இளவரசர் ஹரி (Harry) நடிகை மேகன் (Meghan) இருவரின் திருமணம் 19/05/2018 அன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இவர்களின் காதல் ரகசியம் எப்போது முதன் முதலில் வெளியே கசிய ஆரம்பித்தது தெரியுமா? ஹரியும் மேகனும் ஒரே மாதிரியான நீல நிற மணிகளால் ஆன பிரேஸ்லட்டை அணிந்து கொண்டு வெளியே நடமாடிய போதுதான் அந்த ரகசியம் கசியத் தொடங்கியது.
இளவரசர் ஹரி ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்தபோது இந்த நீல மணிகளாலான பிரேஸ்லட்டுகளை வாங்கி வந்திருந்தார். அதைவிட இளவரசர் ஹரி அவ்வப்போது மேகனுக்கு பிடித்த பியோனி மலர்களைக் கொண்ட மலர்கொத்துக்களையும் அடிக்கடி அனுப்பி வைப்பாரம். ஒரு மலருக்கு மலர்களை அனுப்பியிருக்கிறார் இளவரசர் ஹரி.
ஓக்ரோடபர் 2016 இல் இவர்களது காதல் வெளியுலகிற்கு தெரியவந்தது. இளவரசர் ஹரி மனிதநேயம் மிக்கவர். அவர் தொலைக்காட்சி நடிப்பையும் யுனைட்டட் நேஷன்ஸ் (United Nations) வேர்ல்ட் விஷன் கனடாவுக்கும் (World Vision Canada) பணியாற்றும் மேகனை தேர்ந்தெடுத்தது மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையே அளித்தது என்றே கூறவேண்டும்.
“நம்பமுடியாதளவு விரைவாக நான் மேகனின் மேல் காதல் வயப்பட்டுவிட்டேன்” என்று புன்னகையுடன் கூறும் இளவரசர் ஹரி 33 வயது நிரம்பியவர். இந்த மிகவும் அழகிய பெண் கால் தடிக்கி என் வாழ்வினுள் வீழ்ந்து என் வருங்கால வாழ்க்கையை வசந்தமாக்கிவிட்டார்.” என அவர் புளுகித் தள்ளுகிறார்.
“அவள் மிகச்சிறந்த குணவதியாக இருப்பது எனக்கு மிகப் பெரிய ஆறுதலை தருகிறது!” என்கிறார் இளவரசர் ஹரி. 36 வயதாகும் மேகன், இளவரசர் ஹரி தங்கும் கென்சிங்கடன் (Kensington) என்ற இடத்தில் அடிக்கடி காணப்பட்டார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் இளவரசர் ஹரியும் அடிக்கடி மேகனை சந்திப்பதற்காக டொரன்டோவுக்கு சென்று வந்திருக்கிறார். காதல் பறவைகள் இரண்டும் தங்கள் காதல் சிறகுகளை விரித்துப் பறந்து திரிந்திருக்கின்றன. அவர்கள் இருவரும் நொதர்ன் லெட்ஸை (Northern lights) பார்ப்பதற்காக நொர்வே நாட்டுக்கும் ஒரு நண்பரின் திருமணத்துக்காக ஜமேக்கா நாட்டுக்கும் ஆபிரிக்காவக்க சுற்றுலா (safari) மிருகங்களை பார்வையிடவும் சென்று வந்திருக்கிறார்கள்.
உருகி உருகி மருகி மருகி காதல் பறவைகள் ஆனந்தமாக அங்கும் இங்கும் பறந்து திரிந்திருக்கின்றன. இருவரும் வேறு நாடுகளில் இருந்தாலும் காதலிக்க தொடங்கிய பின்னர் அதிகம் பிரிந்திருந்தது இரண்டு கிழமைகளுக்கு மட்டும் தான் என மேகன் கூறியுள்ளார்.
இருவரும் பொதுமக்கள் முன் ஒன்றாகத் தோன்றிய 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இடம் பெற்ற இன்விக்டஸ் விளையாட்டுகளின் போது தான். Invictus Games என்பது ஒரு நாட்டின் இராணுவ வீரர்கள் போரின் போது ஊனமுற்றிருந்தால் அந்த ஊனமுற்றோரை உற்சாகபடுத்தும் முகமாக நடாத்தப்படும் விளையாட்டுக்கள் ஆகும்.
2014 ஆம் ஆண்டு இளவரசர் ஹரியின் ஆலோசனைப்படிதான் முதன் முதலாக இந்த விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இடம்பெற்ற அந்த இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளில் இருவரும் பொதுமக்களுக்கு முன் தங்கள் அன்பு முத்தத்தையும் பரிமாறிக் கொண்டார்கள்!
27ஆம் திகதி நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் தாங்கள் திருமணபந்தத்தில் ஈடுபடப்போவதை மக்களுக்கு உறுதிப்படுத்தினார்கள். அன்று இரவு மெலிதாக குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் சிக்கனை றோஸ்ட் பண்ணிக்கொண்டிருந்தோம். திடீரென்று ஹரி முழங்காலில் நின்றபடியே “மேகன்! நீ என்னை திருமணம் செய்ய சம்மதிப்பாயா?” என மிக மென்மையாக கேட்டார். “அவர் கேட்டு முடிக்கும் முன்பே நான் இப்போதே “ஆம்” என்று சொல்லி விடவா என்று கூறி மகிழ்ச்சியுடன் சிரித்தார் மேகன். இப்போது மேகன் இங்கிலாந்திலுள்ள தர்ம ஸ்தாபனங்களின் விபரங்களை அறிந்து வருகிறார். தன்னாலான உதவிகளைச் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்.
செயின்ட் ஜோர்ஜ் (St George's Chapel) தேவாலயத்தில் 600 விருந்தினர்களுக்கு முன் 19ஆம் திகதி மே மாதம் 2018 அன்று இளவரசர் ஹரியும் மேகனும் திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் அந்த இனிய நன்னாளை எதிர்நோக்கி வழி மீது விழி வைத்து காத்திருந்தார்கள்.
தேவர்கள் பூ மழை தூவ, வசந்தங்கள் வந்து வாழ்த்த, இளவரசர் ஹரியினதும் மேகனினதும் திருமணம் இனிதே நிறைவு பெற்றது. நாங்களும் மனம் நிறைந்து வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment