012016@gmail.com - www. https://atlaswriters.wordpress.com/
-----------------------------------------------------------------------------------------






-->









No comments: