சமஉரிமை சமுதாயம் - தி. சுவாமிநாதன், நாமக்கல்..

கார்ல்மார்க்ஸ் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகிய இரு சம உடைமைக் கொள்கைவாதிகளால் உருவாக்கப்பட்டதுதான் பொது உடைமைக் கொள்கை. வாழ்வியலில் அனைத்து சமூக உறவு நிலைகளையும், இயக்கங்களையும் நிர்ணயிப்பது பொருளாதாரமே. கொள்கைகளும், நம்பிக்கைகளும் கூட பொருளாதாரத்தின் ஆளுமைக்கு உட்பட்டவையே. இதுவே பொதுவுடமை கொள்கைகளின் மையக்கருவாக உள்ளது. சரித்திரம் என்பது ஒன்றுக்கொன்று முரணான பொருளாதாரத் தேவைகள் உள்ள வர்க்கங்களுக்கிடையே இடைவிடாது நடைபெறும் போராட்டம். 9ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருந்த நில பிரபுத்துவ (குநரனயடளைஅ) முறையில்பொ,ருளாதாரத் தேவைகளே சமூக, அரசியல் உறவுகளை நிர்ணயித்ததை சுட்டிக் காட்டுகிறது இது. உயிர் வாழ்தலுக்கான போராட்டம் நிரந்தரமானது என்கிறது.
நில பிரபுத்துவ முறையை, முதலாளித்துவத்திற்கு சமமாகப் பார்க்கிறது. வாழ்வில் உள்ள வர்க்கப் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சித்தாந்தம். சம உரிமை சமுதாயம் அமைந்திட வழி காட்டுகிறது. வர்க்க பேதமற்ற (ஊடயளளடநளள ளழஉநைவல) சமுதாயத்தை அடைய முடியும் போது, எல்லோருக்கும் எல்லாம் பொதுவானதாகி விடுகிறது. ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி என்ற பேதம் மறைகிறது. அனைத்து வளங்களும் சமுதாயத்திற்கே அல்லது அரசுக்கே சொந்தம் என்று பாவிக்கும் சமூக கட்டமைப்பு முறையை வலியுறுத்துகிறது. பொதுவுடைமை சித்தாந்தத்தின் தந்தை - கார்ல் மார்க்ஸ் ஆவார். ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் (1818-1883) பிரடெரிக் ஏங்கெல்ஸ் (1820-1995) ஆகியோர் தொழிலாளி வர்க்க அரசியலுக்கு அறிவியல் அடிப்படையிலான தத்துவத்தை உருவாக்கி உலகிற்கு அளித்தனர். இதுவே பொதுவுடமைக் கொள்கை எனப்பட்டது.தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் விடுதலைக்காகவும் உருவாக்கப்பட்டது. எல்லாமே மாறுபடுகின்றன. மாறாதது எதுவும் இல்லை. மாறுவதே மாறாதது. மாற்றம் சில விதிகளுக்கு உட்பட்டே நடக்கிறது. எதிர்மறைகள் ஒன்றுபடுகின்றன. அதே நேரத்தில் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடுகின்றன. இது போன்ற சில விதிகளின் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படுகின்றது. பணக்கார வர்க்கத்தின் கையில் கட்டுப்பாட்டில் உள்ள வளங்கள் அனைத்தையும் மறுபங்கீடு செய்ய வலியுறுத்துகிறது.
முதலாளி வர்க்கம்:
அதிக விலையுள்ள இயந்திரங்கள் பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க முடியும். பிழைப்புச் சாதனங்கள் அனைத்தும் உற்பத்தி கருவிகளையும் உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருள்களையும் ஏறத்தாழ தங்கள் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ள வர்க்கமே முதலாளி வர்க்கம்.
பாட்டாளி வர்க்கம்:
சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பினை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமே பாட்டாளி வர்க்கமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாட்டாளி தன்னை விற்றுக் கொள்கிறான். தங்கள் வாழ்வுக்கு தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும் பொருட்டு தங்கள் உழைப்பை முதலாளிக்கு விற்கக் கடமைப்பட்டவர்கள். அறவே உடைமையற்ற வர்க்கம். உழைப்பிற்கான விலை அல்லது கூலியானது ஆக குறைந்ததாக வாழ்க்கை பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும். தொடர்ந்து வேலை செய்வதற்கான சக்தியைத் தொழில்களுக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்து போய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய் குறிக்கிறது. பாட்டாளி வர்க்கம் எப்போதும் ஏழ்மையாகவே இருந்துள்ளது.

ஒற்றை வாக்கியத்தில் கூறினால், தனியார் சொத்துடைமை ஒழிப்பதே பொது உடைமை ஆகும். சுரண்டலை எதிர்க்கிறது. மூளை உழைப்புக்கும்ää உடல் உழைப்புக்கும் ஊதியத்தில் பேதமில்லை. ஜனாதிபதியின் சம்பளமும்ää விவசாயக் கூலியின் சம்பளமும் ஒப்பிடப்படும். விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது என வாதிடுகிறது. பெண்களை பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்திற்கு உரியதாகும். எனவே, தனியார் சொத்துடைமையோடு விபச்சாரமும் ஒழிந்து போகும். தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற முயற்சி.
ஆண்டான் - அடிமை, நிலப்பிரபு - பண்ணை அடிமை, முதலாளி - தொழிலாளி,  ஆகியன பொதுவுடைமை சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டு இருக்கும். சுரண்டலை அடியோடு ஒழிக்கும் கருவி பொதுவுடைமைக் கொள்கை ஆகும். மதத்தின் விரோதி என்றும் கூறலாம். தீவிர கடவுள் பக்தர்கள் கூட பொது உடைமை புத்தகத்தை ஆழமாகப் படித்தால் கடவுள் நம்பிக்கை மறைந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மத நம்பிக்கைää பெண் அடிமைத்தனம், ஆகியவை முற்றாக முழுமையாக ஒழியும் என்பதையும்ää மனித வாழ்க்கை மிகுந்த அமைதியும், சுகமும், மகிழ்ச்சியும் உடையதாக இருக்கும் என்கிறது. பெண்கள் ஆண்களைவிட குறைவான தகுதி உடையவர்கள் அல்ல என்பதை வலியுறுத்துகிறது.
தனியாருக்கு சொந்தமான நிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்படுவதுடன், தனிப்பட்ட முதலாளிக்காக அல்லாமல் எல்லோருடைய நலன்களுக்காக செயல்படுத்தப்படும் என்கிறது. கூலி தொழிலாளியின் வரிய நிலைக்கும், தனியார் சொத்துரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகிறது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதும்,ஏழை மேலும் எழையாகும் நிலை பொதுவுடைமை கொள்கையில் இருக்காது. எல்லோரும் சமம் என்கிறது. பொது உடைமைக்கு முதலாளிகள்தான் ஒரே ஒரு எதிரி.
நடைமுறை சிக்கல்கள்:
அடுத்தவரிடம் இருந்து தமக்கு வாங்கித் தருவதை வரவேற்கத் தயாராக அனைவரும் இருந்தாலும், தம்மிடம் உள்ள பொருளை அடுத்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதை எவரும் ஏற்கத் தயாராக இல்லை. உலகில் இதுவரை உண்மையான பொதுவுடைமை சமுதாய அமைப்பு எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனையும் தன் முழு உழைப்பையும் தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு முழுமனதுடன் அளிக்க தயார் செய்வது இதன் முதல்படி. இதில்தான் பிரச்னையே தொடங்குகிறது. அனைத்து மக்களையும் சுயநலமே இல்லாத பொதுவுடமை வாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது பொதுவுடைமைச் சித்தாந்தம்.
தேனீக்களை போல எறும்புகளை போல மனிதர்களையும் சுயநலமில்லாமல் ஆனால் மிகத்திறமையான சுறுசுறுப்பான வேலையாட்களாக மாற்ற முடியும் என்ற பெரும் கனவு இது. தேனீக்களும்ää எறும்புகளும் நாள்பூராவும் கடுமையாக உழைத்து உழைப்பின் பயனை தம் சமூக காட்டிற்கு மனமுவந்து அளிக்கும். அவை அங்கு சேகரிக்கப்பட்டு பிறகு, ஒவ்வொரு தனி உறுப்பினருக்கும் அவரின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படலாம். ஆனால் மனிதர்களிடம் இதே போன்ற தன்னலமற்ற முழு உழைப்பை, தேவைக்கேற்ற ஊதியம் அளித்து பெற முடியாது. சாத்தியமே இல்லை என்பதைத்தான் மனித உளவியலும், வரலாறும் சொல்கிறது.
திறமையாக வேலை செய்பவர்களுக்கும், திறமையில்லாமல் சோம்பேறியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம் நிச்சயமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டால் நன்கு வேலை செய்பவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. தனிமனித வாழ்க்கையில் அதிகமாக தலையிடுகிறது. தனிமனித சுதந்திரம் பறி போகும் நிலை உள்ளது. மத உரிமை மறுக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் இழக்கப்படுகிறது. தனி மனிதனின் திறமைக்கு மதிப்பில்லை. மக்கள் மீதான கட்டுப்பாடும் கண்காணிப்பும் அதிகரிக்கிறது. திறமையுடையவர்கள் தகுதி அடிப்படையில் பதவி அடைவதில்லை.  உணவு, உறைவிடம் கிட்டும் வகையில் குறைவான ஊதியமே அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொள்ளத் தேவையான தொகை மட்டுமே உறுதி அளிக்கப்படுகிறது. பொதுவுடமை கொள்கையில் மேலும்ää முன்னேற்றத்திற்கு வாய்ப்பில்லை. எளிமையான வாழ்க்கையே நடைமுறையாகிறது என்கிற கேள்விகளுக்கு விடையில்லை.

நடைமுறை சாத்தியங்கள்:
படிப்படியாக அதிகரிக்கும் வருமான வரிவிதிப்புää மரபுரிமை சொத்து மீது உயர்வரிகள் மற்றும் தனியார் சொத்துடைமைகளை கட்டுப்படுத்தும் முறை நடைமுறையில் பல நாடுகளில் உள்ளது. ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி மூலமும்ää ஓரளவு நேரடியாக சேமிப்பு பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும்ää நில உடைமையாளர்கள்ää தொழிலதிபர்கள்ää ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாக சொத்துரிமையிலிருந்து விடுவித்தல். தனியார் சொத்துக்களை பறிமுதல் செய்தல்ää அரசின் மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம் பணம் மற்றும் கடன் அமைப்புகள் அரசின் கைகளில் மையப்படுத்துதல். நில வச்சவரம்புää வங்கிகள் தேசியமயமாக்கம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்றவற்றை கூறலாம்.
எல்லாக் குழந்தைகளுக்கும் தேசத்தின் செலவில் கல்வி வழங்குதல்ää மனைவி கணவனை சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும், தகர்த்தெறியும் சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. காந்தியடிகள் பொது உடைமைக் கொள்கையை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் பொதுவுடமை கொள்கை பெரிதும் ஏற்பட்டு விட வில்லை. காரல்மாக்ஸ் அவர்களின் எல்லோர்;க்கும் எல்லாம் என்கிற சிந்தனை வரவேற்கத் தக்கது. பொதுவுடமைக் கொள்கை சித்தார்ந்தம் சம உரிமை சமுதாயம் அமைந்திட வித்திட்ட நல்லதோர் திருப்புமுனை என்பதை மறுக்க இயலாதது.
                                 


No comments: