தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு
5 பொலிஸாருக்கு மரணதண்டனை.!
கஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம்
பெற்றோர் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்
ஜோசப் பராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள்
இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலியா.!
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு
10/01/2017 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43ஆவது நினைவுதினம் யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த படுகொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சட்டத்தரணியால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் மலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இவ் அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், விந்தன் கனகரட்னம், சிவசேனை கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட அதிதிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1974 ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
5 பொலிஸாருக்கு மரணதண்டனை.!
10/01/2017 இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கி மரணத்தை ஏற்படுத் தியமை மேலும் நான்கு இளைஞர்களை தாக்கி காயப்படுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 4 பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 2014 மே 7 ஆம் திகதி காலப்பகுதியில் மீகஹகியுல கொஸ்பாம் ஹிங்குருகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்ஹேவகே சத்துன் மாலிங்க என்பவரை தாக்கி கொலை செய்தமை மற்றும் நான்கு பேரை தாக்கி காயப்படுத்தியமை தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜி.சோமரத்ன, பி.டி. குமாரகமகே, எஸ்.எம்.ஆர். புஸ்பகுமார, பி.எம்.கிரேஸன் அபேரட்ண, டி.எம். விஜயரட்ரை பொலிஸ் உதவியாளர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.எம். ஜயசுந்தர ஆகியோருக்கே மரண தண்டனை அழிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
சுமார் 52 பக்கம் கொண்ட அறிக்கையை வாசித்த பின் நீதிபதி ரொஹான் ஜயவர்த்தன மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
கொலை செய்யப்பட்ட நபரும் மற்றும் நால்வரும் போகாலந்த பகுதிக்கு முச்சக்கர வண்டியொன்றை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்தவர்கள். ஆனாலும் அங்குச் சென்ற பொலிசார் மேற்படி ஐவரும் சட்ட விரோதமான முறையில் புதையல் தோன்ற முட்பட்டதாக கூறி மேற்படி ஐவரையும் கைது செய்து கடுமையாக தாக்கி ஒருவருக்கு மரணம் சம்பவித்து மற்றைய நால்வருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தனர் என சாட்சிகள் மூலம் தெரிய வருவதாக கூறிய நீதிபதி எவ்வித புதையல் தோன்றுவதற்கான எவ்வித உபகரணங்களையும் கொண்டு சென்றதாக கூறி எவ்வித உபகரணங்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை.
மற்றும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி மேற்படி பிரதேசம் புதைபொருள் உள்ள பிரதேசம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தாக்கப்படும்போது ஏனைய பொலிஸ் கான்ஸ்டபில்கள் எவரும் அவரைக் காப்பாற்ற எவ்வித முயற்சிகளும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
பதுளை நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையில் மேற்படி உயிரிழந்த நபர் தடியினால் தாக்கப்பட்டமையினால் அவரது இதயப்பகுதி உள்ளிட்ட பிரதேசத்தில் உட்காயங்கள் 8 காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் மேற்படி சம்பவத்துடன் தொடர்பான பொலிஸ் கான்ஸ்டபில்களுக்கு தண்டனை கோவை 294 படி மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்த நீதிபதி இறுதியாக மேற்படி பொலிஸ் கான்ஸ்டபில்களிடம் ஏதாவது கூற இருக்கின்றதா என வினவினார். அதற்கு அவர்கள் தாம் ஒவ்வொருவரும் நிரபராதிகள் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்குவதாகவும் தெரிவித்து மேற்படி ஐவருக்கும் மரண தண்டனை விதித்தனர். நன்றி வீரகேசரி
கஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம்
09/01/2017 கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து ஆயிரத்து இருநூறு கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் கிளிநொச்சிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி இருந்தனர்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மன்று சந்தேக நபரை வினவிய போது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு பட்பைப்பதாகவும் திறந்த மன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பதிவு மற்றும் ஆலயத்தை சோதனையிட மன்று வழங்கிய உத்தரவுக்கு அமைய கிளிநொச்சிப் பொலிசார் மற்றும் கரச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் கிராம அலுவலர் கின்சான்கொல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரெயிநோலட் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்இ இருப்பினும் எவ்விதமான சந்தேகத்திற்குரிய பொருட்களும் மீட்க்கப்படவில்லை.
அத்துடன் குறித்த ஆலயம் பதிவற்ற ஆலயம் என்பதுடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
பெற்றோர் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்
09/01/2017 வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுட்டனர்.
குறித்த பாடசாலையில் 538 இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர். பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது.
பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப்பற்றாக்குறை என்பன காரணமாக மரநிழல்களிலும், நிலத்திலும் இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே, மாகாண, மத்தி அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்வி உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், கிராமப் புறப் பாடசாலைகளை புறக்கணிக்காதே, கல்வி அமைச்சரே எமது பிள்கைளின் எதிர்காலத்தை பாழாக்காதே, நல்லாட்சி அரசே எமது பிள்கைளை படிக்கவிடு' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களும் எழுப்பினர்.
இதேவேளை, இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிடின் தாம் எதிர்வரும் நாட்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் பேவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் மஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
ஜோசப் பராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!
09/01/2017 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தக்; கொலைச்; சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார். நன்றி வீரகேசரி
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள்
11/01/2017 நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 3 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளில் நீதியும் உண்மையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் அபிலாசைகளாக காணப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டிலும் இந்த பரிந்துரைகளே போன்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலியா.!
11/01/2017 வடக்கு கிழக்கு மகாணங்களில் சுற்றுளாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் அவுஸ்திரேலியாவினால் 1.6 பில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக திறனபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment