1000 ரூபாய் நோட்டுகளால் மேலும் மாசுபடும் கங்கை?

.
மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஏற்கனவே மாசுபட்டு கிடக்கும் கங்கை நதி மேலும் களங்கப்பட்டு விடுமோ? என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர்.
1000 ரூபாய் நோட்டுகளால் மேலும் மாசுபடும் கங்கை?
லக்னோ:

நடைமுறையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின்னர் கணக்கில் வராத கருப்புப் பணத்தை பலர் தீயிட்டு எரித்தும், குப்பைத் தொட்டியில் வீசியும் தங்களது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.





இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், மிர்சாபூர் நகரின் அருகேயுள்ள நயாகட் பகுதி வழியாக பாயும் கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதப்பதாக தகவல் வெளியானது.



இந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக நேற்று இங்குள்ள படகோட்டிகளுக்கு இடையே கடுமையான மோதல் நடந்ததாக அறியவந்த போலீசார், உடனடியாக நயாகட் பகுதிக்கு விரைந்து வந்தனர். 

கிழிந்த நிலையில் ஆற்றில் மிதந்த 19 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக மிர்சாபூர் போலீஸ் சூப்பிரண்ட் கலாநிதி நைதானி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments: