.
அவுஸ்ரேலியாவில் சிறந்த கவிஞர்களை தேர்ந்தெடுப்பதற்காக Australian Poetry Slam champion போட்டி வருடா வருடம் இடம் பெற்று வருகின்றது. கடந்த பதின்நான்கு வருடங்களாக இப் போட்டி இடம்பெறுகின்றது. நாடு பூராகவும் நகரங்களிலும் , மாநகரங்களிலும் , மாகாணங்களுக்கிடையிலும் இறுதியாக தேசிய ரீதியிலும் இந்தப் போட்டிகள் நடத்தப் பட்டு வருகின்றது. 2017 ம் ஆண்டுக்கான தேசிய ரீதியிலான போட்டி சென்ற ஞாயிற்றுக் கிழமை 15.10 2017 அன்று சிட்னியின் புகழ் பூத்த Sydney Opera House stage இல் இடம் பெற்றது. இதில் சிட்னியில் வசிக்கும் இளம் தமிழ்ப் பெண்ணான செல்வி ஸ்ரீஷா ஸ்ரீதரன் 3 ம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 22 வயதான செல்வி ஸ்ரீஷா ஸ்ரீதரன் சிட்னியில் நடந்த Australian Poetry Slam champion போட்டியிலும் NSW வில் நடந்த போட்டியிலும் முதலாம் இடங்களில் வெற்றிபெற்று தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவாகிஇருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தப் போட்டியில் அவர் பாடிய கவிதையில் இன, நிற , மொழி , கலாசார வேறுபாடுகளின் வலி பற்றியும் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்த மக்களின் வலிகள் பற்றியும் கவிதையில் சாடியிருந்தார். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிஞர்கள் பங்கு பற்றிய இந்த போட்டியில் இளம் தமிழ்ப் பெண்ணான செல்வி ஸ்ரீஷா ஸ்ரீதரன் 3 ம் இடத்திளலும் பன்னிரண்டு வயதான Solli Raphael முதலாம் இடத்தையும் தட்டிக் கொண்டார்கள்.
சென்ற செவ்வாய்க் கிழமை ABC தொலைக் காட்சி இவரை பேட்டி கண்டு ஒளி பரப்பியது. புதன் கிழமை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செ.பாஸ்கரன் தொகுத்து வழங்கும் புதன் இரவில் மலரும் மெட்டுக்கள் நிகழ்வில் இவரின் பேட்டி ஒன்று இடம் பெற்றது.
எமது சமூகம் தாண்டி தேசிய ரீதியிலான கவிதைப் போட்டியில் பங்குபற்றி 3ம் இடத்தில் வந்தது மிகப் பெரிய வெற்றியாக கருதப் படுகிறது. இவருடைய வெற்றி தமிழ் சமூகத்திற்கான வெற்றியென கருதப் படுகிறது . இவரின் தந்தையார் ஸ்ரீதரன் திருநாவுக்கரசு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒரு அறிவிப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
செல்வி ஸ்ரீஷா ஸ்ரீதரன் அவர்களை தமிழ்முரசு அவுஸ்ரேலியா வாழ்த்துகிறது .

No comments:
Post a Comment