.
ஐரோப்பிய நாடுகள் மறுமலர்ச்சியை அடுத்து பின்பற்றிய குடியேற்றக் கொள்கையினால் பல நாடுகள் கைப்பற்றப்பட்டு சில நூற்றாண்டுகள் ஆதிக்கத்திற்கு உட்ப்படுத்தப்பட்டு பின்பு சுதந்திரமும் வழங்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் பிரான்ஸ் ஸ்பெயின் போர்ட்ச்சுக்கல் நெதர்லாந்து முதலான நாடுகள் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்காசிய நாடுளை காலனித்துவத்திற்கு உட்படுத்தின.
குடியேற்றவாதம் பொதுவாக குடியேறுபவர்களுடைய பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உள்@ர் மக்களுடையவற்றை காட்டிலும் மிக உயர்ந்தவை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழக்கம். வலிமை பொருந்திய ஐரோப்பிய நாடுகளிடம் துப்பாக்கி பீரங்கி கட்டுக்கோப்பான ராணுவம் மற்றும் நவீன கப்பல்படை இருந்தது. வறிய நாடுகளை ஆக்கிரமித்தன. முதலாளித்துவ காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் இரும்புக் கரங்களின் பிடியில் பல நாடுகள் சிக்கிக் கொண்டன.
இன்று மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய சக்திகள் பலாத்காரமாக பிடித்து வைத்து அவற்றின் வளங்களை சுரண்டிய காலனித்துவ காலகட்டம் நீடித்தது பல நூற்றாண்டுகள் ஆகும். 16ம் நூற்றாண்டில் தொடங்கிய காலனி ஆதிக்கம் 20-ம் நூற்றாண்டின் முற்பாதி வரை நீடித்தது. காலனி நாடுகளை பிடிப்பதில் பிரிட்டன், போர்ட்சுகல் பிரான்சு ஸ்பெயின் ஆகிய நாடுகள் வெகுவேகமாக தீவிரமாக செயல்பட்டன. சீனா ஜப்பான் போன்ற நாடுகளை ஐரோப்பிய சக்திகளால் நெருங்கவோ, அடிமைப்படுத்தவோ இயலவில்லை. அமெரிக்காவும் கூட பிரிட்டிஷ் காலனியாகத்தான் முதலில் இருந்தது. ஆஸ்திரேலியாவை பிரிட்டன் அடிமைப்படுத்தியது. பிரான்ஸ் நாட்டிற்கும் பாண்டிச்சேரிக்கும் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு.
காலனித்துவத்தின் நோக்கம்:
குடியேற்றப் பகுதிகளின் நிலங்கள், வளங்கள், மனிதஉழைப்பு, சந்தைகள் முதலானவற்றில் ஆதிக்கம் செலுத்துவதே காலனித்துவத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. வறுமை, பஞ்சம் என்கிற நாடுகளில்தான் உலகையே விலை பேசும் செல்வங்கள் அதன் பூமிக்கு அடியில் இருக்கின்றன. இயற்கை வளங்கள் மூன்றாம் உலக நாடுகளில் ஏராளமாக உள்ளதை அறிந்த ஐரோப்பிய சக்திகள் தமது காலனி நாடுகளை மேற்கத்தியமயமாக்குவதிலும், தங்களது மதத்தை நிலைநாட்டுவதற்கும் தெளிவான இலக்குடன் எல்லா வகையிலும் பன்முக முயற்சி மேற்கொண்டனர். தங்களை நாகரீகமான மக்களாக காட்டிக்கொண்டார்கள். காலனிநாடுகளில் எதிர்ப்பு காட்டிய உள்@ர்வாசிகளை, பழங்குடியினரை பகைமையுடன் மோதி அழித்தார்;கள்.
காலனி நாடுகளில் தங்களது வணிக மையத்தை நிறுவியதுடன்ää அவர்களுடைய கலாச்சாரத்தில் பழக்க வழங்கங்களில் மெதுவாக ஊடுருவி தங்களது அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். அமெரிக்காவில் தங்க வேட்டையாடினார்கள். ஜரோப்பாவில் சமய தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக காலனி நாடுகளுக்கு புறப்பட்டவர்களும் உண்டு. ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப்பின் குறைந்த கூலிக்கு சுரண்டப்பட்ட பணியாட்கள், வேலையற்றவர்கள், நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களை நாடு கடத்த காலனி நாடுகள் தேவைப்பட்டன. அமெரிக்கப் புரட்சிக்குப்பின், அமெரிக்க காலனி பகுதிகள் சுதந்திரம் பெற்றன. இதன் பின்னர்தான் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தங்கள் நாடுகளை பிடித்தனர். தங்களது தாய்நாட்டில் ஏற்பட்ட அதிக மக்கள் தொகை, பொருளாதார வேறுபாடுகள், சமூக அமைதியற்ற நிலை, சமயவாதிகளின் கடும் தண்டனை போன்ற காரணங்களால் காலனித்துவம் அமைக்கப்பட்டது. அவர்களிடம் நவீன போர்க்கப்பல்கள் இருந்தன. துறைமுகங்களை கட்டமைத்தனர். வணிக சந்;தைகள் தேவைப்பட்டன. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இருந்தது. இதன் காரணமாகவும் காலனி ஆதிக்கம் ஏற்பட்டது.
காலனித்துவத்தின் விளைவுகள்:
காலனி நாடுகளில் உள்@ர் மொழிகளில் அன்னியமொழி கலப்பு ஏற்பட்டது. மன்னராட்சி முறையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் முகலாய மன்னர்களின் 600 வருட கால ஆட்சியை 1857-ல் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. கடல் கடந்து வெகு தொலைவில் இருந்த போதிலும் காலனி நாடுகளால் ஜரோப்பிய நாடுகளுக்கு பலன்கள் கிடைத்தன. மாறுபட்ட இனத்தை, மாறுபட்ட மொழியை, மாறுபட்ட கலாச்சாரம், பண்பாடு உடையவர்களிடம் தங்களது ஆதிக்கத்தை செலுத்தினர். காலனி நாடுகளின் காடுவளம் சு10ரையாடப்பட்டது. சாகுபடி நிலங்கள் ஏற்படுத்தப்பட்டன. காலனி மக்களை அடிமைகளாக்கி குறைந்த கூலிக்கு வேலை வாங்கினர். கட்டிடங்கள் ஐரோப்பிய பாணியில் எழுப்பப்பட்டன. காலனி நாடுகளில் உள்ள முக்கிய பகுதிகளுக்குää தெருக்களுக்கு கட்டிடங்களுக்கு நிலைத்த ஆங்கிலப் பெயர்களை சு10ட்டினர். அது இன்றும் காண முடிகிறது. விலை மதிப்பில்லாத பொருட்கள் எல்லாம் காலனி நாடுகளில் இருந்து அபகரிக்கப்பட்டு ஐரோப்பியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
காலனித்துவ ஆட்சியாளர்களால் கலாச்சார சீரழிவுகள் ஏற்படத் தொடங்கியது. அதாவது அடிமைப்பட்டதால் தன் நாட்;டிற்கே உரித்தான பழக்க வழக்கங்கள் மொழி, மத நம்பிக்கைகள் போன்றவற்றில் தங்களது சுயத்தினை சற்று இழக்க நேரிட்டது. மதம் மாறியவர்கள் தங்களது பெயர்களில் ஐரோப்பிய பெயர்களை இணைத்துக் கொண்டனர். உடை அமைப்பும் மாறியது. பராம்பரிய உடையை புறக்கணித்து, பேண்ட், சர்ட், கோட் என மாறினர். உணவு பழக்க வழக்கங்கள் மாறத் தொடங்கியது. ஆங்கில மொழி ஊடுருவியது. மதமாற்றங்கள் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில், பிரிட்டிஷ்காரர்கள் தங்களது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள பூர்விக மக்களை அழிப்பதற்கு பல வழிகளை கையாண்;டார்கள். இவர்கள் உருவாக்கிச் சென்ற கல்விமுறை அந்நியருக்கே பயன்படும் வகையில் இருந்தது. காலனித்துவ நாடுகளின் வளங்களின் மீதான சுரண்டல் சர்வ சாதரணமாக மேற்கொள்ளப்பட்டது.
ஒரு பக்கம் பாலியல் வன்முறையும், படுகொலைகளும் நிகழ்ந்தன. சொந்த நாட்டிலேயே அந்நியருக்கு அடிமைகளாக மாறினர். அந்நியர்கள் தங்களது பண்பாட்டை பகிர்ந்து கொண்டனர். கண்டிப்பான அரசாங்கக் கட்டுப்பாடு நிலை நிறுத்தப்பட்டது. காலனி நாடுகளில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கு ஊக்குவிக்கப்பட வில்லை. தங்களது பொருளாதார மேம்பாட்டிற்காக காலனி நாடுகளை பயன்படுத்தினர். இவற்றுடன் இனப்பிரச்சினைகள், சமூகப் பிணக்குகள். முதலானவற்றை ஏற்படுத்தியமை இவர்களின் முக்கிய தந்திரமாகும். இவர்கள் நாட்டினை விட்டுச் சென்ற போது பிணக்குகளை உருவாக்கிச் சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
விடுதலை இயக்கங்களின் எழுச்சி:
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற இரு பேரழிவு உலக யுத்தங்கள் காலனித்துவ சக்திகளை நலிவடையச் செய்தன. ஏறத்தாழ முற்றாக தரைமட்டமாயின. காலனி நாடுகளில் விடுதலை இயக்கங்கள் எழுச்சி பெற்றன. காலனித்துவ சக்திகள் அகன்று சென்ற காலமே விடுதலை என்று பொதுவாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. எனினும், சுகாதாரம், கல்வி,அறிவியல், தொழில்நுட்பம் சட்டம் என அனைத்து துறைகளிலும் காலனிய வாதிகள் என்னென்ன அமைப்பு முறைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்களோ அவற்றையே இவ்விடுதலை இயக்கங்களும் தக்க வைத்துக் கொண்டன.
குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப்பின் போராட்டங்கள் அதிகரித்தன. வன்முறைகள் அதிகரித்தன. காலனித்துவ நாடுகளில் மக்கள் ஒன்று திரண்டு சுதந்திரத்திற்காக போராடினர். காலனி நாடுகள் சுதந்திரத்தை பெற்றன. இன்று காலனித்துவம் நடைமுறையில் மிக அரிதாகவே உள்ளது. காலனித்துவம் பாவகரமானதாக கருதப்படுகிறது.
பரம்பரை பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவற்றில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது காலனித்துவம். தங்கள் தேச அடையாளத்தை இழப்பது பெரும் தோல்வியாக ஒரு நாட்டிற்கு கருதப்படுகிறது.
ஒரு நாட்டை அடிமையாக்குவதற்கு இரு முறைகள் கையாளப்பட்டது. ஒன்று போர், மற்றொன்று கடன் வழங்குவது ஆகும்.
காலனித்துவத்தாலும், அந்நிய படையெடுப்புகளாலும், காலனி நாடுகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன. நாட்டு குடிமக்கள் நீண்ட காலத்திற்கு அதன் வலி வேதனையை அனுபவித்தனர். வலி மிகுந்த சில நினைவுகள் வரலாற்றில் என்றும் மறக்க முடியாதது ஆகி விடுகிறது.

No comments:
Post a Comment