வாழி ஸ்டீபன் ஹாக்கிங்!
வாழி தமிழ்போல் வாழி !!
சுழலும் சக்கரம் பூமியில்
சுழன்றது சக்கரம் சாமி!
சுட்டும் விழிகள் அறியும்
சுட்ட துயரம் தெரியும்!
காலம் கடக்கும் ஹாவ்க்கிங்கை
காலன் கடத்திச் சென்றான்
என்னே கொடுமை நிலத்தில்?
எமனே இரக்கம் அற்றாய்!
அண்டம் முழுதும் கண்ணீர்
அறிஞர், ஆய்வர் கண்ணீர்
நம்மைத் தேடும் முயற்சி
நன்று வேண்டும் நமக்கு
நம்மை மீறி ஒருவன்
நம்மை ஆளும் இறைவன்
அண்டம் முழுதும் கண்ணீர்
அறிஞர், ஆய்வர் கண்ணீர் !
நம்பு எதையும் நம்பு
நன்கு உணர்ந்து நம்பு
கடவுள் துகளும் உண்டு
கையை வைத்தால் துண்டு!
இயற்கை ஒன்றே பெரிது
இயன்றவரை வாழ் இனிது
பருவம் மாறும் இயற்கை
பாரில் கொல்லும் உயிரை
அணுவும் நன்று அல்ல
அதுவும் கொல்லும் அறிக
மனிதப் பெருக்கும் துன்பம்
மனிதம் கொல்லும் தெரிக
மனிதச் செயற்கை கூட
மனிதன் கொல்லும் ஒருநாள்
மனிதச் செருக்கும் கொல்லும்
மனிதம் பழகு இன்றே!
அண்டம் முழுதும் கண்ணீர்
அறிஞர், ஆய்வர் கண்ணீர் !
ஐயகோ சக்கர நாற்காலி
சரிந்தது காண்!
அறிவியல் உலகம் இன்று
ஆழ்ந்த துயரில் நிற்பது காண்!!
தமிழும் சேர்ந்து அழுகிறது
தரணி எங்கும் நனைக்கிறது
அண்டம் முழுதும் கண்ணீர்
அறிஞர், ஆய்வர் கண்ணீர் !
மீளாத் துன்பம் சூழ்ந்தாலும்
மீண்டு(ம்) வருவோம் புவியினிலே
மாண்டு போகும் மரணம்
நீண்டு வாழும் மானுடம்
வாழி ஸ்டீபன் ஹாக்கிங்!
வாழி தமிழ் போல் வாழி !!
- சுரேஜமீ
No comments:
Post a Comment