அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மூன்று நிகழ்ச்சிகள் 15 05 16

                                  
மெல்பனில் கருத்தரங்கு  -    14-05-2016  
         ஈழத்தமிழ் படைப்பிலக்கியத்துறையில்  கடந்த  முப்பது (1976 - 2016) வருடகாலத்தில்     தோன்றியிருக்கும்  மாற்றங்கள்  தொடர்பான  தொனிப்பொருளில்   எதிர்வரும் 14-05-2016   ஆம் திகதி   சனிக்கிழமை மாலை  3.00   மணியிலிருந்து   மாலை 6.00  மணி வரையில்  மெல்பனில்,       சங்கம்,  இலக்கிய கருத்தரங்கை   ஒழுங்குசெய்துள்ளது.   இந்நிகழ்வில்   உரையாற்ற    இலங்கையிலிருந்து   எழுத்தாளரும்   ஞானம்  மாத  இதழ்  ஆசிரியருமான   டொக்டர்  தி. ஞானசேகரன்   வருகை  தருகின்றார்.      நடைபெறும்   இடம்:     VERMONT  SOUTH   COMMUNITY  HOUSE
                           1,  Karobran Drive - Vermont   South, Vic - 3133
-------------------------------------------------------------------------------------------
கன்பராவில்   கலை, இலக்கிய சந்திப்பு    04-06-2016 
        ' ஞானம் ' ஆசிரியர்  ஞானசேகரன் பவளவிழா
           எதிர்வரும்  04-06-2016  சனிக்கிழமை  கன்பராவில்     சங்கத்தின்  கலை, இலக்கியம் - 2016  நிகழ்ச்சி   கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள்  சங்க மண்டபத்தில்   நடைபெறும்.       ஈழத்தின்  மூத்த படைப்பாளியும்  ஞானம்   இதழின்   ஆசிரியருமான  டொக்டர் தி. ஞானசேகரன்    அவர்களின்    இலக்கியப்பணிகளை  பாராட்டும்  பவளவிழாவும்   நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்   நூல் விமர்சன அரங்குகருத்தரங்கு,   ஆவணப்படக்காட்சி என்பனவும்   இடம்பெறும்.குவின்ஸ்லாந்தில்     27-08-2016
                        தமிழ் எழுத்தாளர் விழா 2016
காலம்:   27-08-2016  சனிக்கிழமை  மாலை  4.00  மணி முதல்
நடைபெறும்  இடம்:     Auditorium,   Helensvale  Library,  Helensvale  Plaza
                                           Helensvale 4212, Gold coast, QLD
கண்காட்சி,   சிறுவர்  அரங்கு,   கருத்தரங்குகலையரங்கு  முதலான நிகழ்ச்சிகள்  நடைபெறும்  இவ்விழா,  இம்முறை  முதல்  தடவையாக குவின்ஸ்லாந்து  மாநிலத்தில்  கோல்ட்கோஸ்டில்  நடைபெறுகிறது.
எதிர்வரும்  மாதங்களில்,  மூன்று  மாநிலங்களில் சங்கம்   நடத்தவிருக்கும்  கலைஇலக்கியம் சார்ந்த  இந்நிகழ்வுகளுக்கு  கலை,   இலக்கிய  ஆர்வலர்களையும்  தமிழ் கற்பிக்கும்  ஆசிரியர்களையும்  உயர்வகுப்பில்  தமிழையும்  ஒரு  பாடமாக  பயிலும்  மாணவர்களையும்  வருகைதந்து சிறப்பிக்குமாறு அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்   அன்புடன் அழைக்கின்றது.  
  இம்முன்று   நிகழ்ச்சிகளும்  இலவசம்  என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிகழ்ச்சிகளில்  பங்குபெறுவதற்கு  விரும்பும்  கலைஞர்கள். படைப்பாளிகள்,  தமிழ்  ஆசிரியர்கள்,  மாணவர்கள்   பின்வரும் மின்னஞ்சலில்  தொடர்புகொள்ளலாம்.

                                 atlas25012016@gmail.com