இலங்கைச் செய்திகள்


இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த  இரு தரப்புக்களும் தயார் நிலையில்

உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம்

26 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

இலங்­கைக்கு சீனா கோரிக்கை.!

ஜப்பான் சக்கரவர்த்தியுடன் ஜனாதிபதி சந்திப்பு 

ஜெனி­வாவில் இலங்கை குறித்த முத­லா­வது விவாதம்

இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ;  100 மில். அமெரிக்க டொலரை ஒதுக்கியது இந்தியா

கண்டி, அம்­பாறை வன்­மு­றை­கள் ­தொ­டர்பில் இதுவரை 230 பேர் கைது.!



இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த  இரு தரப்புக்களும் தயார் நிலையில்

16/03/2018 ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில்  நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று   வௌ்ளிக்கிழமை இலங்கை  மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம்  நடைபெறவுள்ளது. 

பரப்பான சூழலிலும் பல்வேறு தரப்பினரும்  ஜெனிவாவில் முகாம் இட்டுள்ள நிலையிலும்  இலங்கை தொடர்பான முதலாவது விவாதம்  இன்று  நடைபெறுகிறது.  
ஜெனிவாவில் இம்முறை இரண்டு  விவாதங்கள் இலங்கை  தொடர்பில்   நடைபெறவுள்ள நிலையிலேயே     முதலாவது விவாதம் இன்று இடம்பெற ஏற்பாடாகியிருக்கிறது. 
கடந்த  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு  மீண்டும்  2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உள்ளாகிய  இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கத்தை  அடிப்படையாகக்கொண்டே  இன்றைய  விவாதம் நடைபெறவுள்ளது. 
ஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர்  மாதம்  ஜெனிவாவில் நடைபெற்றது.  அதன்போது இலங்கை  குறித்த  பல்வேறு  பரிந்துரைகள் அடங்கிய   அறிக்கை ஒன்றும்  ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்டது.  
அந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட  நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட  பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன்  அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன.   அதன்படி அந்தப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம்  நிறைவேற்ற வேண்டுமென  வலியுறுத்தியே விவாதம் நடைபெற்றது.  
இதன்போது  மனித உரிமை பேரவை சார்பில் பிரதிநிதிகள்   உரையாற்றவிருக்கின்றனர். அத்துடன்   சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும்  சர்வதேச  அமைப்புக்களின் பிரதிநிதிகளும்   இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும்  இன்றைய தினம்  இந்த அமர்வில் உரையாற்றவிருக்கின்றனர்.  
இன்று  விவாதம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.    ஜெனிவாவில் முகாமிட்டுள்ள அரசாங்கத் தரப்பு,பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும்  சர்வதேச தரப்பு என்பன  இன்றைய தினம்  தமது நிலைப்பாடுகளை வெளியிட தயாராகியுள்ளன. 
இதேவேளை  கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வு  தொடர்பான அமர்வில்  இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட   அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள  விடயங்கள் வருமாறு 
வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கவேண்டும்.  அத்துடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரெரணையை முழுமையாக  அமுல்படுத்தவெண்டும்.     
  
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு   சுயாதீன ஆணையாளர்களை நியமிக்கவேண்டும். ( தற்போது ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது) 
அந்த அலுவலகத்துக்கு தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன் சரியான அதிகாரிகளும் நியமிக்கப்படவேண்டும். 
இதற்கு முன்னர்  காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்;த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள்  உடனடியாக வெளியிடப்படவேண்டும். 
காணாமல் போதல்கள் தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன  தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிபடுத்தவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்  தொடர்பான விபரங்களை  உறவினர்களுக்கு வழங்குங்கள். 
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க சர்வதேச உதவிகளை பெறவேண்டும்.  அத்துடன்   மனித உரிமை மீறலில் ஈடுபட்ட   படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுங்கள். ( இந்த பரிந்துரையை அமெரிக்கா முன்வைத்திருந்தது) சர்வதேச உதவியுடன்   நம்பகரமான    பாதிக்கபட்ட மக்களை  கேந்திரமாக கொண்ட   பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும்   அலுவலகம்  என்பனவற்றை நியமிக்கவேண்டும். 
வெ ளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் இலங்கை குறித்த அறிக்கையில்  முன்வைக்கப்பட்டிருந்தன. 
இலங்கை  அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனிதஉரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைஒன்றுநிறைவேற்றப்பட்டது.  அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது. 

கடந்த 26 ஆம் திகதிஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர்எதிர்வரும்23 ஆம்  திகதியுடன்நிறைவடையவுள்ளமைகுறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 












உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம்

14/03/2018 இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து  கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை  இன்று கைச்சாத்திடப்பட்டது. 
உலகின் முதல் 50 துறைமுகங்களில் இலங்கை கொழும்பு துறைமுகம் 23 ஆம் இடத்தினை வகிக்கின்றது.
அதேபோல் கடந்த ஆண்டில் மாத்திரம் 6.1 மில்லியன் வருவாய் பெறப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சில் இன்று அரச- தனியார் இணைந்த துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கொழுப்பு துறைமுகத்தை அரச -தனியார் ஒத்துழைப்பில் கையாண்டு அதன் மூலம் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இலக்காக கொண்டதாக இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து செயற்படும் தனியார் துறைமுக நிறுவனங்கள் அனைத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.  இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி 








26 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

14/03/2018 அவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 6.20 மணியளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளை, சுவிற்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில்  விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் சிங்கள மற்றும் தமிழர்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாடுகடத்தப்பட்டுள்ள இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவர்களது அறிக்கையை பதிவு செய்த பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

14/03/2018 ஆன்மீக சொற்பொழிவாளர் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார்.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
1937 ஆம் ஆண்டு பிறந்த வசந்தா வைத்தியநாதன்  வாழ்நாளின் பெரும் பகுதியை ஆன்மீகத்திற்காவே அர்ப்பணித்திருந்தார். 
இந்நிலையில் அவர் தனது 81 ஆவது வயதில் இன்று  இயற்கையெய்தியுள்ளார்.
கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், இலங்கையில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகராகவும்  வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்பவர். ஆலய திருவிழாக்களின் போது நேரடி வானொலி வர்ணனைகளிலும் ஈடுபட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 









இலங்­கைக்கு சீனா கோரிக்கை.!

14/03/2018 இலங்­கையின் தற்­போ­தைய நிலை­மையை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு  அர­சாங்­கத்­திற்கும்   அதன் மக்­க­ளுக்கும்  இய­லுமை இருப்­ப­தா­கவே சீனா நம்­பு­கின்­றது.  அதே­போன்று  இலங்­கை­யா­னது இங்­குள்ள  சீன பி­ர­ஜை­களை பாது­காப்­ப­தற்கு  தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என நம்­பு­கின்றோம் என இலங்­கைக்­கான சீனத் தூதுவர்   செங் சுயான்   தெரி­வித்­தி­ருக்­கின்றார். 
நேற்று முன்­தினம் வெளி­வி­வ­கார அமைச்சர்  திலக் மாரப்­ப­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே  சீனத் தூதுவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 
இந்த சந்­திப்­பின் ­போது சீனத் தூதுவர் மேலும் குறிப்­பி­டு­கையில்:
இலங்­கையும் சீனாவும் பாரம்­ப­ரிய நட்பு நாடுகள்.  நீண்­ட­கா­ல­மாக  இரண்டு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று உத­வி கொண்­டி­ருக்­கின்­றன.  இலங்­கையின் அனைத்து துறை­க­ளிலும் இணைந்து பணி­யாற்­று­வ­தற்கு  சீனா விரும்­பு­கின்­றது.   குறிப்­பாக இரண்டு நாடு­க­ளி­னதும் தலை­வர்கள்   அடைந்த   இணக்­கப்­பாட்­டுக்கு அமை­வாக செயற்­ப­டு­வ­தற்கு   இரண்டு நாடு­களும்  எதிர்­பார்க்­கின்­றன.  
அத்­துடன்   இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் மெகா வேலைத்­திட்­டங்­களும் விரை­வு­ப­டுத்­து­வ­தற்கும்   அதன் ­மூலம் இரண்டு  நாடு­க­ளி­னதும் மக்­க­ளுக்கு நன்­மையை பெற்­றுக் ­கொ­டுப்­ப­தற்கும் சீனா எதிர்­பார்க்­கின்­றது. இலங்­கையின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் சீனா   அவ­தா­னித்­து கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையை அர­சாங்­கத்­தி­னாலும் அதன் மக்­க­ளி­னாலும் தீர்த்­து ­கொள்ள முடியும் என சீனா நம்­பு­கின்­றது என்றார். 
இந்த சந்­திப்பில் வெளி­வி­வ­கார அமைச்சர்  திலக் மாரப்­பன குறிப்­பி­டு­கையில், 
சீனாவின் நீண்­ட­கால உத­வி­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். இலங்­கையில்   சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் இலங்­கையின்  தேசிய ஒற்­றுமை மற்றும்  ஸ்திரத் ­தன்­மையை பாது­காப்­ப­தற்கு  சீனா வழங்கும் ஒத்­து­ழைப்­புக்கு நன்றி தெரி­விக்­கின் றோம்.  ஒரு சீனா என்ற  சீனாவின் கொள்­கையை நாங்கள்  மதிக்­கின்றோம்.  
அத்­துடன்  சீனா இலங்­கையில் முன்­னெ­டுக் கும் திட்­டங்­களை மதிப்­பி­டவும் அனு­மதி பெற் ­றுக்­கொ­டுக்­கவும்  வெளி­வி­வ­கார அமைச்சு சம்­பந்­தப் ­பட்­ட­ தி­ணைக்­க­ளங்­க­ளுடன் ஒருங்கிணைந்து பணி யாற்றும். குறிப்பாக இலங்கை மக்கள்  உணரக் கூடிய   நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின் றோம் என்றார். 
இதேவேளை  இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில்  உரிய விளக்கம் ஒன்றை   வெளிவிவகார அமைச்சர்  இதன்போது அளித்தார்.  நன்றி வீரகேசரி 









ஜப்பான் சக்கரவர்த்தியுடன் ஜனாதிபதி சந்திப்பு 

13/03/2018 ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜப்பானுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பான் நாட்டின் சக்கரவர்த்தி அகிஹிதோவுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.
டோக்கியோ நகரிலுள்ள இம்பீரியல் மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜப்பான் நாட்டின் சக்கரவர்த்தியும் மிச்சிகோ மகாராணியாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதன் பின்னர் இரு தலைவர்களும் சுமுகமாக கலந்துரையாடினர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வருகை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட ஜப்பான் சக்கரவர்த்தி, இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவரும் பலமான உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டுக்கான அரசமுறை பயணத்திற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜப்பான் சக்கரவர்த்திக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அனைத்துவகையிலும் பலப்படுத்துவது தனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.
1981 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து நினைவுகூர்ந்த ஜப்பான் சக்கரவர்த்தி, அவ்விஜயத்தின்போது கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபடும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்ததாக தெரிவித்தார்.
அவ்விஜயத்தின்போது இலங்கை மக்கள் தனக்கு வழங்கிய பெருவரவேற்பு குறித்தும் ஜப்பான் சக்கரவர்த்தி கௌரவத்துடன் நினைவுகூர்ந்தார். ஜப்பான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில் உண்மையான நண்பன் என்றவகையில் இலங்கை ஜப்பானுக்கு வழங்கிய ஒத்துழைப்புகளை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜப்பான் சக்கரவர்த்தி, இலங்கைக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி ஜப்பான் சக்கரவர்த்தியுடன் இணைந்து இம்பீரியல் மாளிகையை பார்வையிட்டார்.  நன்றி வீரகேசரி 










ஜெனி­வாவில் இலங்கை குறித்த முத­லா­வது விவாதம்

13/03/2018 ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனிவா வில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் எதிர்வரும் வெள்ளிக்­கிழமை இலங்கை மனித உரிமை நிலை­வரம் குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனி­வாவில் இம்­முறை இரண்டு விவா­தங்கள் இலங்கை  தொடர்பில்   நடை­பெ­ற­வுள்ள நிலையில்    முத­லா­வது விவா­தமே  எதிர்­வரும்  வௌ்ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. 
Image result for ஜெனி­வா
கடந்த  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு  மீண்டும்  2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட  இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமு­லாக்­கத்தை  அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே இந்த   விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 
ஏற்­க­னவே இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர்  மாதம் நடை­பெற்­றது.  அதன்­போது இலங்கை  குறித்த  பல்­வேறு  பரிந்­து­ரைகள் அடங்­கிய   அறிக்கை ஒன்றும்  நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்த அறிக்­கையில் 50 க்கும் மேற்­பட்ட  நாடு­க­ளினால் 100 க்கும் மேற்­பட்ட  பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன்  அவை திருத்­தங்­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.  
இலங்கை குறித்த அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது 
வெ ளிநாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி­ஞர்­களை கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­க­வேண்டும்.  அத்­துடன் . வடக்கு கிழக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வெண்டும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­துடன் ஐ.நா. பிரெ­ர­ணையை முழு­மை­யாக  அமுல்­ப­டுத்­த­வெண்டும்.     
   காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்­துக்கு   சுயா­தீன ஆணை­யா­ளர்­களை நிய­மிக்­க­வேண்டும். ( தற்­போது ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது) 
அந்த அலு­வ­ல­கத்­துக்கு தேவை­யான வளங்கள் வழங்­கப்­ப­டு­வ­துடன் சரி­யான அதி­கா­ரி­களும் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு முன்னர்  காணாமல் போன­வர்கள் குறித்து ஆராய்ந்;த ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள்  உட­ன­டி­யாக வெளி­யி­டப்­ப­ட­வேண்டும். 
காணாமல் போதல்கள் தன்­னிச்­சை­யான தடுத்து வைத்­தல்கள் என்­பன  தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை உறு­தி­ப­டுத்­த­வேண்டும். தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள்  தொடர்­பான விப­ரங்­களை  உற­வி­னர்­க­ளுக்கு வழங்­குங்கள். 
யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரிக்க சர்­வ­தேச உத­வி­களை பெற­வேண்டும்.  அத்­துடன்   மனித உரிமை மீறலில் ஈடு­பட்ட   படை­யினர் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக  சட்ட நட­வ­டிக்கை எடுங்கள். ( இந்த பரிந்­து­ரையை அமெ­ரிக்கா முன்­வைத்­தி­ருந்­தது)
சர்­வ­தேச உத­வி­யுடன்   நம்­ப­க­ர­மான    பாதிக்­க­பட்ட மக்­களை  கேந்­தி­ர­மாக கொண்ட   பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும். உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நட்­ட­ஈடு வழங்கும்   அலு­வ­லகம்  என்­ப­ன­வற்றை நிய­மிக்­க­வேண்டும். 
வெ ளிநாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி­ஞர்­களை கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­துடன் வடக்கு கிழக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வெண்டும். இவ்­வாறு பல்­வேறு பரிந்­து­ரைகள் இலங்கை குறித்த அறிக்­கையில்  முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 
இந்­நி­லையில் வௌ்ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள அமர்வில் முதலில்  ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேன்  உரை­யாற்­றுவார்.   அல் ஹுசேன்  ஏற்­க­னவே இலங்கை    தொடர்பில்  வெ ளியிட்­டுள்ள அறிக்­கையை  மேற்­கோள்­காட்­டியே     கருத்து வெ ளியி­ட­வுள்ளார்.  
அதனைத்  தொடர்ந்து இலங்­கையின் சார்பில்     தூதுக்­கு­ழுவின் தலைவர்  உரை­யாற்­றுவார்.       குறிப்­பாக  வௌ்ளிக்­கி­ழமை விவா­தத்தில் ஜெனி­வா­வுக்­கான இலங்கை தூதுவர் உரை­யாற்­றுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
அதன் பின்னர்   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­களின்  பிர­தி­நி­திகள் மற்றும்   சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.    
இலங்கை  அர­சாங்கம்  சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென தெரி­வித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில்  பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும்  அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. 
அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது  கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு  இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி  எதிர்வரும்  2019ஆம் ஆண்டு வரை   இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்  தொடர் எதிர்வரும் 23 ஆம்  திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ;  100 மில். அமெரிக்க டொலரை ஒதுக்கியது இந்தியா

12/03/2018 இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்ப விருத்திக்கென இந்திய அரசு 100 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளது. 
கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் சர்வதேச சூரிய சக்தி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூரிய சக்தி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
சர்வதேச ரீதியாக 46 நாடுகளை ஒன்றிணைத்த வகையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அபிவிருத்தி வங்கி தலைவர்கள், புதுப்பிக்கத்தக்க சக்திவள வர்த்தக தலைவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
இம்மாநாட்டின் போது சூரிய சக்தி தொழில்நுட்ப  மாநாட்டு திட்டங்கள் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. 
இந்தியாவின் நிதியுதவியின் கீழ் 15 நாடுகளுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 
இதன்படி இலங்கைக்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்திற்கென 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 
அதன்மூலம் 200 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான சூரிய சக்தி தொழில்நுட்பம் மற்றும் அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்தை நிறுவுதல் என்பன இம்முதலீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன. 
இம்மாநாட்டின் போது இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி சூரிய சக்தி திட்டத்தினால் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஏற்பட்ட நேர்மறையான காலநிலை மாற்றத்தை நினைவு கூர்ந்தார். 
அனைத்து நாடுகளும் தமது சக்திவலு தேவையை நிறைவு செய்வதற்கான வாய்ப்பேற்படுத்தல், பொதுவான கட்டமைப்பு ஒன்றின் மூலமாக ஒன்றிணைந்து  செயற்படல், சூரிய சக்தி தொடர்பான தொழில்நுட்பத்தை விருத்தி செய்தல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக  கொண்டு சூரிய சக்தி மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 










கண்டி, அம்­பாறை வன்­மு­றை­கள் ­தொ­டர்பில் இதுவரை 230 பேர் கைது.!

12/03/2018 கண்டி, அம்­பாறை உள்­ளிட்ட நாட­ளா­விய  ரீதியில் அண்­மைய நாட்­களில் பதி­வான இன­வாத ரீதி­யி­லான வன்­மு­றைகள் தொடர்பில் இது­வரை 230 பேரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார். 
இதில் கண்டி வன்­மு­றை­க­ளுடன்   161 பேரும் ஏனைய பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளுடன் 69 பேரும் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் தொடர்பில்  பல்­வேறு பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.
பாரிய சேதங்­களை ஏற்­ப­டுத்­திய கண்டி    வன்­மு­றைகள் 
கட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு தற்­போது அங்கு அமை­தி­யான சூழல் நிலவும் நிலையில் நேற்று மாலை 6.00 மணி­யுடன் நிறை­வுக்கு வந்த 48 மணி நேரத்தில் கண்டி மாவட்­டத்தில் எவ்­வித வன்­மு­றை­களும் பதி­வா­க­வில்லை என  பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது. 
நேற்று முன் தினம் முதல் கண்­டியில் ஊர­டங்கு எவையும் பிறப்­பிக்­கப்­ப­டாத நிலையில் பொலிஸ், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை மற்றும் முப்­படை பாது­காப்பு தொடர்ந்தும்  அம்­மா­வட்­டத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது. அதன்­படி கண்டி மாவட்­ட­மெங்கும் 3000 பொலிஸார், 750 எஸ்.ரி.எப்., 2500 இரா­ணுவம்,600 கடற்­படை, 30 விமா­னப்­ப­டை­யினர் தொடர்ந்தும் பாது­காப்பு பணி­களில் அமர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
இத­னி­டையே கண்டி வன்­மு­றை­களை திட்­ட­மிட்டு, அவற்றை தூண்டி, வழி நடாத்­தி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட பிர­தான சந்­தேக நப­ரான, 'மக­சொஹொன் பல­காய' எனும் அமைப்பின் தலை­வ­னாக கரு­தப்­படும் அமித் வீர­சிங்க, அவ­னது சகா சுரேந்ர சுர­வீர உள்­ளிட்ட 10 பேரையும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தொடர்ந்தும் நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரணை செய்து வரு­கின்­றனர். 
பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி வின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் விஷாந்த தலை­மை­யி­லான சிறப்புக் குழு­வினர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
கண்டி வன்­மு­றைகள் தொடர்பில் சதித் திட்டம் தீட்­டி­யமை,  வன்­மு­றை­களை வழி நடத்தியமை, இனவாதத்தை தூன்டியமை, அது தொடர்பில் உபதேசம் செய்தமை, சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறைகளுக்கு தூபமிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ்  இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. . நன்றி வீரகேசரி 


No comments: