பெங்களூரில் கலவரம் உச்சக் கட்டம் ; 90 பஸ், லொரிகள் மீது தீ வைப்பு
தமிழகத்திற்கு நீர் வழங்க உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு உத்தரவு : கலவரங்கள் உக்கிரம் (காணொளி இணைப்பு)
வீடொன்றில் தீ அனர்த்தம் ; 6 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
பெங்களூரில் கலவரம் உச்சக் கட்டம் ; 90 பஸ், லொரிகள் மீது தீ வைப்பு
12/09/2016 பெங்களூரில் இன்று காலை 11 மணியில் இருந்து இதுவரை 90 இற்கும் மேற்பட்ட பஸ், லொரிகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட பஸ், லொரிகளை தேடித் தேடி வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மைசூர் வீதியில் அமைந்துள்ள லொரிகள் தரிப்பிடத்தில் 27 லொரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 பஸ், லொரிகளும் அதில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளுடன் தீயிற்கு இரையாகியுள்ளது.
மேலும் கே.பி.என் நிறுவனத்துக்கு சொந்தமான டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 50 பஸ்கள் எரிக்கப்பட்டன. பணிமனைக்குள் புகுந்த கன்னட அமைப்பினர் பஸ்களுக்கு தீ வைத்தனர்.
பெங்களூரில் பஸ்கள், லொரிகள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டதால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
பெங்களூரு் நகர சட்டம்-ஒழுங்கு பொலிஸின் கட்டுப்பாட்டில் இல்லாததால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு காப்பதே மாநில அரசின் கடமை என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது. உச்சநீதிமன்றம் எச்சரிக்கையையும் மீறி சட்டம்-ஒழுங்கை காக்க கர்நாடக அரசு தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி
தமிழகத்திற்கு நீர் வழங்க உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு உத்தரவு : கலவரங்கள் உக்கிரம் (காணொளி இணைப்பு)
12/09/2016 காவேரி நதி நீர் தொடர்பாக தமிழகம், கர்நாடகமாநிலம் மீது குற்ற நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.
இவ் வழக்கின் தீர்ப்பு கடந்தவாரம் தமிழகத்திற்கு காவேரி நீர் திறக்கக்கோரி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து தமிழகத்திற்கு எதிராக கர்நாடக மக்கள் போராட்டம், கடையடைப்பு, மறியல் போராட்டம் மற்றும் தமிழக முதல்வரின் உருவப்பொம்மை எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் சமூகவலைத்தளத்தில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவொன்றை இட்டிருந்தார். இதனை அறித்த கர்நாடக மாநில இளைஞரொருவர் குறித்த பதிவையிட்ட இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து உலக பிரசித்திபெற்ற இரமேஸ்வரம் கோயிலுக்கு இன்று காலை வருகை தந்த கர்நாடக யாத்திரீகர்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனம் மீதும் தமிழ் அமைப்புக்கள், நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர் தேசிய முன்னணியினர் தாக்குதல் மேற்கொண்டனர்.
இத் தாக்குதலால் ஒரு வேன், 3 கார் மற்றும் இரு சொகுசு போக்குவரத்து பஸ் ஆகியன பலத்த சேதமடைந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் இராமேஸ்வரம் பொலிஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
வீடொன்றில் தீ அனர்த்தம் ; 6 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
14/09/2016 அமெரிக்க தென்னஸி மாநிலத் தில் வீடொன்றில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி 6 சிறுவர்கள், 3 வயதுவந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குளிரூட்டி உபகரணத்திற்கான மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ ஏற்பட்டுப் பரவியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது 1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற அதிகளவானோரைப் பலிகொண்ட தீ அனர்த்தமாக கருதப்படுகிறது.
உயிரிழந்த சிறுவர்கள் 3 இலிருந்து 17 வரையான வயதுடையவர்களாவர். உயிரிழந்த வயது வந்தவர்களில் அந்த சிறுவர்களது பாட்டியான எலொயிஸி புட்ரெல் (61 வயது), கரோல் கொலியர் (56 வயது) மற்றும் லகெயிஸா வார்ட் (27 வயது) ஆகி யோர் உள்ளடங்குகின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment