தமிழ் சினிமா - 6 அத்தியாயம் – திரை விமர்சனம்



படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படம் அமானுஷ்யங்கள் அடங்கிய 6 கதைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு கதைகளை கொண்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் அமானுஷ்யம் என்ற கருவை மையமாக வைத்து உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹீரோ
நாயகன் தமன் குமாருக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை, உயிர் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால் அது அவருக்கு முன்கூட்டியே தெரிய வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஸ்டான்லியிடம் ஆலோசிக்க செல்கிறார். அப்போது அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக உணரும் மருத்துவர் என்ன செய்தார்? தமன் குமார் அப்படி நடக்க காரணம் என்ன? என்பதே முதல் அத்தியாயமாக காட்டப்பட்டுள்ளது.
இனி தொடரும்
பாப் சுரேஷின் வீட்டில் ஒரு குழந்தை பந்து விளையாடுகிறது. ஆனால் பாப் சுரேஷுக்கு அந்த குழந்தை இருப்பது தெரியவில்லை. மாறாக அந்த பந்து மட்டும் தெரிகிறது. இந்நிலையில், அங்கு வரும் பேபி சாதனா அந்த குழந்தையுடன் பேசுகிறாள். கடைசியில் பாப் சுரேஷின் கண்ணுக்கு ஏன் அந்த குழந்தை தெரியவில்லை? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே அடுத்த அத்யாயத்தின் கதை.
மிசை
நாயகன் கிஷோர் அவரது நண்பர்கள் பிரசன்னா, கதிர், ராண்டில்யாவுடன் தங்கியிருக்கிறார். இந்நிலையில், கிஷோர், மதுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது காதலை மதுஸ்ரீயிடமும் சொல்கிறார். ஆனால் அவரது காதலை மதுஸ்ரீ ஏற்காததால் தவறான முடிவை எடுக்கிறார். இந்நிலையில், மதுஸ்ரீ, கிஷோரை காதலிப்பதாக வர பின்னர் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
அனாமிகா
வாடகை கொடுக்க கஷ்டப்பட்டு குறைவான தொகை கொடுத்து ஒரு வீட்டில் தங்குகிறார் கேபிள் சங்கர். அவரது வீட்டிற்கு வருகிறார் நாயகன் குளிர் சஞ்ஜீவ். சஞ்சீவிடம் இந்த வீட்டில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் கேபிள் சங்கர் தனது அவசர வேளையாக வெளியூர் செல்ல முடிவு செய்0கிறார்.
முன்னதாக சஞ்சீவின் உதவிக்கு, அந்த வீட்டிற்கு அருகில் இருக்கும் தாத்தா ஒருவரை அறிமுகம் செய்துவைக்கிறார். அந்த தாத்ததாவை பார்க்க சென்ற இடத்தில் நாயகி காயத்ரியை பார்க்கிறார் சஞ்சீவ்.
பார்த்தவுடன் காயத்ரியுடன் காதல் வயப்படுகிறார். மீண்டும் அவளை பார்க்க செல்லும் போது அவள் அங்கில்லை. மாறாக அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று அந்த தாத்தா கூறுகிறார். பின்னர் வீடு திரும்பும் சஞ்சீவ் தன்னைச் சுற்றி அமானுஷ்யங்கள் நடப்பதாக உணர்கிறார். ஒரு கட்டத்தில் காயத்ரி இரவு மெழுகுவர்த்தியுடன் அந்த வீட்டுக்கு வர மயக்கம் போட்டு விழுகிறார். கடைசியில் சஞ்சீவ் முழிக்கும் போது என்ன நடந்தது? காயத்ரி உயிருடன் தான் இருந்தாரா? அல்லது அங்கு ஏதேனும் அமானுஷ்யம் இருந்ததா? என்பதே மீதிக்கதை.
சூப் பாய் சுப்பிரமணி
நாயகன் சுப்பிரமணி தனது காதலியை வெளியே அழைத்துச் செல்கிறார். முடிவில் நாயகி சுப்பிரமணியை அடித்துவிட்டு காதலை முறித்துவிட்டு செல்கிறாள். இதையடுத்து மற்றொரு பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் சுப்பிரமணி. அவளும் அவனை அடித்துவிட்டு காதலை முறித்துவிட்டு செல்கிறாள். தனது காதலை ஏதோ ஒன்று பிரிப்பதாக கருதும் சுப்பிரமணி மந்திரவாதி ஒருவரை சந்திக்கிறார். சுப்பிரமணியின் கடந்தகால வாழ்க்கையை பார்க்கும் மந்திரவாதி அதற்கான காரணத்தை சொல்லி அவருக்கு ஒரு முடிவை சொல்கிறார். அது என்ன முடிவு? அதில் இருக்கும் ருசீகரமான கிளைமேக்ஸ் என்ன என்பதே மீதிக்கதை.
சித்திரம் கொல்லுதடி
புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டும் வினோத் கிஷன் அந்த புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களை அப்படியே வரைந்துவிடும் திறமையுடையவர். இதுவரை பார்க்காத முற்றிலும் புதிய முகத்தை வரைந்து கொடுக்கும்படி ஒரு விளம்பர நிறுவனம் ஒன்று அனரை அணுகுகிறது. அதற்காக சில புத்தகங்களை வாங்கி வருகிறார் வினோத். அப்போது தவறுதலாக கோகிலா என்ற புத்தகத்தின் ஒரு பாதி மட்டும் அவருக்கு கிடைக்கிறது.
அந்த புத்தகத்தை படித்து அதில் வரும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை தனது கற்பனையில் வரைந்து விடுகிறார். ஆனால் அவளது கண்களை மட்டும் வரைய முடியவில்லை. இதையடுத்து அந்த புத்தகத்தை எழுதியவரை தேடிச் செல்கிறார். ஆனால் அந்த புத்தகத்தை எழுதியவர் இறந்துவிடுகிறார். கடைசியில் அந்த உருவத்தை வினோத் வரைந்து முடித்தாரா? அதன் பின்னணியில் என்ன அமானுஷ்யம் நடந்தது என்பதே மீதிக்கதை.
தனித்தனியாக குறிப்பிட்டு கூறாமல் 6 அத்தியாயங்களிலும் நடித்த தமன் குமார், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா, கிஷோர், மதுஸ்ரீ, பிரசன்னா, கதிர், ராண்டில்யா, விஷ்ணு, பிரான்சிஸ், சந்திரகாந்தா, சங்கீதா, ஈஸ்வரி, வினோத் கிஷன், அரவிந்த ராஜகோபால், சோமு சுந்தர், சாருலதா ரங்கராஜன் என அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்ததுடன் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருக்கின்றனர்.
6 அத்தியாயங்களுக்காகவும் தனித்தியாக பணியாற்றிய கேபிள் சங்கர், சக்தி வி.தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ் இ.ஏ.வி., லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என அனைவரும் செய்த வேலைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றனர்.
சினிமா வரலாற்றில் முதல் முறையாக அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்றே சொல்லலாம். ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாக வரும் கிளைமாக்சில் தனித்தனியாக சொல்லப்படுகிறது. ஒரு சில இடங்களில் திரைக்கதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றாலும், ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவில் சி.ஜே.ராஜ்குமார் (2 அத்தியாயங்கள்), பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோராஜா (தலா ஒரு அத்தியாயம்) இவர்களின் பங்கு சிறப்பு. இன்னமும் மெருகேற்றி இருக்கலாம். பி.சி.சாம், தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் பிராங்க்ளின், சதீஷ் குமார் என அனைவருமே பின்னணியில் கலக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் `6 அத்தியாயம்’ அலட்டல் இல்லை.

நன்றி tamilcinema.news








No comments: