மும்பையில் வீட்டை இழந்த கமல் ஹாசன் முன்னாள் மனைவி சரிகா!!

.

sarika
மும்பையில் வீட்டை இழந்த கமல் ஹாசன் முன்னாள் மனைவி சரிகா!!

நடிகர் கமலஹாசனின் முன்னாள் மனைவி வீடு இழந்து தற்போது அந்த வீட்டை மீட்க நடிகர் அமிர்கானின் உதவியை நாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா. இவர் கமலிடம் இருந்து விலகிய பின்னர் (சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்றும் கூறப்படுகிறது). மும்பையில் தனது தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய் கடந்த நவம்பர் மாதம் காலமானார். இவர் காலமான பின்னர் இவர்கள் தங்கியிருந்த வீடு டாக்டர் விகாஸ் தாக்கர் என்பவரது கைக்கு சென்றுவிட்டது. இதையடுத்து அந்த வீட்டில் சரிகா தங்க முடியவில்லை.

இந்த வீடு மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில், பானு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்தக் குடியிருப்பில்தான் நடிகர்கள் கோவிந்தா மற்றும் விவேக் ஓபராய் ஆகியோர் உள்ளனர்.

இந்த வீட்டை சரிகா சம்பாதித்த பணத்தில் அவரது தாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீட்டை தனது இறப்புக்குப் பின்னர் தனது மகளுக்கு என்று எழுதி வைத்து இருப்பதாக கூறப்பட்டாலும், உயிலில் விகாஸ் டாக்டருக்கு எழுதி வைத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால், அந்த வீட்டை அவர் ஆக்கிரமித்துள்ளார். மேலும் ஜூஹூ பீச்சில் உள்ள ஒரு வீடும் அவரது கையை விட்டுச் சென்றுள்ளது.


இந்த வீட்டை மீட்க நடிகர் அமிர்கானின் உதவியை சரிகா தற்போது நாடி இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தங்குவதற்கு வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் கமல் ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனியாக மும்பையில் வசித்து வருகிறார். இளைய மகள் அக்ஷரா ஹாசன் அவ்வப்போது தனது தாயுடனும், சென்னையில் தனது தந்தையுடனும் வசித்து வருகிறார்.

சரிகாவின் தோழிதான் நடிகர் இம்ரான் கானின் தாய் நுஸ்ரத். அமிர்கானின் சகோதரி நுஸ்ரத். எனவே, அவர் வழியாக அமிர்கானின் உதவியை சரிகா நாடியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

No comments: