16வது தமிழ் இணைய மாநாடு இன்று கனடாவில் கோலாகல துவக்கம்

.
இந்த மாநாடு வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .

அனைவருக்கும் வணக்கம்
இன்னமும் சிறிது நேரத்தில் கனடாவில் உத்தமத்தின் 16வது தமிழிணைய மாநாடு துவங்கிட உள்ளது. இந்நேரத்தில் தமிழ் கணிமைக்காக உழைத்த அனைவரையும் நான் நினைவில் வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமானது,
தொழில்நுட்ப உலகில் கணினியில் தமிழை எப்படி கொண்டுவருவது என்ற பணிகள் ஆரம்பத்திலயே துவங்கிவிட்டது. பிக்சல், பிட்மேப், TTF, OTF, WOFF, EOT , SVG என கணினி எழுத்துருவில் பலமாற்றங்கள் வந்தபின்னரும் அனைத்து வடிவிலும் தமிழ் எழுத்துருக்களை முதலில் மேசை கணினிகளிலும், பின்னர் இணையத்தில் அதன் பின்னர் செல்பேசிகளில் தமிழை கொண்டுவரும்படி உருவாக்கி வெளியிட்டனர்.
பின்னர் யுனிகோடு வந்தபின்னர் யுனிகோடுக்கு ஏற்றவாறும் பல்வேறு எழுத்துருக்களையும், அதோடு மென்பொருள்களையும், இயங்கு தளங்களையும் தமிழில் கொண்டு வந்தனர்.



பின்னர் எழுத்துருக்களை ஒரு தரத்திலிருந்து இன்னொரு தரத்திற்கு மாற்ற உதவும் பான்ட் கன்வெர்டர் பெரும் உதவியாக இருந்தது பின்னர் இணையத்தளங்களையே ஒரு தரத்திலிருந்து இன்னொரு தரத்திற்கு மாற்றிப்படிக்கும் வகையில் பயன்பாடுகள் வடிவமைக்கப்பட்டன.
முதலில் இ-கலப்பை, அழகி, என்எச்எம் ரைட்டர், மாடுலர், மென்தமிழ் , விசைத்தமிழ், பொன் மொழி போன்ற பல வகையான தமிழ் தட்டச்சு மென்பொருள்களால் இன்று தமிழ் இணையம் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது
பின்னர் இணையத்தளங்களில் நேரடியாக தமிழை தட்டச்சு செய்ய உதவும் தட்டச்சு மென்பொருள்கள் பயன்பாட்டில் வந்துள்ளது. பின்னர் தமிழ் பிழைத்திருத்த மென்பொருள்கள் வடிவாக்கம்பெற்று இன்று ஓரளவு பரவலாக பயன்பாட்டில் உள்ளன.
தமிழ் எழுத்துணர்வியும் பயன்பாட்டில் வந்து தற்போது கூகிள் நிறுவனத்தின் எழுத்துணர்வியும் பயன்பாட்டில் வந்துள்ளது.
தற்போது தமிழில் உரையிலிருந்து ஒலி மற்றும் ஒலியிலிருந்து உரை ஆகியவையும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
ஆக 1985 ல் இன்று வரை 32 வருடமாக தமிழ் மொழியில் கணினியில் வளர பெரும்பாடு பட்டவர்கள் அதிகம், அதை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தவர்கள் மிக அதிகம்.
குறிப்பாக திரு.ஆதமி சீனிவாசன், கல்யாணசுந்தரம், முத்து நெடுமாறன், நா. கோவிந்தசாமி , அழகி மென்பொருள் உருவாக்கியவர்கள், சர்மா சொல்யூசன்ஸ், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தெய்வசுந்தரம், பேராசிரியர் ராமகிருஷ்ணன் , உமர், முகுந்த் மற்றும் தமிழா குழுவினர், தகடூர் கோபி, துரைபாண்டி , கேடுகிராப் ஏ,இளங்கோவன், மாடூலர் இன்போடெக் , அனு கிராபிக்ஸ், பத்ரி மற்றும் கேஎஸ்.நாகராஜன், பேராசிரியர் எஸ்எஸ்என் நாகராஜன்,நீச்சல்காரன், மு.சிவலிங்கம், முத்து(எழில்) உட்பட இன்னமும் பலரும் ஆர்வமாக பலதரப்பினரும் தமிழுக்காக பணியாற்றியவர்கள் (யாருடைய பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)
மேலும் தமிழை எல்லா துறைகளிலும் கொண்டு செல்லவும் பலரும் முயற்சித்துவருகின்றனர்.
அவர்கள் அனைவருக்கும், தமிழ் கணிமைக்கான தேவையை அறிந்து உத்தமத்தினை ஆரம்பித்த அனைவருக்கும்,
16வது தமிழிணைய மாநாடு நடைபெறும்சமயத்தீில் அவர்கள் அனைவரையும் நாம் நினைவில் நிறுத்தி நன்றிகள் கூறுவது மிக அவசியம்.
ஒரு அமைப்பு 20 ஆண்டுகளாக மாநாடுகளை நடத்துவது என்பது மிகச்சாதாரணமானது அல்ல, அது ஒரு அரிய பணி, அதை இன்று வரை உத்தமம் அமைப்பு தொடர்ந்து செய்துவருகிறது.
உத்தமத்தின் எல்லா மாநாடும் ஒரு மையப்பொருளை மையமாக வைத்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, அந்த கருப்பொருளை ஒட்டி தமிழுக்காக புதிய ஆய்வுகள் பெருகிவருகின்றன,. . அதேபோல் கனடாவில் இன்னமும் சிறிது நேரத்தில் துவங்கப்பட உள்ள 16வது தமிழ் இணைய மாநாடும் அதன் மையப்பொருளை வைத்து இன்னமும் புதிய ஆய்வுகளும் அதன் பணிகளும் மிகச்சிறந்த வெற்றிபெறும்.


M.S.Murali (B+ve)

No comments: