உலகச் செய்திகள்

ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு : 16 பேர் பலி





ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு : 16 பேர் பலி

31/03/2018 இஸ்ரேல் நாட்டின் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர்.

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இப் போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் முயற்சித்த போதும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீசி போரட்டக்காரர்களை தடுக்க தாக்குதல் நடத்தினர்.
இத் தாக்குதலில் பாலஸ்தினத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   நன்றி வீரகேசரி 



No comments: