சர்வதேச மகளிர் தினம். 'இதுதான் நேரம்' (Time is Now) என்பது 2018ஆம் ஆண்டுக்கான மகளிர் தினதொனிப்பொருள். இந்தத் தருணம் இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்றதனடிப்படையில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 25% ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மகளிர் அரசியலில் மாற்றமா?ஏமாற்றமா? என்பது பற்றி பேசவேண்டியுள்ளது.
இலங்கை உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை பெற்றுக்கொடுத்த ஜனநாயக நாடு என பெயர் பெற்றது.அவர் சிறிமாவோ பண்டாரநாயக்க. அதேபோல உலகிலேயே முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க பெண்ஜனாதிபதியையும் பெற்றுத்தந்த நாடு இலங்கையாகும். அவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. அந்தஇருவருமே ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்பதும் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க எனும் அரசியல்ஆளுமையின் உதவியோடு அரசியல் களம் கண்டவர்கள். ஆனாலும், இந்த இருவரும் ஆளுமைமிக்க அரசியல்தலைவிகள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
இவ்வாறு அரசியல் ரீதியாக பெண்களின் பெயர்கள் முக்கியத்துவம் பெற்ற நாடாக இருந்தபோதும் ஆண்களின்அரசியல் ஆளுமைகளினால் உள்ளீர்க்கப்பட்டே பெண்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டு வந்த ஒருகலாசாரமே இருந்தது. சிறிமா, சந்திரிக்கா போல் கணவன் அல்லது தந்தை அல்லது சகோதரன் என உறவு முறைஇழப்புகளின் பின்பதாகவே பல பெண்கள் அரசியலுக்குள் வந்தார்கள். காமினி திஸாநாயக்க மறைந்ததும் அவரதுமனைவி ஸ்ரீமா திஸாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வேட்பாளராகவே நிறுத்தப்பட்டமை இதற்குமோசமான உதாரணம்.
அதேபோல லலித் அத்துலத் முதலி இறந்ததும் ஸ்ரீமணி அத்துலத் முதலி, எம்.எச்.எம். அஷ்ரப் இறந்ததும் பேரியல்அஷ்ரப், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச்செயலாளர் காமினி அத்துக்கோரள இறந்ததும் அவரதுசகோதரி தலதா அத்துக்கோரள, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொல்லப்பட்டதும் விஜயகலா மகேஸ்வரன்,ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளை கொல்லப்பட்டதும் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, பாரதலக் ஷ்மன்கொல்லப்பட்டதும் அவரது மகள் ஹிருணிகா என இன்று வரை இந்த கலாசாரம் தொடர்ந்துகொண்டேஇருக்கின்றது.
இன்றைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க கூடியவர்களுள் சுமேதா ஜயசேன, பவித்ரா வன்னியாராச்சி,விஜயகலா மகேஸ்வரன், தலதா அத்துகோரள, ஹிருணிக்கா பிரேமசந்திர, ரோஹினி குமாரி கவிரத்ன, சுதர்ஷினிபெர்ணான்டோபிள்ளை, அனோமா கமகே (இவர்கள் கணவன் மனைவி இருவருமே இப்போது அமைச்சர்கள்) எனஎட்டுபேர் குடும்ப உறவுமுறை இழப்பினால் அல்லது இருப்பினால் அரசியலுக்குள் பிரவேசித்தவர்களாகவேஉள்ளனர். இது மொத்த பெண் உறுப்பினர்களில் 75 சதவீதத்தை விட அதிகமாகும். இதன்மூலம் அதிகளவானபெண்களின் அரசியல் பங்கேற்பது என்பது ஆண்கள் அரசியல் பங்குபற்றியதன் விளைவாக அவர்களின்உறவுமுறை காரணமாகவே இடம்பெற்றது என்ற முடிவுக்கு வர முடியும்.
இந்த நிலையில்தான் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை25 சதவீதமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ரீதியான ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தலும் அதற்கேற்பஇடம்பெற்று இப்போது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலைதோன்றியுள்ளதாகசொல்லப்படுகின்றது. சிக்கல் நிலை தோன்றியுள்ளமைக்கு அப்பால் 2015 ஆம் ஆண்டு அமைந்த நல்லாட்சிஅல்லது கூட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அடிப்படை அரசியல் மாற்ற விடயங்களில் இந்தபெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ பங்கேற்பை சட்டரீதியாக உறுதிபடுத்தியமையும் முக்கியமான அம்சமாகும்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள்குறைக்கப்பட்டதுபோல, 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சுயாதீனஆணைக்குழுக்களை நிறுவியதுபோல பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியதும் ஒருமுன்னேற்றகரமான நடவடிக்கையாக முதலில் உணர வேண்டியுள்ளது.
இதற்கு முன்னதான விகிதாசார விருப்புவாக்கு தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்றதேர்தல்களின்போது குறிப்பிட்ட சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க
No comments:
Post a Comment