முப்பது
நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதி அவர்களின் நினைவை ஒட்டி, ஆண்டுதோறும் நினைவுகூரப்படும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளின், இவ்வாண்டு நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை, மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது.
தாயகவிடுதலைக்கான
போராட்ட காலத்தில் இணைந்து நின்று, சிறப்பாக தமது பணியை ஆற்றிய மாமனிதர்களும் நாட்டுப்பற்றாளர்களும்
இந்நாளில் நினைவுகூரப்படுகின்றார்கள்.
தேசவிடுதலைக்காக
உழைத்த பெரியோர்களை நினைவுகொள்வதும், அவர் வாழ்வின் உன்னதங்களை உள்வாங்கிக்கொள்வதும், அவர்களுக்கு நாம் செலுத்தும் மதிப்பளித்தலாகும்.
அத்தோடு
எமது எதிர்கால சந்ததிக்கும் அவர்களுடைய தியாகங்கள் நல்ல உதாரணங்களாகும்.
குறிப்பாக
ஒஸ்ரேலிய மண்ணில் வாழ்ந்து மரணித்துப்போன மாமனிதர்களான ஜெயகுமார் மற்றும் பேராசிரியர் எலியேசர் நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் ஆகியோரை நினைவுகூர்வதுடன், வரலாற்று தடங்களில் ஒளிச்சுடர்களாக வாழும் அனைத்து மாமனிதர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும்
இந்நாளில் நினைவுகொள்ள இணைந்துகொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்.
நினைவுநாளில்
வழமைபோன்று, அன்னை பூபதி நினைவு பொதுஅறிவுப்போட்டியுமு; நடைபெறும். பொதுஅறிவுப் போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் குழுவாகவோ தனிநபர்களாகவோ இணைந்துகொள்ள இருப்பின் 21
– 04 – 2016 இற்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்விடம்:
Preston Town Hall, 284 Gower St, Preston VIC 3072
காலம்:
23 – 04 – 2016 சனிக்கிழமை
நேரம்:
மாலை
6 மணி
தொடக்கம்
8 மணி
வரை
தொடர்பு:
0404 802 104
தமிழர்
ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோரியா
இத்துடன் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு பற்றிய அறிவித்தலும் கடந்த கால பொதுஅறிவுப்போட்டி வினாக்கொத்துகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
http://www.eelamurasu.com.au/ Documents/quiz/Annai-Poopathy- Quiz-2010-Melb.pdfhttp://www.eelamurasu.com.au/ Documents/quiz/Annai-Poopathy- Quiz-2013-Melb.pdf
http://www.eelamurasu.com.au/ Documents/quiz/Annai-Poopathy- Quiz-2014-Melb.pdf
http://www.eelamurasu.com.au/ Documents/quiz/Annai-Poopathy- Quiz-2015-Melb.pdf
http://www.eelamurasu.com.au/
http://www.eelamurasu.com.au/