படிக்காதீர்கள்! - ப்ரணா


Image result for manjal vaanam

.
என் எண்ணத்திற்கு எதிராகவே
இயங்குகிறேன் நான்

எதையெல்லாம்
எழுதக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதையெல்லாம் எழுதுகிறேன்

எதைப் பேசக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதைப் பேசிவிடுகிறேன்

எதை மறக்க நினைக்கிறேனோ
அதை மறக்காது நினைக்கிறேன்

எதை விருப்பக்கூடாதென்று விரும்புகிறேனோ
அதை விரும்புவதையே விரும்புகிறேன்

எதன் மீது அக்கறை கொள்ளக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதன் மீதே அக்கறை கொள்கிறேன்

‘படிக்காதீர்கள்’ என்று சொல்லியும்
இதைப் படித்த
உங்களைப் போல்!

No comments: