உலகச் செய்திகள்


ரஜினி கொடுத்த அதிர்ச்சி!

புத்தாண்டு பிரார்த்தனையில் துப்பாக்கி சூடு 14 பேர் பலி!!!

சிறைச்சாலையில் கலவரம் : 9 சிறைக்கைதிகள் பலி :14 பேர் படுகாயம்



ரஜினி கொடுத்த அதிர்ச்சி!

03/01/2018 தனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த ரஜினி, கருணாநிதியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளார்.

கருணாநிதியைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பாகவே அது குறித்து பத்திரிகையாளர்களுக்கு அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற ரஜினிகாந்தை ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் ரஜினிகாந்த் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய ரஜினி, வழக்கம் போலவே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கட்சி ஆரம்பித்ததையடுத்து தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். மேலும் அவரது உடல் நிலை குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்” என்று தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று திமுகவினர் உற்சாகமாகத் தெரிவிக்கின்றனர்.  நன்றி வீரகேசரி











புத்தாண்டு பிரார்த்தனையில் துப்பாக்கி சூடு 14 பேர் பலி!!!

02/01/2018 நைஜீரியாவில் தேவாலயத்தில் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்று திரும்பியவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான ரிவர்ஸ் ஸ்டேட் பகுதியிலுள்ள ஒமாகு நகரில் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென பிராத்தனை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
இத் திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்துள்ளோர்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி











சிறைச்சாலையில் கலவரம் : 9 சிறைக்கைதிகள் பலி :14 பேர் படுகாயம்
02/01/2018 பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைக்கூண்டொன்றிலிருந்த கைதிகள் மூவரை ஆயுதமேந்திய குழுவினர் தாக்க முற்பட்டபோதே கலவரம் வெடித்துள்ளது. இக்  கலவரத்தைத்  தொடர்ந்து, கைதிகள் பலர் தப்பிச்சென்றுள்ளனர்.
தப்பிச்சென்றவர்களில் 27 பேரை பிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தற்போது சிறைச்சாலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நன்றி வீரகேசரி





No comments: