இறந்த காதல் - ஆனந்த்.வி

.
இன்னும் எத்தனை நாள் 
என் காத்திருப்பு... உனக்காக ...

தவறிழைத்தவன் நான்தானா?
நெஞ்சை தொட்டு சொல் ...
பிரிவுக்கு காரணம் யார் என்று?
என்னை விட்டு போனது நீ?

வாழ்க்கை கடலில் சிக்கிய
சிறு துரும்பாய்....
தவிப்பது நான் மட்டுமே....
அன்பை தேடி...
அரவணைப்பை தேடி...
தேடியது கிடைக்காது...
மூழ்கினேன்... மூச்சடங்கி.... 


விடவும் முடியாமல்...
உன் நினைவுகளை விடவும் முடியாமல்....
தொடரவும் முடியாமல்...
வானகம் நோக்கி
உன்னை தொடரவும் முடியாமல்...

நினைவுகளும்... கனவுகளும்....
இரவுகளும்... இளமையும் ...
விரகமும்... நரகமாய்...
நாளெலாம் தீ மிதிப்பது போல...
கொப்பளித்தது கால்களல்ல...
இதயம்...

உன் பிரிவில்...
என் இதயம் வலிக்காமல்...
என்னை தாங்கி நிற்கும்
என் நட்புக்கள்...
வாழ்வலையில் சிக்கி...
விலகி திரியும்போது...
விலகாமல் இருக்க போவது...
உன் நினைவலைகள் மட்டுமே...

உடன்கட்டை ஏற
துணிவில்லை எனக்கு,
உன்னை மறக்க
உளமில்லை எனக்கு...

வருவேன் உன்னை தேடி...
வாழ்கை முடிவில்....
காலம் போயிற்றே என்று...
கதவடைக்காதே கண்ணே ...

மற்றோர் உலகத்தில்...
மகிழ்ச்சியான...
வாழ்க்கை...

நமக்காக...நாமே
நம்முடன்...நாமே

நான் வரும்வரை...
காத்திரு....
காத்திருத்தல்..
காதலில்...
சுகமே....

காதலர்....
இருந்தாலும்...
இல்லையென்றாலும் ...
காதல் காதலே...
வெற்றி காதலுக்கே....

No comments: