இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியை சந்தித்தார்.!

'ஆவா குறூப்' சந்தேக நபர்கள் அறுவர் கைது; மூன்று முக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவு

 "மக்களை மதிக்காத மிருகமே போய் விடு" தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில் : எரான் தகவல்

பரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்

யாழ் . அரசாங்க அதிபரை சந்தித்த கனேடிய பிரதிநிதிகள்

நிர்மாணிக்கப்பட்ட  கிளிநொச்சி பொதுச்சந்தை  முதலமைச்சரால் திறந்து வைப்பு 

ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் : விசாரணயில் CID அதிர்ச்சி தகவல்









ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியை சந்தித்தார்.!

07/11/2016 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கும் இடையேயான ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்ரபதி பவனுக்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவை இந்திய ஜனாதிபதி முகர்ஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் உறவை பலமான பிணைப்புடன் முன்கொண்டு செல்வது குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.  நன்றி வீரகேசரி 











'ஆவா குறூப்' சந்தேக நபர்கள் அறுவர் கைது; மூன்று முக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவு

07/11/2016 வடக்கில் செயற்படும் பிரபல பாதாள உலகக் குழுவான ஆவா குறூப்புடன் தொடர்புடைய அறுவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர். நேற்றும் நேற்று முன் தினமும் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தார்.  நேற்று முன் தினம் நால்வரும் நேற்று இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அறுவரையும் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
நேற்று முன் தினம் யாழின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்ப்ட்ட சிறப்பு விசாரணைக்கு அமைய அடையாளம் காணப்பட்ட ஆவா குழுவினர் என கருதப்படும் நான்கு பேரை சிறப்பு பொலிஸ் குழு கைதுச் செய்தது. இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்கு அமைவாக உடுவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர்.
ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உடுவில் பகுதியில் மேற்படி சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினர் கைதுசெய்ததினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உள்ளடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர்  வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்த வேளையில், வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கத்தியதை தொடர்ந்து, தாம் யார் என சிறப்பு விசாரணையாளர்கள் அடையாளப்படுத்தியதுடன் கைதுசெய்த நபர்கள் இருவரையும் அவர்களுக்குச் சொந்தமான ஹயஸ் வாகனத்தினையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தினை அறிந்த இவர்களின் சகோதரன் யாழ்.மருதனார்மடம் பகுதியில் நின்ற போது , அப்பகுதியில் வந்த சிறப்பு ஹயஸ் வாகனத்தினை மறித்து பிரச்சினையில் ஈடுபட்ட போது அந்தப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு சம்பவத்தினைப் பார்த்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரின் சகோதரனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இந்திரகுமார் கபில் மற்றும் இந்திரகுமார் விதுசன் ஆகிய இருவரையும் ஹயல் வாகனத்தினையும் சிறப்பு பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸ் நிலையம் நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
இதனிடையே கடந்த ஒரு வாரத்துக்கு அதிகமாக இராணுவ புலனயவாளர்கள் மற்றும் தேசிய உளவுப் பிரிவினரால் சேகரிக்கப்ப்ட்ட ஆவா குழு தொடர்பிலான அறிக்கை சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் 9 பொலிஸ் குழுக்களின் பிரதானிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அறிக்கைகள் ஊடாக ஆவா குழுவுடன் தொடர்புடைய பலர் துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடுத்துவரும் நாட்களில் கைதுச் செய்ய முடியும் என தாம் நம்புவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஆவா குழுவினர் தற்போது வழி நடத்துவதாக நம்பப்படும் சன்னா, கண்னா உள்ளிட்ட மூன்று பேர் தொடர்பில் மிக முக்கியமான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் கைதுச் செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வட மாகாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு தலைமறைவகையுள்ள மூவரும் முல்லை தீவு பகுதியில் இருக்கலாம் என நம்பகரமான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பிலும் பொலிஸாரின் அவதானம் திரும்பியுள்ளது. மேலதிக விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.    நன்றி வீரகேசரி 















"மக்களை மதிக்காத மிருகமே போய் விடு" தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

08/11/2016 ஹட்டன் - போடைஸ் தோட்ட 3 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் இன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் அத் தோட்ட தொழிலாளர்கள் தினமும் கொய்யும் தேயிலை கொழுந்தினை நிறுவை இட தோட்ட நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டுள்ள நவீன முறையிலான தராசு நிறுவையை முறையாக காட்டுவதில்லை என்பதினை ஆட்சேபித்து முறையாக நிறுவையை காட்டும் தராசு ஒன்றினை பெற்றுத் தரும்படி நிர்வாகத்தை வழியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ் போராட்டம் போடைஸ் தோட்டத்தின் காரியாலயத்தின் முன் ஆரம்பிக்கப்பட்டு தோட்ட தொழிற்சாலைக்கு முன் வரை பேரணியாக வந்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை கோஷமிட்டு முன்னெடுத்தனர்.
மேலும் தொழிலாளர்களுக்கு அத்தோட்ட நிர்வாகம் கடந்த இரண்டு வருட காலமாக அவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை என்பதினை சுட்டிக்காட்டி தோட்ட நிர்வாகத்திற்கு அங்குள்ள சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
குறித்த போடைஸ் தோட்டத்தில் தோட்ட அதிகாரி தொழிலாளர்கள் தொடர்பில் எந்தவொரு அக்கறையும் மேற்கொள்ளாமல் அவர்களின் தொழில் பிரச்சினை மற்றும் அடிப்படை பிரச்சினைகளில் காணப்படும் தீர்வுகளுக்கு அலட்சியமான போக்கினை கடைப்பிடித்து வருவதாக தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று தொழிலாளர்கள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிலாளர் தேசிய சங்க உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவருமான எம்.நகுலேஷ்வரன், சங்கத்தின் பொது செயலாளர் பிலிப் மற்றும் இலங்கை தொழிலாளர் சங்கத்தின் உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான கு.ராஜேந்திரன் ஆகியோர் ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தனர்.
தோட்ட அதிகாரியிடம் இவர்கள் தொழிலாளர்கள் சார்பாக தோட்டத்தின் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதனடிப்படையில் தோட்ட அதிகாரி தனது பெருந்தோட்ட கம்பனியின் கவனத்திற்கு கொண்டு வந்து வெகு விரைவில் தீர்வினை பெற்று தருவதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை தொடர்பில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.    நன்றி வீரகேசரி 













கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில் : எரான் தகவல்

08/11/2016 இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.  இருந்தபோதிலும் 2017 அம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில்  கட்டுநாயக்க விமான நிலைய ஓடு பாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகையினால்  குறிப்பிட்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படவுள்ளது.  இதன்போது மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்தார்.
தேசிய முகைமைத்துவ மாநாடு இன்று காலை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுரைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 













பரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்

08/11/2016 ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றுஇன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது. 
இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பின் போது வடக்கிலே காணப்படும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பிலும் அமைச்சரை விளக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பொது மக்களின் காணிகள் விடுப்பில் ஏற்ப்பட்டுள்ள முன்னேற்றங்களை விபரித்ததோடு இந்த காணி விடுவிப்புகள் இன்னும் துரிதகதியில் இடம்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப்போல தொடர்ச்சியாகவும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.    நன்றி வீரகேசரி











யாழ் . அரசாங்க அதிபரை சந்தித்த கனேடிய பிரதிநிதிகள்

09/11/2016 கனேடிய வெளிவிவகாரங்கள் வெளிநாட்டு அலுவல்கள் வியாபாரம் மற்றும் அபிவிருத்திப்பிரிவு ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின் ஆய்வாளர் ஜவாத் குரேஷி ஆகியோர்   இன்றைய   தினம்   யாழ் மாவட்ட  அரசாங்க   அதிபர் நா.வேதநாயகனை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
   
யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும்  மீள்குடியேற்றம் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி














நிர்மாணிக்கப்பட்ட  கிளிநொச்சி பொதுச்சந்தை  முதலமைச்சரால் திறந்து வைப்பு 

09/11/2016 கடந்த செப்டம்பர் மாதம்  16 ஆம் திகதி தீ எரிந்த  கிளிநொச்சிப் பொதுச் சந்தை தொகுதியினை  வடமாகாண  முதமைச்சர்  சி. வி.  விக்கினேஸ்வரன்  நேற்று  மாலை சம்பிரதாய பூர்வமாக  திறந்து வைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம்  16 ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த  கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள்   பதினேழாம்  திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்   மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச்சென்றதன்  பிரகாரமும்  கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள  மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால்  முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப்  பொதுச்  சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு செப்டம்பர் மாதம் இருபத்தி  மூன்றாம் திகதி  ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட  ஒன்பது மில்லியனைக்  கொண்டு  நாற்ப்பத்தி ஐந்து  தற்காலிக  கடைகள்  கரச்சிப்  பிரதேச சபையினரால்  அமைக்கப்பட்டிருந்தது.


 
இந் நிகழ்வில்   வடமாகாண  முதமைச்சர்  சி. வி.  விக்கினேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்  சி. சிறிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான  பசுபதிப்பிள்ளை , அரியரத்தினம் ,தவநாதன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , உள்ளுராச்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் ,கரச்சிப் பிரதேச சபை  உத்தியோகத்தர்கள்,   வர்த்தகர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 நன்றி வீரகேசரி













ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் : விசாரணயில் CID அதிர்ச்சி தகவல்

09/11/2016 யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட முழு வடக்­கை யும் அச்­சு­றுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்­ன­ணியில் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களே உள்­ள­தா­கவும் அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வா­கவே அக்­குழு செயற்­பட்­டுள்­ள­தா­கவும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பித்­தது. 
ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார, இந்த விவ­காரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைதான மூன்று சந்­தேக நபர்­களை கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் ஆஜர் செய்தபின்னரே மேற்­படி விடயம் உள்­ள­டங்­கிய அறிக்­கையை மன்­றுக்கு சமர்­பித்தார்.
தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து  'ஆவா குரூப்' எனும் பெயரில்  ஆயுதக் குழு­வொன்றை உரு­வாக்கி அர­சுக்கு அசெ­ள­க­ரியம் ஏற்­படும் வண்ணம் செயற்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மூவரே இவ்­வாறு தம்மால் கைது செய்­யப்பட்­ட­தாக மன்றில் ஆஜ­ரான உப பொலிஸ் பரி­சோ­தகர் நீதிவான் நிஸாந்த பீரிஸின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார். 
இந் நிலையில் கைதா­ன­வர்­களை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (1) ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் தடுப்புக் காவலில் வைத்து தாம் விசா­ரணை செய்­த­தா­கவும் அதன்­படி குறித்த சட்­டத்தின் 7 (2) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக இன்று ( நேற்று) மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்கக் கோரு­வ­தா­கவும் உப பொலிஸ் பரி­சோ­தகர் நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் தெரி­வித்தார்.
இதன்­போது அவர் நீதி­வா­னிடம் தாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் அறிக்கை ஒன்­றி­னையும் சமர்­பித்தார்.
அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­வது,
' தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து அவர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி அவர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக விடு­தலைப் புலிகள் அமைப்பை மீள உரு­வாக்­கு­வ­தற்கு உதவி ஒத்­தாசை புரியும் முக­மாக  ஆவா எனும் பெயரில் ஆயுதக் குழு உரு­வாக்­கப்பட்­டுள்­ளது. இந்த குழு­வா­னது வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டுள்ள உளவுத் துறை­யினர் உள்­ளிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள், அரச உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பொது மக்­களை அச்­சு­றுத்தும் வண்ணம் செயற்­ப­டு­கின்­றனர். 
கூர்­மை­யான ஆயு­தங்­களால் வெட்டி காயம் ஏற்­ப­டுத்தும் இந்த குழு அச்­செ­யற்­பாடு ஊடாக மக்­களை பய­மு­றுத்தி அவர்­க­ளது சொத்­துக்­களைக் கொள்­ளை­யி­டுதல் உள்­ளிட்ட சட்ட விரோத செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது. இது தொடர்பில் பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வுக்கு விசா­ரணை செய்யும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்பட்ட நிலையில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 6(1) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக விசேட விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 
அந்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக  மூவரை நாம் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி கைது செய்தோம். கே.கே.எஸ். வீதி, கொக்­குவில் மேற்கு, யாழ்ப்­பாணம் பகு­தியைச் சேர்ந்த குட்டி எனப்­படும் சிவ­லிங்கம் கம­லநாத், யாழ். பண்டத்தரிப்பு பகு­தியைச் சேர்ந்த அரவிந் எனப்­படும் அன்டன் தாய்சஸ் அரவிந் அலக்ஸ், தெந்­தா­தரன் பிருந்­தவன் ஆகியோரே இவ்­வாறு கைது செய்யப்பட்டு கொழும்பு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு தலை­மை­ய­கத்தில் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்பட்­டனர். அதன்­பின்­ன­ரேயே இன்று (நேற்று) அவர்­களை மன்றில் ஆஜர் செய்­கின்றோம்.
இந்த சந்­தேக நபர்கள் விடு­தலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளுடன் தொடர்­பினை பேணி அவர்­களின் ஆலோ­சனை மற்றும் பங்­க­ளிப்­புக்கு அமை­வாக வடக்கில் ஆவா எனும் பெயரில் அமைப்­பொன்றை உரு­வாக்கி, அந்த அமைப்பின் உறுப்­பினர்­க­ளாக செயற்­பட்டு,  வாள், கத்தி உள்­ளிட்ட அபா­ய­க­ர­மான கூரிய ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளாக்கும் வித­மாக  செயற்­பட்­டுள்­ளனர். இதற்­காக உத­வி­யுள்ள இவர்கள்  வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த உளவுத்துறை பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யமை அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை மற்றும் அந்த பிர­தே­சத்தில் சேவை­யாற்றும்  பொலிஸார் உள்­ளிட்ட அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு கட­மையைச் செய்ய இடை­யூறு ஏற்­ப­டுத்தியமை, மக்­களை பய­மு­றுத்­தி­யமை, அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை, கூரிய ஆயு­தங்களால் வெட்­டியும் கொத்­தியும் காயம் ஏற்­ப­டுத்­து­கின்றமை போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.
இவற்றின் ஊடாக பொது மக்­க­ளி­­டையே சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்தும் சட்ட விரோத செயற்­பாட்­டினை சந்­தேக நபர்கள் முன்­னெ­டுத்­துள்­ளனர்.
இந்த சந்­தேக நபர்கள் தொடர்பில் செய்­யப்பட்ட மேல­திக விசா­ர­ணை­களில், ஆவா எனும் குறித்த குழுவில் தற்­போது 30 உறுப்­பி­னர்கள் உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந்த அமைப்பின் உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு யாழ்ப்­பாணம், சுன்­னாகம் உள்­ளிட்ட பகு­தி­களில் கட­மையில் ஈடு­படும் உளவுத் துறை உத்­தி­யோ­கத்­தர்­களை வாளால் வெட்டி காயம் ஏற்­ப­டுத்­தி­யமை, சுன்­னாகம் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் மீது கூரிய ஆயு­தங்­களால் தாக்­கி­யமை, அப்­பி­ர­தே­சத்தின் வர்த்­த­கர்­க­ளிடம்  கப்பம் பெறுதல், கொள்ளை ஆகிய செயற்­பா­டு­களில் இவர்கள் ஈடு­பட்­டுள்­ள­மை தெரியவந்துள்ளது.
இந்த ஆவா குறூப் எனும் அமைப்பு யாழ்ப்­பாணம் உட்­பட வட பகு­தியில் பொது மக்­க­ளி­டையே இனம் மற்றும் மத ரீதி­யி­லான வேறு­பா­டு­களைத் தூண்டி எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும் வண்ணம் மக்­களை தூண்­டி­யுள்­ளமை விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.
அதனால் இந்த அமைப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்­பி­னர்­களைக் கைது செய்­வ­தற்கும், அவர்கள் பயன்­ப­டுத்தும் வாள், கத்தி உள்­ளிட்ட கூர்­மை­யான ஆயு­தங்­க­ளுக்கு மேலதிகமாக  புலிகள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பின் அவற்றைக் கைப்பற்றவும் சிறப்பு விசாரணைகள் தொடர்கின்றன.
அதனால் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கவும் ஏனைய கைதிகளில் இருந்து இவர்களை வேறுபடுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்குமாறும்  கோருகின்றோம்' என குறிப்பிடப்ப்ட்டிருந்தது.
இதனையடுத்து பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் மன்றில் முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிவரை சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
Image result for ஆவா குழு
நன்றி வீரகேசரி

No comments: