தமிழ் சினிமா


சங்கு சக்கரம்

இன்றைய நவீன காலத்தில் குழந்தைக்களுக்காக ஒரு படம் வருகிறது மிகவும் அபூர்வம். சினிமாவில் கமர்சியல் படங்களுக்கு இடையில் குழந்தைகளுக்காக வரும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
பொழுதுபோக்கு திகில் படங்களும் பேய் கதையில் வருகின்றன. ஆனால் தற்போது குழந்தைகளுக்காக பேய்கதையாக வந்துள்ளது சங்கு சக்கரம். இக்கதை எப்படி என பார்க்கலாம்.

கதைக்களம்

சங்கு சக்கரம் திரைவிமர்சனம்கதையில் 7 குழந்தைகள். ஒரே அட்டகாச கூட்டணி. ஏரியாவையே கலக்குவார்கள். இக்கால குழந்தைகளை பற்றி சொல்லவா வேண்டும். வாய் வலிக்க நன்றாக பேசுவார்கள்.
இந்த ஜாலி கூட்டணியோடு ஐக்கியமாக சிறுவன் டார்வின் எனபவன் வருகிறான். ஆனால் அந்த குழந்தைகள் பட்டாளம் ஏதோ ஒரு காரணம் காட்டி டார்வினை ஏற்க மறுக்கிறது.
இந்நிலையில் இக்குழந்தைகள் விளையாட இடம் தேடிக்கொண்டிக்கையில் வழியில் ஒருவர் சொன்னார் என அருகே உள்ள பேய் பங்களாவிற்குள் விளையாட்டாக நுழைந்து விடுகிறார்கள்.
டார்வினும் இவர்களின் பின்னாலேயே போய் உள்ளே புகுந்து விடுகிறான்.ஆனால் இந்த குழந்தைகளுக்கு தெரியாமம் ஒரு சதி நடக்கிறது. இவர்களை போல இன்னொரு சிறுவன் இங்கு அருங்காட்சியகம் இருக்கிறது என யாரோ சொல்ல அதை அப்படியே நம்பி ஆர்வத்தில் உள்ள வந்து ஆபத்தில் மாட்டிகொள்கிறான்.
இந்த சிறுவனுக்கு தனியே ஒரு பெரிய சதி திட்டத்தை நடத்த வில்லன் கூட்டணி திட்டமிடுகிறது. இந்த கூட்டத்திலேயே அதிகமாய் கேள்வி கேட்டு கொண்டிருப்பவன் இந்த புத்திசாலி சிறுவன். இருட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டு மிரண்டு போனவர்கள் அனைவரும் நண்பர்களாகி விடுகிறார்கள்.
உள்ளே இவர்கள் பெரும் சதியில் மாட்டிகொண்டதும், இவர்கள் அனைவரையும் ஏதோ ஒரு மாய சக்தி காப்பாற்றுகிறது. மேலும் அந்த மாயசக்தி அவர்களை நெருங்க நினைக்கிறது. இவர்களிடமிருந்து தப்பித்து போனால் அடுத்து பேயால் ஒரு ஆபத்து.
கடைசியில் இவர்கள் பேயிடமிருந்து தப்பித்தார்களா, இவர்களை காப்பாற்றிய மாய சக்தி எது, எதற்காக இந்த சிறுவர்களை காப்பாற்றியது, சதி கும்பல் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கமர்சியல் படங்களுக்கு நடுவே கதையம்சம் கொண்ட படங்கள் வருகின்றன. போட்டி, தியேட்டர் பிரச்சனை, வசூல் என சவாலையும் தாண்டி குழந்தைகளுக்காக ஒரு படத்தை கொடுத்திருக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு பேய் படங்கள் என்றாலே பயம். வளர்ந்து வரும் வேகமான அறிவியல் வளர்ச்சி உலகில் சில மூட நம்பிக்கைக்கு சாட்டையடியாக வசனம் மூலம் சிந்திக்க வைக்கிறது சங்குசக்கரம்.
கதைக்கு ஹீரோ என்றால் அந்த புத்திசாலி பையன் தான். விளையாட்டு போக்காக தெரிந்தாலும் கேள்வி கேட்டு நம்மையே யோசிக்க வைக்கிறார். அவனை வைத்து தான் கதை நகர்கிறது. சொல்லப்போனால் குழந்தைகள் கூட்டத்திற்கு லீடர் ஆகிவிடுகிறான்.
முதல் பாதி மெதுவாக செல்வது போல இருந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் கூடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை நாமே யூகித்து விடலாம். பேயை பார்த்து மிரண்டு ஓடும் இந்த குழந்தைகள் கூட்டம் பின்னர் தைரியமாக அதை எதிர்த்து நிற்கிறது.
புன்னகைப்பூ கீதா தான் கதையின் மெயின் ரோல். அவர் எப்படி பேயானார். தற்போதைய காலகட்டத்தில் மனதனின் மனநிலை எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என இவர் வரும் காட்சிகள் பிரதிபலிக்கும்.
நிறைவேறாத ஆசைகள் இருப்பவர்கள் தான் பேயாகிறார்கள் என காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குழந்தைகள் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களை வைத்து கேள்வியால் யோசிக்க வைக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமல்ல ஆதாயத்தோடு எதையும் செய்யும் ஆகாயம் கூட சில விசயங்களை குதர்க்கமாக சொல்லி யோசிக்க வைக்கிறார். படத்தின் பெரிய பலம் இசையமைப்பாளர் ஷாபிரின் பின்னணி இசையும், ரவி கண்ணனின் ஒளிப்பதிவும்.
எல்லாம் முடிந்து போகபோகிற வேளையில் தமிழ்நாடே கேட்கும் அந்த ஒரு கேள்வியை ரஜினி அரசியலுக்கு வருவாரா? என நிற்கவைத்துவிட்டார்கள்.

கிளாப்ஸ்

குழந்தைகளின் இயல்பான நடிப்பை பாரட்டலாம். டாறு டாமாறு தான் போன்ற அவர்களின் பஞ்ச் செம.
பழமைவாதிகள் மத்தியில் குழந்தைதனமான கேள்வியை கேட்க சிந்திக்க தூண்டிய இயக்குனருக்கு வாழ்த்து.
ஆபத்து நேரத்தில் ஆகாயம் சொல்லும் சொல்லும் வசனம் நச். காமெடிக்கூட ஃபீல் குட்.

பல்பஸ்

குழந்தைகளுக்கான படம் என்பதால் பெரிதாக தவறுகள் சொல்ல எதுவுமில்லை.
குழந்தைகள் போல நாமும் ஒரு கட்டத்தில் மாறிவிடுவோம்.
கதையில் இன்னும் கொஞ்சம் முக்கியதுவம் கொடுத்திருந்தால் படத்திற்கு கூடுதல் கிரடிட்ஸ்.
மொத்தத்தில் குழந்தைகளால் பெரியவர்களுக்கு மகிழ்ச்சியே. நமக்கே பாடம் சொல்கிறார்கள். குழந்தைகளோடு நாமும் உட்கார்ந்து பார்க்க வேண்டிய படம் சங்கு சக்கரம்.

நன்றி  CineUlagam
No comments: