தமிழ் சினிமா

மெர்சல்


தளபதி படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான். விஜய் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மெர்சல், ரகுமான் இசை, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், வடிவேலு ரீஎண்ட்ரீ என இவை அனைத்தையும் தாண்டி முதன் முறையாக 3 விஜய் நடிக்க, தளபதி தெறியை தொடர்ந்து மெர்சலில் மிரட்டினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

Mersalமருத்துவரான மாறன் சிறந்த மனிதநேய தொண்டாற்றியதற்காக ப்ரான்ஸில் விருது வாங்க செல்கின்றார். அங்கு அவரை சந்திக்கும் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் எங்களுடன் வா என்று கட்டளையிட, விஜய் வர மறுக்கின்றார்.
அதை தொடர்ந்து விஜய்யை விலைபேச நினைக்கும் டாக்டர், ப்ரான்ஸில் நடக்கும் மேஜிக் ஷோவில் கொல்லப்படுகின்றார். இதையெல்லாம் செய்தது யார் என்று காவல்துறை அதிகாரி சத்யராஜ் தேடி வர மாறனாக இருக்கும் பிடிப்படுகின்றார்.
அதே நேரத்த்தில் எஸ்.ஜே.சூர்யா மாறனை யதார்த்தமாக தொலைக்காட்சியில் பார்க்க, அவருக்கு சில நினைவுகள் வந்து உடனே மாறனை கொல்ல கட்டளையிடுகின்றார்.
உடனே அவரின் அடியாட்கள் மாறனை கத்தி முனையில் வைக்க, அதை தொடர்ந்து பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது. எஸ்.ஜே.சூர்யா ஏன் மாறன் விஜய்யை கொலை செய்ய சொன்னார், எதற்கு ப்ரான்ஸில் அந்த டாக்டரை விஜய் கொன்றார் என பல காட்சிகளுக்கான விடை இரண்டாம் பாதியில் தெரிகின்றது.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஒன் மேன் ஷோவாக படம் முழுவதும் காலில் சக்கரம் கட்டி சரவெடியாக வெடிக்கின்றார். ஒரே நேரத்தில் மருத்துவராக இருந்துக்கொண்டு, அப்படியே மேஜிக் செய்யும் காட்சிகள் படத்தில் உண்மையாகவே எத்தனை விஜய் என்று யோசிக்க வைக்கின்றது. இதையெல்லாம் விட தூக்கி சாப்பிடுவது மதுரை தளபதி தான்.
வேஷ்டி, சட்டை என மீசையை முறுக்கி அவர் சண்டைப்போடும் காட்சிகள் ரசிகர்களுக்கு செம்ம விருந்து. படத்தின் கதைக்களம் மக்களின் மிக முக்கியமான தேவைகளின் ஒன்று, அதில் விஜய் போல் மாஸ் ஹீரோ நடிப்பது பட்டித் தொட்டியெல்லாம் இந்த பிரச்சனையை கொண்டு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் படத்தின் பல காட்சிகளில் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்திலேயே தான் வசனங்கள் நிறைந்துள்ளது. ஏன் அட்லீ இப்படி? என்று கேட்க வைக்கின்றது, ஆனால், ‘இன்று சிசேரியன் குழந்தை என்றால் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள், இன்னும் 30 வருடம் கழித்து சுகபிரசவம் என்றால் ஆச்சரியமாக பார்ப்பார்கள்’ என எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனம் தற்போதுள்ள சூழ்நிலையை கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது.
எஸ்.ஜே.சூர்யா இரண்டு சீன் வந்தாலும் சரி, மூன்று சீன் வந்தாலும் சரி தனக்கான கதாபாத்திரத்தில் கலக்கிவிடுகின்றார். ஆனால், அவ்வப்போது ஸ்பைடர் வாசனை வருகின்றது, கொஞ்சம் ரூட்டை மாற்றுங்கள் சார்.
படத்தின் மிகப்பெரும் பலமே மதுரை போஷன் தான். விஜய்க்கும், நித்யா மேனனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி மிகவும் கவர்கின்றது. அதிலும் அவர் நித்யா மேனனிற்கு பிரசவம் நடக்கும் போது தன் மூத்த பையனிடம் கதை சொல்லும் காட்சி செம்ம க்ளாஸ்.
அதே நேரத்தில் படத்தின் நீளம் தான் பெரிய பிரச்சனையாகவே இருக்கின்றது. என்ன தான் காட்சிகள் நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் ஒரு கட்டத்தில் பொறுமையை சோதிக்கின்றது. அதிலும் கிளைமேக்ஸ் எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து பார்முலா.
டெக்னிக்கலாக படம் மிகவும் பலமாக உள்ளது, அதிலும் விஷ்ணுவின் ஒளிப்பதிவு முதல் படம் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாது. ரகுமானின் பாடல்கள், பின்னணி இசை ரசிக்க வைக்கின்றது, ஆளப்போறான் தமிழன் ரிப்பீட் மோட் தான்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் தற்போது நாட்டில் நிலவும் விஷயங்களுக்கு மிக ஏற்ற கதை.
விஜய் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கின்றார். பாடல் காட்சிகளில் எல்லாம் இந்த வயதிலும் நடனத்தில் தூள் கிளப்புகின்றார்.
மதுரை ப்ளாஷ்பேக் காட்சிகள். விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ரகுமானின் இசை

பல்ப்ஸ்

சத்யராஜ், காஜல், சமந்தா இவர்கள் எல்லாம் படத்தில் இருக்கின்றார்கள். ஆனால், ஏன் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மட்டுமில்லை இயக்குனரே மறந்துவிட்டார்.
வடிவேலுவின் எந்த ஒரு காமெடி காட்சியும் பெரிதும் க்ளிக் ஆகவில்லை.
படத்தின் நீளம், இன்னும் கொஞ்சம் காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் மெர்சலில் விஜய் சொன்னது போல் அவர் மிரட்டிவிட்டார், ஆனால், அட்லீ மிரட்டவில்லையே...
Direction:
Production:
நன்றி  CineUlagam 

No comments: