உலகச் செய்திகள்


மோடிக்கு பன்னீர்செல்வம் அவசர கடிதம்

வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி - தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்

இந்திய உணவகத்தில் உணவு உண்ட லண்டன் சிறுமி மரணம்

48 ஐ .எஸ். தீவிரவாதிகளை கொலை செய்த துருக்கி இராணுவம்..!

வறண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு

இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

அவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம்

ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார்

கந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி


மோடிக்கு பன்னீர்செல்வம் அவசர கடிதம்

09/01/2017 இலங்கையில் உள்ள 20 தமிழக மீனவர்களையும், 118 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்துக்காக ரூ.1650 கோடியை விரைவில் ஒதுக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று இலங்கையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் விடுவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக தமிழக கரைக்கு வந்து சேரவில்லை. அதற்கிடையில், பாக் நீரிணையில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தில் இருந்து ஒரு விசைப்படகில் சென்ற 6 மீனவர்கள், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சென்ற 4 மீனவர்கள் கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் திகதி அதிகாலையில் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகளுடன் இலங்கையின் காங்கேசன் துறை மற்றும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யப்படுவதை தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த 39 சம்பவங்களில் 290 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது 53 படகுகளும் பறிக்கப்பட்டன. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் 290 மீன வர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை இலங்கை அதிகாரிகள் விடுவிப்பதில்லை. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக பலமுறை எங்கள் கட்சித்தலைவரான ஜெயலலிதா தங்களிடம் தெரிவித்துள்ளார். படகுகள் விடுவிக்கப்படாதது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பராமரிக்கப்படாததால், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 118 படகுகளும் சேதமடைந்து வருகின்றன.
இரண்டு வடகிழக்கு பருவமழை காலங்கள் கடந்து விட்டதால், இந்த படகுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டன. அதனால்தான், படகுகளை மீட்டு, அவற்றை பயன்படுத்தும் வகையில் பழுதுபார்த்து மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என எங்கள் கட்சித்தலைவர் பலமுறை தங்களிடம் வலியுறுத்தினார்.
பாக் நீரிணைப் பகுதியில் உள்ள இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேசக் கடல் எல்லையானது வழக்கு இருப்பதால் முடிந்துவிட்ட ஒன்றல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அதே போல், கடந்த 1974 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்தியா - இலங்கை இடையிலான ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து, அதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், நீண்ட நாள் திட்டமாக ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக ரூ. ஆயிரத்து 650 கோடியை ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கட்டமைப்புத் திட்டத்துக்காக வழங்க வேண்டும் என ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார். அதே கோரிக்கையை நான் கடந்த 19 ஆம் திகதி தங்களிடம் அளித்த மனுவிலும் தெரிவித்துள்ளேன்.
எனவே, தற்போது இலங்கை வசம் உள்ள 20 மீனவர்கள் மற்றும் 118 படகுகளை காலதாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி - தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்

09/01/2017 தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடுமழையால் 18 பேர் பலியாகிவுள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளது.
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை வெள்ளத்தினால் இதுவரை 18 பேர் பலியாகிவுள்ளனர்.
 
வெள்ளத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லது போயுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
வழமையாக  தாய்லாந்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை வறட்சி மிகு குளிர் காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ் வருடம் வழக்கத்துக்கு மாறாக தொடர் மழை  பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி இந்திய உணவகத்தில் உணவு உண்ட லண்டன் சிறுமி மரணம்

10/01/2017 லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவு வாங்கிச் சென்று சாப்பிட்ட பதினைந்து வயதுச் சிறுமி உயிரிழந்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேகன் லீ என்ற இந்தச் சிறுமி லங்கஷயரில் உள்ள ரோயல் ஸ்பைஸ் என்ற இந்திய உணவகம் ஒன்றில் உணவுப் பொதி ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். அதை உண்ட அவருக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டது.
இதைக் கண்டு பதறிய அவரது உறவினர்கள் உடனடியாக மேகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இரண்டு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காததால் மேகன் உயிரிழந்தார்.
இதையடுத்து திட்டமிட்ட படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்த ஹோட்டலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தகவல் எதுவும் அறியத் தரப்படவில்லை.
உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லங்கஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி 
48 ஐ .எஸ். தீவிரவாதிகளை கொலை செய்த துருக்கி இராணுவம்..!

10/01/2017 ஐ.எஸ்.  தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 48 தீவிரவாதிகளை தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்பு கொன்றுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின்  அட்டூழியங்களுக்கு எதிராக செயற்படும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அயல் நாடான துருக்கி கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. 
ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக தரை, வான் வழியாக தாக்குதல் நடத்தும் துருக்கி இராணுவம், சிரியாவில் துருக்கியின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்றைய தினம் துருக்கி இராணுவம் நடத்திய தொடர்ச்சியான அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
அத்தோடு அவர்களது முகாம்கள் மற்றும் ஆயுதகளஞ்சியங்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.    நன்றி வீரகேசரி 


வறண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு

10/01/2017 கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்ததையடுத்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் வறட்சிப் பிரதேசமாக - தமிழகத்தை வறண்ட மாநிலமாக - தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சற்று முன்னர் அறிவித்தார். மேலும், இதன் பேரில் அனைத்து விவசாயிகளினதும் நில வரியை இரத்துச் செய்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட பதினேழு விவசாயிகளுக்கும் தலா மூன்று இலட்ச ரூபாய் வீதம் வழங்கப்படும் எனவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்புக் குழுக்கள் நேரடியாகச் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் சிபாரிசு செய்யப்பட்டதற்கிணங்கவே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் தெரிவிக்கப்படவிருப்பதாகவும், வறட்சிக்கான நிவாரண உதவிகளை அங்கிருந்து பெற்றுத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, தற்போது அமலில் இருக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றவிருப்பதாகவும், நீரேந்துப் பிரதேசங்களைச் சரிசெய்வதற்கான வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும், இதன்மூலம் வறட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கவுள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி 
இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

11/01/2017 இன்னும் சில நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவிருக்கும் பராக் ஒபாமா, மக்கள் மத்தியிலான தனது கடைசி உரையை நேற்றிரவு ஆற்றினார். புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் ட்ரம்ப்பின் பெயரைக் கூட உச்சரிக்காத ஒபாமா, ட்ரம்ப்புக்கான எச்சரிக்கைகளை தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டார்.

அவரது சொந்த ஊரான சிக்காகோவில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஒபாமா மேடையேறியபோது, “மேலும் நான்கு வருடங்கள்” என்று மக்கள் கூட்டம் ஒரு மந்திரம் போலத் தொடர்ந்து உச்சரித்தது. எவ்வளவு முயன்றும் அதை ஒபாமாவால் நிறுத்த முடியவில்லை.
“என்னை ஒரு நொண்டி வாத்து என்று நீங்கள் குறிப்பிடலாம். ஏனென்றால் நான் சொன்னதன் படி யாரும் நடந்துகொள்ளவில்லை. நொண்டி வாத்துக்கு அவ்வளவுதான் மரியாதை” என, நகைச்சுவையாக தனது பேச்சை ஆரம்பித்த ஒபாமா, கண்ணீருடன் தனது பேச்சை நிறைவுசெய்தார்.
“எனது ஆட்சிக்காலத்தில் எனக்குத் தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறேன் என்பதை உங்கள் மூலமாக அறிய முடிகிறது. எனினும், சில ஏமாற்றங்களும் இருப்பதை நான் அறிவேன். கடந்த எட்டு ஆண்டுகளில், உங்களுக்குத் தரப்பட்ட பல உறுதிமொழிகள் அவ்வண்ணமே நிறைவேற்றப்பட்டபோதிலும், சில உறுதிமொழிகளைக் காப்பாற்ற முடியாமல் போனதையும் நான் அறிவேன். 
“இந்நாட்டின் தலைமை இன்னும் சில நாட்களில் மாறப்போகிறது. ஜனநாயக முறையில் அதனை செயற்பட அனுமதித்தால் மட்டுமே அதன் பலம் மக்களாகிய உங்களுக்குப் புரியும். உங்களது அரசியல் நாகரீகமே நம் நாட்டு அரசியலில் பிரதிபலிக்கும். கட்சி, இன வேறுபாடுகள் இன்றி செயற்பட்டால் மட்டுமே மனிதாபிமானத்தை நிலைநிறுத்த முடியும்.
“இன்னும் பத்து நாட்களில் எமது ஜனநாயகத்தின் மாண்பை சர்வதேசமுமே பார்க்கப்போகிறது. இனம், சமயம், மொழி, பால் வேறுபாடுகள் இவை எவையும் அமெரிக்காவின் எந்தவொரு குடிமகனையும் பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளைத் தடுத்துவிடக் கூடாது. கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குற்றத் தடுப்புச் சட்டங்கள் என்பனவும் எல்லோருக்கும் சமமானதாகவே இருக்கவேண்டும்.
“நாம் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. அந்த இடத்தை அடைவதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின்போது யாரையும் பாரபட்சமாக நடத்தக்கூடாது. அப்படி நடத்தப்பட்டால் குறித்த இடத்தை நம்மால் அடைய முடியாது போய்விடும். இதனால்தான் அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் குறித்த பாகுபாடுகளை நான் வெறுக்கிறேன்.
“ஐஎஸ் பயங்கரவாதம் எமது மக்களைக் கொல்ல முயற்சிக்கும். ஆனால் அமெரிக்காவை அதனால் வெல்ல முடியாது. ரஷ்யா, சீனா போன்ற போட்டி நாடுகளால் உலக அரங்கில் எம்மைப்போல் செல்வாக்குச் செலுத்த முடியாது. ஆனால், நாம் நம் நாட்டு மக்களையே சிறுபான்மை என்று கூறிக்கொண்டு அவர்களை நசுக்கும் முயற்சியிலேயே ஈடுபடத் தொடங்கினால் இந்த நிலை மாறலாம்.
“எனது ஆட்சிக்காலத்தில் நீங்கள் தந்த ஆதரவாலும், ஒத்துழைப்பாலுமே என்னால் இவ்வளவு தூரம் இந்த நாட்டை நிர்வகிக்க முடிந்தது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது பணியின் தன்மையைப் புரிந்து என்னுடன் ஒத்துழைத்த எனது மனைவி மிஷேல், பிள்ளைகள் மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடேன் ஆகியோருக்கும் நன்றி” என்று கூறிய ஒபாமா தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே மேடையை விட்டு இறங்கினார்.
தனது பேச்சில், புதிய அரசு என்ற வார்த்தையை ஒபாமா குறிப்பிட்டபோதெல்லாம், கூடியிருந்த மக்கள் கூட்டம் “இன்னும் நான்கு ஆண்டுகள்” என்று கோஷமிட்டன. என்றாலும், “உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியாது. ஒரு ஜனாதிபதியிடமிருந்து மற்றொரு ஜனாதிபதிக்கு அதிகாரம் கைமாறும்போது அதை அமைதியாக வரவேற்பதே நமது நாட்டின் பலம்” என்று குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி
https://youtu.be/uc20rICQscgஅவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம்

11/01/2017 அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயீன்ஸ்­லாந்து மாநில கடற்­க­ரையில் சிறிய ரக விமா­ன­மொன்று  அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக   நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விழுந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பயணம் செய்த சுமார் 20  வயது மதிக்­கத்­தக்க பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஏனைய மூவர் காய­ம­டைந்­துள்­ளனர்.
மிடில் தீவுக்கு அண்­மை­யி­லுள்ள கடற்­க­ரையில் இடம்­பெற்ற மேற்­படி விபத்­தை­ய­டுத்து அதில் பயணம் செய்த பெண்­ணொ­ரு­வரும் இரு ஆண்­களும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் விமான சிதை­வு­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்­டனர்.
அவர்­களில் தலை­யிலும் கால்­க­ளிலும் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருந்த சுமார் 60  வயது மதிக்­கத்­தக்க விமானி  உலங்­கு­வா­னூர்தி மூலம் பண்­டாபேர்க் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அனுமதிக்கப்பட்டார்.  காயமடைந்த ஏனைய இருவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரிஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார்

11/01/2017 ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் தனது 82  ஆவது வயதில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார்.
அந்­நாட்டில் அர­சியல் மற்றும் சமூக சீர்­தி­ருத்­த­மொன்றை வலி­யு­றுத்­தி­யதன் மூலம் அவர் அங்­குள்ள மக்­களின் மனதில் நீங்­காத இடத்தைப் பிடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
அவர் 1994  ஆம் ஆண்­டி­லி­ருந்து 1999  ஆம் ஆண்டு வரை அந்­நாட்டின் வைப­வ ­ரீ­தி­யான, அதே­ச­மயம் செல்வாக்குமிக்க ஜனாதிபதி பதவியை வகித்தார்.
நன்றி வீரகேசரி

கந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி

11/01/2017 ஆப்கானிஸ்தான், கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜதந்திரிகள் உட்பட  11 பேர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காயமடைந்துள்ளதாகவும்  இராஜதந்திரிகள் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக் குண்டுவெடிப்பு நேற்று ஆப்கானிஸ்தான், கந்தகார் நகரில் ஆளுநரின் வீட்டிற்கருகில் இடம்பெற்றுள்ளது.
 ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்ட குழுவினர் ஆளுநரின் வீட்டிற்கு சென்றபோது இக் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி
No comments: