நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டு சிட்னி முருகன்
ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது என்பதை நாம் அனைவரும்
அறிவோம்.திருவிழாவை ஆகம விதிப்படி நடத்த வருகை தந்து சிறப்பித்தார் நயினை
நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ வாமதேவ குருக்கள் அவர்கள்.
சிட்னி துர்கையம்மன் ஆலய குடமுழக்கிற்கும் இவர் வருகை புரிந்து
இருந்தார்.குருக்கள் அவர்கள் ஒரு அன்பரின் "Youtube Channel" ஒரு சிறப்பு
கலந்துரையாடல் அளித்து இருந்தார்.அதில் அவர்கள் சிட்னி தமிழ் சமூக
அன்பர்களுக்கு நிறைய ஆசிகளையும் தமிழர்கள் தமிழை காக்க வேண்டும் என்ற
கடமையையும் அறிவுறுத்தினார்கள்.கூடவே புலம்
பெயர்ந்த நாடுகளில் தமிழர் ஆலயங்களில் ஓதுவார்கள் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு ஒரு பதில் அளித்து இருந்தார்.அவரது கருத்தின்படி ஓதுவார்கள் தேவை இல்லை.ஓதுவார்கள் வந்தால் பிள்ளைகள் பஞ்ச புராணம் பாடும் வாய்ப்பை இழப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பெயர்ந்த நாடுகளில் தமிழர் ஆலயங்களில் ஓதுவார்கள் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு ஒரு பதில் அளித்து இருந்தார்.அவரது கருத்தின்படி ஓதுவார்கள் தேவை இல்லை.ஓதுவார்கள் வந்தால் பிள்ளைகள் பஞ்ச புராணம் பாடும் வாய்ப்பை இழப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஐயா
கூறுவது அனைவர்க்கும் பொருந்தும் தானே.ஐயாவின் வருகையால் ஆலயத்தில் பணி
புரியும் ஏனைய குருக்கள்களின் வாய்ப்புகள் பறிக்க பட்டதே.தமிழ்
சீறார்களிடையே தேவாரம் பாடும் மரபை காப்பாற்றுவது பற்றி குரல் கொடுத்த ஐயா
அவர்கள் சிட்னி வாழ் அந்தண சீறார்களுக்கு வடமொழி , ஆகமம் ஆகியவை கற்பிப்பது
பற்றி ஏன் எதுவும் பேசவில்லை? அவர்களும் அதை எல்லாம் கற்று உய்ய வேண்டாமா?
எல்லா காலத்திலும் தாயகத்தில் இருந்து குருமார்களை வரவழைப்பது சாத்தியம்
இல்லை தானே?
உண்மையில்
இவர்களுக்கு திருமுறைகளின் பால் பற்றா அல்லது ஓதுவார்கள் மீது வெறுப்பா
என்று முருகன் தான் அறிவான்.ஆகமம் கற்ற சிவாச்சாரியார்கள் ஒரு காலத்தில்
ஓதுவார்களை மனமுவந்து ஆதரித்தார்கள்.தமிழத்தில் உள்ள லால்குடி
சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் ஓதுவார்கள் இல்லாததை கண்டு வருத்தமுற்று அந்த
ஆலயத்தின் அர்ச்சகர் தேஜோவிடங்க சிவாச்சாரியார் என்பவர் தம் சொந்த செலவில்
நிலம் வாங்கி அதை இரண்டு ஓதுவார்களுக்கு நிவந்தமாக விட்ட செய்தியை அவ்வாலய
கல்வெட்டு நமக்கு தெரிவிக்கிறது.
ஓதுவார்களை
பணியமர்த்தினால் சீறார்களிடையே திருமுறை வளராது என்று கருத்து ஒரு வெறும்
பேச்சு.மிக சிறிய நாடான் சிங்கப்பூரில் மட்டும் மாரியம்மன் , முனீஸ்வரன்
கோவில் முதல் சிவன் கோவில் வரை பல ஓதுவார்கள் நியமிக்க
பட்டுள்ளார்கள்.அங்கே எல்லாம் குழந்தைகளிடம் திருமுறை பரவாமல் அழிந்து
விட்டதா? உண்மையில் அங்கே திருமுறையும் தமிழும் நன்கு செழித்தே
இருக்கின்றது.சிறார்களும் முறையாக பண்ணிசை கற்று தேர்ந்து
வருகிறார்கள்.வாரந்தோறும் ஐந்து பேருந்துகளில் பிள்ளைகள் அழைத்து வரப்பட்டு
அவர்களுக்கு பண்ணிசை பயிற்சி அளிக்கப்படுகிறது.சிங்கப்பூரில் மட்டும் ஏழு
கோவில்களில் ஓதுவார்கள் தொண்டு செய்கிறார்கள்.அதன் விபரம்,
1.டேங்க்ரோடு,தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்
பட்டீச்சரம் வைத்தியநாதன் ஓதுவார்,
2.சிலோன்ரோடு,செண்பகவினாயகர் திருக்கோயில்
ச.பாலமுருகன் ஓதுவார்
3,சவுத்பிரிட்ஜ் வே மாரியம்மன் கோயில்
வெங்கடேசன் ஓதுவார்
4. கிளாங் சிவன்கோயில்
இராகவன் ஓதுவார்
5,லிட்டில் இந்தியா வீரகாளியம்மன் கோயில்
சுந்தரமூர்த்தி ஓதுவார்
6,டெப்போ ரோடு ருத்ரகாளியம்மன் கோயில்
மணிகண்டன் ஓதுவார்
7,குயின்ஸ் வே முனீஸ்வரன் கோயில்
இராமகிருஷ்ணன் ஓதுவார்
தமிழை
அடிப்படையாக கொண்டு இயங்கும் தமிழர் ஆலயங்களில் தமிழ் தலை குனிந்து தான்
நிற்கிறது.சிட்னி முருகன் ஆலய பெருவிழாவில் பாடிய பெண்கள் இருவர்
சிரித்துக்கொண்டே பாடினார்கள்.ஒரு நாள் ஏராளமான உச்சரிப்பு தவறுகள்
இருந்தது.எப்படி சிவாச்சாரியார்கள் தான் மந்திரம் சொல்லி பூசை செய்ய
வேண்டும் என்று அதிகாரம் செய்கிறார்களோ அதே போல் ஒதுவார்கள் தான் இறைவன்
சந்நிதியில் திருமுறை பாட வேண்டும் என்று எல்லாம் அவர்கள் அடம் பிடிப்பது
இல்லை.அவர்கள் பிள்ளைகளை நன்கு பயிற்றுவித்து பாட வைத்து அழகு
பார்ப்பார்கள்.அதனால் ஓதுவார்கள் வந்தால் உங்கள் வீட்டு பிள்ளைகளின்
திருமுறை பாடும் வாய்ப்புகள் பறி போகும் என்று ஒரு நாளும் என்ன
வேண்டாம்.அது ஓதுவார்களின் நோக்கமும் கிடையாது.வெள்ளிக்கிழமை , மற்ற விசேட
தினங்கள் , திருவிழா நாட்கள் என்று தேவாரம் பாட நிறைய அடியார்கள்
இருக்கிறார்கள்.ஆனால் சாதாரண நாட்களில் தேவராம் பாட ஆட்கள் இல்லை என்பதே
நிதர்சனம்.இது போன்ற சூழல்களில் ஓதுவார்கள் அத்தொண்டினை
செய்வார்கள்.முருகனுக்கு ஐந்து கால பூசையின் பொழுது தமிழும் அவனுக்கு தேவை
இல்லையா?
ஓதுவார்களை
தமிழ் சமூகம் சரியாக கொண்டாட வில்லை.அதன் பயனாக தான் இன்று ஓதுவார்கள்
அறுகிவிட்டார்கள்.தருமை ஆதீனம் திருமுறை பாடசாலையை மூடி விட்டது.ஓதுவார்கள்
நியமிக்க பட்டால் தமிழ் வளரும்.மாணவர்கள் பயன் பெறுவார்.சீறார்கள் முறையாக
பண்ணிசை பாட பழகி கொள்வார்கள்.
வாழ்க தெய்வத் தமிழ்!!!!
No comments:
Post a Comment