தமிழ் சினிமா - வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் என்றாவது தான் வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட படம் வரும். அப்படி தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் சிலர் தரமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வருகின்றனர், அந்த வகையில் அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் வஞ்சகர் உலகம், இவை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே சாந்தனி கொலை செய்யப்படுகின்றார். இதை தொடர்ந்து அந்த கொலையை யார் செய்தார்கள் என்று போலிஸ் தேட ஆரம்பிக்கின்றது.

அதே நேரத்தில் பத்திரிகை துறையிலிருந்து இந்த கொலை குறித்து பெரிய விவாதம் நடந்து வருகின்றது, இந்த கொலையை யார் செய்தார்கள் என்று இரண்டு தரப்பும் மும்மரமாக தேட, அந்த கொலையை ஒருவர் செய்ததாக தெரிய வருகின்றது. அதோடு படத்தின் இடைவேளை.
இதற்கிடையில் ஒரு கேங்ஸ்டர் ஹெட் துரைராஜ் என்பவரை போலிஸ் தேட, அந்த குருப்பில் குருசோமசுந்தரம் இருக்க, இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

குருசோமசுந்தரம் இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் பாதியில் இவர் எதற்கு இந்த படத்தில் என்று நம்மை எண்ண வைத்து, இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகின்றார், அதிலும் திரையரங்கில் ஒரு காட்சி குரு எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நிரூபித்துவிடுகின்றார்.
அதை தொடர்ந்து சிபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கின்றது, முதல் படம் போலவே இல்லை, இப்படி ஒரு புதிய முயற்சி கொண்ட படத்தில் ஏன் அத்தனை செயற்கை தனமான பத்திரிகையாளர்கள், எந்த ஒரு இடத்திலும் டப்பிங் மேட்ச் ஆகவே இல்லை.
படத்தில் பலரும் பேசத்தயங்கும் சில விஷயங்களை இயக்குனர் மனோஜ் தைரியமாக பேசியுள்ளார், இவை கதைக்கு மிக முக்கியம் என்பதால் அதை சொல்ல முடியவில்லை, படத்தின் முதல் பாதி ஆரம்பித்த 10 நிமிடம் விறுவிறுப்பாக செல்ல அடுத்து இடைவேளை வரை நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது.
இரண்டாம் பாதி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது, கேங்ஸ்டர் என்று ஒரு கதை தனியாக வர, அதில் குருசோமசுந்தரமே செம்ம ஸ்கோர் செய்கின்றார், அதிலும் அவர் கேங்ஸ்டராக மெல்ல வளர்ந்து வருவது போல் காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, தென்னிந்தியாவின் நவாஸுதின் சித்திக் என்றே இவரை சொல்லலாம்.
டெக்னிக்கல் விஷயங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் அதிலும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்றவாறு கலர் தேர்ந்தெடுத்தது புதிய முயற்சி, இவர்கள் எல்லோரையும் விட படத்தின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், இவரின் பெஸ்ட் என்றே இதை சொல்லலாம்.

க்ளாப்ஸ்

குருசோமசுந்தரம் படத்தை ஒன் மேனாக தாங்கி செல்கின்றார்.
டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர்.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக தெரியும் காட்சி புதிய அனுபவத்தை தருகின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகரும் திரைக்கதை.
ஒரு சிலர் குறிப்பாக அந்த பத்திரிகையாளரின் நடிப்பு மிக செயற்கைத்தனமாக உள்ளது.
ஜென்ரல் ஆடியன்ஸிற்கு படம் எளிதில் புரியுமா? என்று தெரியவில்லை.
மொத்தத்தில் புதிய முயற்சியை விரும்புவோர்கள், கண்டிப்பாக வஞ்சகர் உலகத்திற்கு விசிட் அடிக்கலாம். மற்றவர்களுக்கு?.
நன்றி  CineUlagam
No comments: