Parramatta Centinary Square இல் தைப்பொங்கல் விழா

.

New South Wales மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான Parramatta மாநகரில், அவுஸ்திரேலியாவில் புதிதாய் குடியேறியவர்களும் - அவர்களை வழிநடத்தும் நிறுவனங்களாகிய Community Migrant Resource Centre, Settlement Services International, Marist 180, Jesuit Refugee services மற்றும் தமிழ் நலன் விரும்பும் சங்கங்களான அன்பாலயம், தமிழ் மகளிர் அஅபிவிருத்தி குழு, Recover, தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், அவுஸ்திரேலிய கம்பன் கழகம் என்பன இணைந்து நடாத்தும் மாபெரும் தைப்பொங்கல் விழா,

எதிர்வரும் தைத்திங்கள் 21ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாவிலை  தோரணங்கள் சலசலக்க, மங்கள நாதஸ்வரம் முழங்க Parramatta Centinary Square இல் 
தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் தைப்பொங்கல் விழா கொண்டாட அனைத்து தமிழர்களையும்  சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினராகிய நாங்கள் அன்போடு வருக வருக என்று  அழைக்கின்றோம்.  


இந்நிகழ்வில் - நிகழ்வினை நடாத்தும் துணைநிறுவனங்களின் பிரதான முகாமையாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு உரையாற்றுவதுடன் ஶ்ரீமதி யசோதா பாரதியின் மாணவர்களின் நடன  நிகழ்வும், Recover இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சியும், ரங்கநாதன் ஆசிரியரின் ஆக்கத்தில் உருவான சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினரின் "நீதி கேட்ட சோழ நங்கை" எனும் நாடகமும் Parramatta நகர சபை மண்டபத்தில் இடம் பெறும் என்பதனை பெருமகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்.

அனைத்து விருந்தினர்களுக்கும் புது அரிசிப்பொங்கலுடன் சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு
Conscila Jerome - CMRC - 0425 233 435
Dhushyanthan Kailanathan - Marist 180 - 0408 459 102
Matthew - JRS - 0411 670 734
Case Managers - SSI - 02 8799 6700
Selvarajee Ranganathan - Meet & Greet - 0469 427 599 
ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளுங்கள்

No comments: