மீண்டும் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புட்டின்
கடனட்டை மோசடி குற்றச்சாட்டு : பதவியை இராஜினாமா செய்தார் மொரீசியஷ் ஜனாதிபதி
இலங்கை வம்சாவளிப் பெண் அமெரிக்கத் தேர்தலில் போட்டி
பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு
நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம்
மீண்டும் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புட்டின்
19/03/2018 ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் கணக்கிடப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 76.11 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இத்தேர்தலில் தற்போதைய ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர்.
விளாடிமிர் புட்டின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் தேர்தல் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது, நன்றி வீரகேசரி
கடனட்டை மோசடி குற்றச்சாட்டு : பதவியை இராஜினாமா செய்தார் மொரீசியஷ் ஜனாதிபதி
18/03/2018 கடனட்டை மோசடியில் ஈடுபட்டமையால் பல்வேறு அழுத்தங்களுக்குள்ளான மொரீசியஷ் நாட்டின் ஜனாதிபதி அமீனா குரிப் பகிம் தனது பதவியை இனாஜிநாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரீசியஸ் நாட்டின் ஜனாதிபதியான அமீனா குரிப்-பகிம் பதவி வகித்துவந்துள்ளார். இவர் மீது கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அமீனா குரிப்-பகிம் தடுபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்த போது ஒரு அரசு சாரா தனியார் அமைப்பு வழங்கிய கடனட்டையை பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் டொலர் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக அந்நாட்டின் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டது.
இதையடுத்து அரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கடனட்டை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்தது. ஆனால் பதவி விலக முடியாது என அவர் அண்மையில் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
இலங்கை வம்சாவளிப் பெண் அமெரிக்கத் தேர்தலில் போட்டி
23/03/2018 அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.
இலங்கை பூர்வீகத்தை கொண்ட அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்து 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தையடுத்து அமெரிக்காவின் மேரிலான்ட்டில் பொற்றோருடன் குடியேறினார்.
37 வயதான கிரிஷாந்தி விக்னராஜா முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் போது, அவர் முதல் பெண்மணி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், கிரிஷாந்தி மேரிலான்ட் ஆளுநருக்கான போட்டியில் போட்டியிடப்போவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
மேரிலான்டின் அதன் 14 மத்திய மற்றும் மாநில அளவிலான அலுவலகங்களுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லையெனவும் பொது அலுவலகங்களில் பெண்களின் தேவை அதிகமாக காணப்படுகின்ற நிலையில், அதனை முன்நிறுத்தி தான் போட்டியிடுவதாக அவர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலான்ட பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முதல் பெண் கிரிஷாந்தி விக்னராஜா என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு
23/03/2018 பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பல்பொருள் நிலையமொன்றில் ஆயுதமேந்திய இனந்தெரியாதோர் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயுததாரிகள் கொதுமக்களை பணயக்கைதிகளாக பிடிப்பதற்கு முன்னர் மேற்கொண்ட துப்பாகிப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நலையில் ஆயுததாரிகளால் பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் சந்தேகம் உள்ளதாக சர்வதேச செய்திகள் செய்திவெளியிட்டுள்ளன. நன்றி வீரகேசரி
நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம்
24/03/2018 பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிதாரியால் மூன்று பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரால் குறித்த ஆயுததாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் குறித்த துப்பாக்கிதாரி தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸாரை நோக்கி குறித்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.
அதிகளவிலான ஆயுதங்களுடன் இருந்ததாக கூறப்படும் குறித்த துப்பாக்கிதாரி, கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 130 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேக நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரெஞ்சு உளவுப்பிரிவினர் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றும், மேலும் அவருடைய தாயார் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment