இலங்கைச் செய்திகள்


முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழில் தாக்குதல்

 யாழ். மாநகர சபை மேயர் ஆர்னோல்ட் : துணை மேயர் ஈசன் 








முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழில் தாக்குதல்

26/03/2018 யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடைபெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தனிப்பட்ட தகறாரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








யாழ். மாநகர சபை மேயர் ஆர்னோல்ட் : துணை மேயர் ஈசன் 

26/03/2018 யாழ்.மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
யாழ். மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
இதன்போது, தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. முதலாம் வாக்கெடுப்பில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்டுக்கு 18 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் முடியப்பு ரெமீடியஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆகிய இருவருக்கும் தலா 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனை அடுத்து வாக்கெடுப்பு இன்றி இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் யாழ்ப்பாண மாநகர துணை முதல்வராக துரைராசா ஈசன் தெரிவாகியுள்ளார்.  நன்றி வீரகேசரி 



No comments: