தெறி
இளைய தளபதி விஜய் நடிப்பில் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது தெறி. ராஜா ராணிபிரமாண்ட வெற்றிக்கு பிறகு தளபதியுடன், அட்லீ கைகோர்த்துள்ள படம் என்பதே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது
விஜய் படத்திற்கென வழக்கம் போல் சில தடைகள்...ஆனால், இதையெல்லாம் அசல்ட்டாக தட்டி விட்டு பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப களம் இறங்கிவிட்டார் விஜய் குமார்
கதைக்களம்
தன் மகள் நைனிகாவுடன் கேரளாவில் நிம்மதியான, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய். அங்கு நைனிகாவின் டீச்சர்எமிக்கு விஜய் மேல் காதல் ஏற்படுகின்றது. ஜாலியாக செல்லும் இவர் வாழ்க்கையில் உள்ளூர் ரவுடிகளால் தன் மகளுக்கு பிரச்சனை வர விஜய், அடித்து துவம்சம் செய்கிறார்.
பின் இத்தனை அமைதியாக இருக்கும் உங்களுக்குள் எப்படி இந்த மிருககுணம் என எமி கேட்க, பாட்ஷா ஸ்டைலில் விரிகிறது ப்ளாஷ்பேக்
ஊருக்குள் யார் தப்பு செய்தாலும் தட்டிகேட்கும் நேர்மையான போலிஸ் அதிகாரியாக விஜயகுமார், ஐடியில் பணிபுரியும் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்த பெண் கற்பழிக்கப்படுவதை அறிகிறார்.
அவர் யார் என்பதை கண்டிப்பிடித்து நடு பாலத்தில் கொன்று தொங்க விட, அந்த இறந்தவரின் அப்பா அமைச்சர் மகேந்திரன்.
பின் அவர் விஜய் குடும்பத்தையே கொல்ல, உயிரை கையில் பிடித்துக்கொண்டு விஜய் கேரளா செல்கிறார்.
ஆனால், இவர் உயிரோடு இருப்பதை அறிந்த மகேந்திரன் மீண்டும் விஜய்யை துரத்த, இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என விஜய் ஆடும் தெறியாட்டமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இளைய தளபதி திரைப்பயணத்தில் பெஸ்ட் பெர்ப்பாமன்ஸ் என கூறலாம், நைனிகாவிற்கு அழகான தந்தையாக சமந்தாவிற்கு நல்ல கணவன் என அசத்துகிறார். அதிலும் விஜயகுமாராக போலிஸ் லத்தியை கையில் எடுத்து அதகளம் செய்கிறார்.
ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் சமந்தாவும் விஜய்யுடனான காதல் காட்சிகளில் மனதை கொள்ளை கொள்கிறார். அதிலும், தன் அப்பாவிடம் விஜய்யை அறிமுகப்படுத்தும் காட்சி, ராதிகாவிடம் எனக்கு அம்மா இல்லை, நீங்க என்னை உங்க பொண்ணா ஏத்துக்கோங்க என சொல்லும் காட்சியில் சூப்பர் சமந்தா.
எமி ஜாக்ஸன் தான் எதற்கு என்றே தெரியவில்லை, ப்ளாஷ்பேக் கேட்பதற்காவே படத்தில் வந்து செல்கிறார். இவை அனைத்தையும் விட படத்தில் நம்மை மிகவும் கவருவது நைனிகா குட்டி தான்.. இன்னும் பல வருடங்களுக்கு கால்ஷிட் புல் தான். அத்தனை அழகாக சின்ன வயதில் விஜய்க்கே கவுண்டர் கொடுத்து நடித்திருக்கிறார். தெறிடா பேபி.
படத்தில் பல காட்சியமைப்புகள் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அட்லீ காட்சிப்படுத்தியுள்ளார். பாலியல் தொல்லை, குழந்தை தொழிலாளர், வட இந்திய வேலையாட்களை இங்கு நடத்தும் விதம் என பல சென்சிட்டிவ் விஷயங்களை மாஸ் மன்னன் விஜய் வாயிலாக கூறியுள்ளார். ஜி.வி பின்னணி இசையில் கலக்கினாலும் கொஞ்சம் தீம் மியூஸிக்கில் தனி ஒருவன் சாயல்.
க்ளாப்ஷ்
கண்டிப்பாக தளபதி தான்....அனைத்து ஏரியாவிலும் ரவுண்ட்கட்டி அடித்துள்ளார்.
விஜய்-சமந்தா காதல் காட்சிகள். மொட்டை ராஜேந்திரன் காமெடி, அதைவிட நைனிகா க்யூட் பெர்ப்பான்ஸ்
மகேந்திரன் கடைசி வரை கெத்தை விடாமல் சின்ன புன்னகையால் மிரட்டுகிறார். நடிப்பிற்கு வெல்கம் சார்.
படத்தின் காட்சியமைப்புக்கள்.. குறிப்பாக குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தவரை நடு ரோட்டில் புரட்டியெடுக்கும் காட்சி, வட இந்தியா சிறுவன் அழகம் பெருமாள் இறந்தவுடன் சாக்லேட் சாப்பிடும் காட்சி (படம் பார்த்தவர்களுக்கு புரியும்) கிளாஷ் தெறி.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள், அதிலும் பஸ் ஏரியில் விழுந்த பிறகு விஜய் அந்த 100 அடி பாலத்தில் குதிக்கும் காட்சி பிரமிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் குறிப்பாக அந்த பேய் வருவது போன்ற காட்சி லாஜிக் மீறல்
சத்ரியன், என்னை அறிந்தால் சாயல் ரொம்பவே தெரிகின்றது.
மொத்தத்தில் தற்போது தெரிகிறதா அந்த புலி பதுங்கியது தற்போது பலமாக பாய்வதற்கு தான்...தெறியாட்டம்
ரேட்டிங் 3.25/5 நன்றி cineulagam