நீர் நிறைந்த குகைக்குள் சிக்கியது எப்படி?
பல்டி அடித்தார் ட்ரம்ப்
அவர் மிக மிக அழகானவர் - ட்ரம்ப்
எனது மகளின் சிரிப்பில் வேதனையை பார்க்கின்றேன்- ஹரியின் மனைவியின் தந்தை
சென்னையில் பயங்கரம் ! 12 வயது சிறுமியை துஷ்பிரோயகம் செய்த 17பேர்
கடுமையாக தாக்கி பேசிவிட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி
நீர் நிறைந்த குகைக்குள் சிக்கியது எப்படி?
18/07/2018 குகைக்குள் சிக்கிய நிலையில் உலகின் கவனத்தை ஈர்த்து சர்வதேசத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட தாய்லாந்தின் 12 சிறுவர்களும் இன்று ஊடகங்களை சந்தித்துள்ளனர்.
இந்த ஊடக சந்திப்பின்போது அவர்கள் தாங்கள் மீட்கப்பட்ட விதத்தினை வர்ணித்துள்ளதுடன் தங்களின் மீட்பு நடவடிக்கைக்கு உதவியவர்களிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த அனுபவம் தங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு வாரங்கள் குகைக்குள் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பின்னர் முதன்முதலாக ஊடகங்களின் பின்னர் தோன்றியுள்ள அவர்கள் தங்கள் கதையை வர்ணித்துள்ளனர்.
12 பேர் கொண்ட கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்த சிலர் அந்த குகைக்கு முன்னர் சென்றிருக்கவில்லை இதன் காரணமாக ஆர்வம் மிகுதியால் குகைக்குள் நுழைந்தனர் என பயிற்றுவிப்பாளர் எகபொல் சன்டவொங் தெரிவித்துள்ளார்.
ஒரு மணிநேரத்திற்கு மேல் நிலத்தின் கீழ் காணப்பட்ட சுரங்கப்பாதைகளை ஆராய்ந்தோம்,இருட்டி விட்டது என நாங்கள் திரும்ப எண்ணியவேளை குகை வெள்ளத்தால் முற்றாக நிரம்பியிருந்தது வெளியேறும்ப பாதை முற்றாக தடைப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நாங்கள் சிக்குண்டுவிட்டோம் என தெரிவித்தனர் ஆனால் மீட்க யாராவது வருவார்கள் என உறுதியளித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓரு கட்டத்தில் உள்ளே சிக்குண்டதை உணர்ந்ததும் அவர்கள் உள்ளே தங்குவதற்கான இடத்தை தேடி சென்றுள்ளனர்.
உள்ளே சுத்தமான நீர் தென்பட்ட செங்குத்தான பகுதியை கண்டோம்,அங்கிருப்பதே நல்லது நான் அவர்களிற்கு தெரிவித்தேன் என பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அன்றிரவு உறங்கச்செல்வதற்கு முன்னர் நான் அவர்களிற்கு பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்தேன் அன்றிரவு பிரார்த்தனை செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பயப்படவில்லை அடுத்த நாள் நீரின் அளவு குறைந்து விடும் மீட்க யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருந்தனர் எனவும் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீர்மட்டம் உயர்ந்தது
எனினும் நீர்pன் அளவு குறையவில்லை, நான் நீர் மட்டம் அதிகரிப்பதை உணர்ந்தேன்,அவர்களை உயரமான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டேன், என தெரிவித்த பயிற்றுவிப்பாளர் நிலத்தை தோண்டி வெளியேறுவதற்கான பாதை ஏதாவது உள்ளதா என பார்க்குமாறும் அவர்களை கேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட பயிற்சிக்கு பின்னர் உணவுண்டதால் அவர்களிடம் உணவுப்பொருட்கள் எவையும் இருக்கவில்லை இதனால் அவர்கள் நீரையருந்தி சமாளித்துள்ளனர்.
உணவைநினைத்தால் பசியெடுக்கும் என்பதால் உணவை நினைவிக்கவில்லை என அவர்களில் வயது குறைந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தருணம்
மீட்பு பணியாளர்கள் தங்களை வந்தடைந்த அந்த தருணத்தை 14 வயது அடுன் சாம் வர்ணித்துள்ளான்.
வெளியேறுவதற்கு வழியுள்ளதா என பார்ப்பதற்காக குகையை தோண்டிக்கொண்டிருந்த சமயத்தில் சிலர் பேசும் சத்தம் கேட்டது,நான் ஏனையவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன்,
பிரிட்டிஸ் மீட்பு பணியாளர்களை கண்ட தருணத்தில் நான் அதிர்ச்சியடைந்து போனேன் என்னால் ஹலோ என தெரிவிக்க மாத்திரம் முடிந்தது என சிறுவன் தெரிவித்துள்ளான். நன்றி வீரகேசரி
பல்டி அடித்தார் ட்ரம்ப்
அவர் மிக மிக அழகானவர் - ட்ரம்ப்
எனது மகளின் சிரிப்பில் வேதனையை பார்க்கின்றேன்- ஹரியின் மனைவியின் தந்தை
சென்னையில் பயங்கரம் ! 12 வயது சிறுமியை துஷ்பிரோயகம் செய்த 17பேர்
பல்டி அடித்தார் ட்ரம்ப்
18/07/2018 அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு தொடர்பாக நடந்து வரும் விசாரணையை 2 நாட்களுக்கு முன்னர் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், தற்போது புலனாய்வு அமைப்புகளின் முடிவுவை ஏற்றுக்கொள்வதாக பல்டி அடித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகிய இருவரும் கடந்த திங்கள் அன்று பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் சந்தித்துக் கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ரொபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார்.
அமெரிக்காவின் இத்தனை ஆண்டுகால முட்டாள்தனமும் ரஷ்யா உடனான பகைக்கு காரணம் என ட்ரம்ப் ட்வீட்டியிருந்தார். மேலும், புதின் உடன் ஊடகவியலாளர்களை சந்திக்கும் போது, ரொபர்ட் முல்லர் விசாரணை பேரிடராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
சொந்த நாட்டின் மீதே ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்ரம்ப் கட்சியை சேர்ந்தவர்களே அவரை விமர்சிக்க தொடங்கினர். எதிர்ப்பலைகள் உருவானதை அடுத்து, அவற்றை எதிர்கொள்ளும் விதமாக ட்ரம்ப் தனது முந்தைய கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு தேர்தலில் ரஷ்யா தலையீடு என்ற அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ரஷ்யா ஏன் தலையீட்டுக்கான காரணத்தை நான் பார்க்கவில்லை என கூற விரும்பினேன். ஆனால், மாற்றி பேசிவிட்டேன். அமெரிக்க புலனாய்வு அமைப்பின் விசாரணை மீது முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பையும் அளிப்பேன்’ என ட்ரம்ப் தற்போது விளக்கமளித்துள்ளார். நன்றி வீரகேசரி
அவர் மிக மிக அழகானவர் - ட்ரம்ப்
17/07/2018 பிரித்தானிய எலிஸபெத் மகாராணியார் உள்ளும் புறமும் அழகானவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த அவர் வின்ட்ஸர் மாளிகையில் எலிஸபெத் மகாராணியாருடன் (92 வயது) மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மகாராணியார் அற்புதமான ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பேட்டியானது நேற்று திங்கட்கிழமை காலை ஐ.ரி.வி. தொலைக்காட்சியின் 'குட் மோர்னிங் பிரிட்டன்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.
"அவர் அதிகளவான சக்தியையும் திடகாத்திரத்தையும் கூர்மையையும் கொண்ட அற்புதமான பெண். அவர் பிரமாதமான ஒருவர். அவர் உன்னதமானவர். அவர் மிக மிக அழகானவர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
தான் அவ்வாறான அற்புதமான பெண்ணை இறுதியில் சந்தித்தமையை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் மேலும் கூறினார்.
"அவர் (மகாராணியார் ) வெளியே மட்டும் அழகானவர் அல்ல. அவர் அகத்தேயும் புறத்தேயும் அழகானவராக உள்ளார். அவர் மிகவும் அழகானவரும் விசேடத்துவம் பொருந்திய ஒருவருமாவார்" என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
2000 ஆம் ஆண்டில் 88 ஆவது வயதில் மரணமான தனது தாயாரான மேரி ஆன் ட்ரம்ப் எலிஸபெத் மகாராணியாரின் ரசிகையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
எலிஸபெத் மகாராணியார் தனது 66 வருட கால முடியாட்சி காலத்தில் அமெரிக்காவில் ஹாரி எஸ். ட்ரூமன் முதல் டொனால்ட் ட்ரம்ப் வரை 13 பேர் ஜனாதிபதி பதவியை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
எனது மகளின் சிரிப்பில் வேதனையை பார்க்கின்றேன்- ஹரியின் மனைவியின் தந்தை
15/07/2018 அரசகுடும்பத்து வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் எனது மகள் தின்றாடுகின்றாள் என பிரிட்டிஸ் இளவரசர் ஹரிபின் மனைவி மேகன் மார்க்லேயின் தந்தை தோமஸ் மார்க்லே தெரிவித்துள்ளார்.
எனது மகள் ரோயல் குடும்பத்தின் ஒரு பகுதியாகயிருப்பதன் அழுத்தத்தை தாங்க முடியாமல் திண்றாடுகின்றாள் வேதனைக்கு மத்தியிலும் அவள் சிரிக்கின்றாள் என தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனது மகளின் வேதனையை அவளின் சிரிப்பில் நான் காண்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலாவதியான பழமையான பிரிட்டனின் அரசகுடும்பம் எனது மகள் மீது சுமத்தியுள்ள எதிர்பார்ப்புகளால் அவள் அச்சமடைந்துள்ளால் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
நான் அதனை அவளது கண்களில் சிரிப்பில் முகத்தில் காண்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் பல வருடங்களாக அவளது சிரிப்பை பார்த்தவன் அவளின் சிரிப்பு குறித்து எனக்கு தெரியும் இது அவளின் சிரிப்பல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் அரச குடும்பத்தில் திருமணம் செய்தமைக்காக பெரும் விலையை செலுத்தவேண்டியுள்ளது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஸ் அரச குடும்பத்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை எனது மகள் விரும்பமாட்டாள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் திருமணத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களிற்காக அரச குடும்பம் தன்னை மகளிடமிருந்து பிரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
சென்னையில் பயங்கரம் ! 12 வயது சிறுமியை துஷ்பிரோயகம் செய்த 17பேர்
17/07/2018 சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7ஆம் வகுப்பு படிக்கிறார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவியின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி, குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.
பின்னர் மிரட்டி தங்கள் ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். இதுதவிர குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், அங்கு வேலை பார்க்கும் நபர்களும் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.
ஏழு மாத காலமாக நீடித்த இந்த கொடுமை சமீபத்தில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் பொலிஸார் அதிரடி விசாரணையை தொடங்கினர். சிறுமிக்கு நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனையிலும், அவர் பல நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
லிப்ட் இயக்குநகள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்திய பொலிஸார் 17 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
கடுமையாக தாக்கி பேசிவிட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி
20/07/2018 இந்திய மத்திய அரசாங்கதிற்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஒன்று பாராளுமன்ற மக்களவையில் இன்று இடம்பெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக ரபேல் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பொய்யர் என ராகுல் கூறினார். இதற்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், அவை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.
தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment