.
இன்று பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வேலை செய்யும் இடங்களில் சந்திக்கும் நபரை இளம் பெண்கள் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்வதாக கூறும் பொய்யான வாக்குறுதியை நம்பி, தொடர் வற்புறுத்தலால் உடல் ரிதியான தொடர்புக்கும் சிலர் சம்மதித்து விடுகிறார்கள். புதிய காதலி கிடைத்து விட்டாலோ அல்லது வீட்டில் வேறு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்யும் போது பழைய காதலியை, காதலை கைவிட்டு விடும் சில ஆண்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை ஏமாற்றும் ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள். பிக்கப்-டிராப்-எஸ்கேப்-தான் நவீன கால காதல்.
காதல் இன்று பொழுதுபோக்காகி விட்டது. நீ ரொம்ப அழகு எனும் ஆணின் வார்த்தை பெண்ணை மகிழ்விக்கிறது. மயக்குகிறது. பல வருடங்கள் காதலித்தோம்;. திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்ததால், சம்மதித்தேன்,அவரால் இன்று கர்ப்பமாக உள்ளேன், என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இது போன்ற காதலித்து ஏமாற்றும் நபர்கள் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் அடிக்கடி வருகிறது. இருந்தும், செய்யக் கூடாத தவறை சில அப்பாவிப் பெண்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். தன் பெற்றோர் தனக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார்கள் என்று இவர்களுக்கு ஏன் தெரிவதில்லை?
நேரில் சந்திக்க வரச் சொன்னார். அவரது பேச்சில் மயங்கி காதலித்தேன். அவரிடம் என்னை இழந்துவிட்டேன். திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி கொடுத்தார். கர்ப்பம் ஆனதும் தொடர்பை துண்டித்துக் கொண்டார், பேசுவதை நிறுத்திக் கொண்டார் என புலம்பும் அபலைப் பெண்கள் ஏராளம். காதல் என்று நினைத்து கயவர்களின் உடல் பசிக்கு ஆளாகும் பெண்கள் என்றுதான் உணரப் போகிறார்களோ? இது போதாது என்று மிஸ்டு கால், பேஸ்புக் மூலம் காதல் பற்றிக் கொள்கிறது. இ-மெயில், சாட், மொபைல் கேமரா எல்லாம் சாட்சிகளாக உள்ளன. நகரங்களில், பேரூந்து நிலையங்களில் பூங்காக்களில் பள்ளிப்படிப்பைத் தாண்டாத சி;ல பெண் பிள்ளைகள் தங்கள் காதலனோடு பொது இடங்களில் மறைவாக உட்கார்ந்து இருப்பதை பார்க்க நேரிடுகிறது. இளம் பள்ளி வயதில் ஆண் நண்பர்கள் இருப்பதுதான் பெருமை என்ற தவறான தோழிகளின் தவறான போதனைகள் இவர்களை ஆட்டிவைக்கிறது.
காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த ஆண்கள் மீது துணிவாக கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்தவர்கள் வட இந்தியாவில்; உண்டு. வலுக்கட்டாயமாக பலாத்காரம் நிகழவில்லை என்றாலும்ää அவளது சம்மதத்தை தந்திரமாக சு10ழ்ச்சி செய்து பெறுவது வஞ்சகமானää நேர்மையற்ற செயல்பாடுதான். கல்வியறிவு குறைவானää நிரந்தர வேலை இல்லாதää பொருளாதார வசதியில்லாத எதிர்ப்பை தாங்க முடியாத பெண்கள்தான் அதிகம் குறி வைக்கப்படுகிறார்கள்.
உலகில் ஒருவரால் மற்றவர் ஈர்க்கப்படுவது மனித இயல்புதான் அதற்கு எப்போதுமே சாத்தியமுள்ளது, எல்லைக் கோட்டை தாண்ட துடிப்பவர் உண்மையானவரா? ஏமாற்றுகாரரா? என்பதுதான் சிக்கல்.
என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டான் என்கிற புகார்கள் இன்று ஏராளம். தனக்கு ‘ஹாய்’ சொல்லி பல வருடங்களாக தன்னைச்சுற்றி வந்தவன், தன்னைவிட மேலான தகுதியுடைய வேறொரு பெண்ணுடன் நட்பு கிடைத்ததும், ‘டீலந” சொல்லி தன்னை தவிர்க்கும் போது குமுறுகிறார்கள். இழப்பு வரும்போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
ஏன் சிலர் காதலியை கைவிடுகிறார்கள்?
பெண்மையின் அருமை பெருமை தெரியாத சில ஆடவர்கள் பெண்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். எளிதில் பெண்களை கவரும் தன்மை கொண்ட சபல புத்தி உடையவர்கள், சலிப்புத் தன்மை ஏற்பட்டவர்கள், இணக்கமற்ற நிலை ஏற்படும் போது புதிய காதலி கிடைக்கும் போது, வீட்டில் காதலியை விட மேலான இடத்தில் பெண் பார்க்கும் போது காதலியை, பல ஆண்டுகள் பழகியவளை, கைவிட, ஏமாற்ற துணிகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தற்போது கணிசமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
ஒரு புதிய ஆடை அணிகலன்கள் வாங்கிய புதிதில்; இருக்கும் ஆர்வம் ஈர்ப்பு நாளடைவில் குறைந்து விடுவது போல சில காதலர்களிடத்தும் ஏற்படுகிறது. இவர்கள் மீது காவல் துறையில் புகார் செய்து திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதால் மட்டும் மீண்டும் காதல் வந்து விடுவதில்லை. உண்மையில் வெறுப்புதான் அதிகரிக்கிறது.
வாழ்க்கை கொடு- என காதலனின் காலைப் பிடித்து கெஞ்சும் பெண்கள் ஒரு பக்கம். முடியாது -என நிற்கும் ஆண்கள் இன்னொரு பக்கம். அப்படிப்பட்டவனுக்கும்;, விசாரிக்காமல் பெண் குடுக்க முன் வரும் சமூகம் மற்றொரு பக்கம். இருந்தும் தவறான பாதையில் பயணிக்கும் அப்பாவி பெண்களுக்கு படிப்பினை சென்றடையவில்லை.
அறுவாள்மனையில் காய்கறி நறுக்குகையில் கவனக்குறைவாக கைவிரலில் காயம் ஏற்பட்டால் பாதிப்பு கைவிரலுக்குதான். அறுவாள்மனைக்கு ஒரு சேதாரமும் இல்லை. ஆண் என்றால் கிழித்துவிட்டு கம்பீரமாக நிற்கும் முள்செடி போன்றவன். கிழித்து விட்டதால் ஆணுக்கு பாதிப்பு இல்லை. பெண்தான் முள்ளில் பட்ட கிழிந்த சேலையாகி ரணப்பட்டு தூக்கி வீசப்படுகிறாள். மொத்த இழிவும் பெண்ணிற்கேää ஏமாற்றிய அவனுக்கு வாழ்க்கை இருக்கிறது. ஆனால் ஏமாற்றப்பட்ட அவளுக்கு? ஒரு பெண் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய ஒன்றை மேலை நாடுகளில் உள்ளது போல எளிதாக பரிமாறிக் கொள்வதையெல்லாம் நம் சமூகத்தால் ஜீரணிக்க முடியவில்லை.
தவறானவனை நம்பி போனதற்கு நல்ல தண்டனை அனுபவிக்கிறார்;கள். வெளியே சொல்லமுடியாமல் பலர் மௌனமாய் அழுகிறார்கள். சமூகம் தங்கள் சுயநலன்களுக்காக அப்பாவி பெண்களை சுரண்டித் தீர்க்கின்றன. இது ஒரு வகையான பாலியல் சுரண்டல்.
காதலித்துவிட்டு ஏமாற்ற நினைக்கும் காதலனை நீதி மன்றத்தில் ஏற்றி நியாயம் கேட்கும் ஒரு பெண்ணை பற்றிய தமிழ்த்திரைப்படம்தான்-விதி. நடைமுறை வாழ்க்கையில்;;; பெயரையே வெளியிட தயங்குபவர்கள்தான் பாதிக்கப்பட்ட பெண்கள். இவர்களால் எப்படி புகார் கொடுக்க முடியும்? வழக்கு கொடுக்கமுடியும்? இந்த தடுமாற்றம் தயக்கம்தான் ஏமாற்றும் ஆண்களுக்கு சாதகமாக உள்ளது.
மன உறுதியுடன் வழக்கு தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வாங்கி தந்தவர்களும் உள்ளனர். வழக்கின் தன்மை சு10ழ்;நிலையை பொருத்து தீர்ப்பு அமைகிறது. காதலித்துவிட்டு பெண்களால் கைவிடப்படும் ஆண்களும் உண்டு. மறுப்பதற்கில்லை.
ஒருவன் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யும்போது உடனடியாக தனக்கு தீங்கிழைக்கப்பட்டதை பெண் உணர்கிறாள். திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி தந்து சம்மதம் பெற்று அவளை இருளில் தள்ளும்பொழுது தாமதமாக தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணர்கிறாள். இரு வழிகளுமே அவளுக்கு அதிர்வை ஏற்படுத்துகிறது. காயப்படுகிறாள். விஷயம் வெளியே தெரியும்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுதான் மாறாத களங்கம் சுமத்தப்படுகிறது. அவமதிக்கப்படுகிறார்கள். தாழ்வுப்படுத்தி பேசப்படுகிறார்கள். குடும்ப கௌரவம் பாதிக்கும் என்பதால் சில சமயங்களில் மறைக்கும் நோக்குடன் வேகமாக குடும்பத்தினர் செயல்படுவதும் நடக்கிறது.
பெண்ணின் உடல். மனம், நன்மதிப்பு பாதிக்கப்படுகிறது. பெண்களும் மனிதர்கள்தான். விளையாடிவிட்டு தூக்கி வீசப்படும் பொம்மைகளல்ல என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். எல்லா குணங்களும்ää எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் என்று உலகில் யாரும் இல்லை. அவள் மேலும்ää சிறப்பானவளாக மாற்ற விரும்பினால் அன்போடு அந்த தகுதிகளை அவரிடம் உருவாக்க முயற்சி செய்யலாம். காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டுää அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, அடங்கி வாழ பழக்கப்படுத்தப்பட்டு ஆடவனை சார்ந்து இருக்க பழக்கப்படுத்தப்பட்டவர்கள்தான் பெண்கள். ஆண்களோடு ஒருபோதும் சமமாக ஒப்பிட முடியாது. ஆண் குடித்துவிட்டு ஆடைஇன்றி சாலை ஓரத்தில் விழுந்து கிடந்தால் எந்த பெண்ணும் அவனை வன்புணர்ச்சி செய்வதில்லை.
காதலி கைவிடப்படுவதற்கான அறிகுறிகள்:
செல்போன். கணினி போன்றவற்றை பாஸ்வேர்டு போட்டு எல்லாவற்றையும் உங்களிடமிருந்து மறைத்தல், நீங்கள் இருக்கும் போது தொலைபேசி அழைப்புகளில் அப்புறம் பேசுகிறேன் என சொல்லிவிட்டு கட் பண்ணுவது. குறிப்பிட்ட சில இடங்களில், குறிப்பிட்ட சிலருக்கு முன்னால் சகஜமாக பேசத் தயங்குவது தவிர்ப்பது, அவள் எனது முன்னாள் காதலி, பிரிந்துவிட்டேன். இப்போ நாங்க நல்ல பிரண்ட்ஸ் என கூறினால் கவனம் தேவை. நிங்கள் எப்போது வேண்டுமானாலும் கழட்டி விடப்படலாம்.
17 வயது முதல் 25 வயது வரை பெற்றோரின் கவனம் பிள்ளைகள் மீது அதிகம் இருக்க வேண்டும். நல்லவர்களும்,,கெட்டவர்களும் இரண்டு பக்கமும் உண்டு. மீன் தண்ணீருக்குள் சிந்தும் கண்ணீரைப்போல் பெண் படும்பாடு வெளி உலகத்துக்கு தெரியாமலே போகிறது. வாழ்க்கையை அலங்கோலப்படுத்தி அலைய வைப்பவர்கள் உணர வேண்டும்.
ஒரு நல்ல நபரை காதலித்து விட்டு ஏமாற்றுவது வைரத்தை எறிந்து விட்டு கூழாங்கல்லை தேர்வு செய்வது போன்றதே. ஒரு முறை ஏமாற்றியவன் எப்போதும் ஏமாற்றக் கூடியவனே. நம்பிக்கை என்பது ஒரு காகிதம் போன்றது. ஒரு முறை கசக்கி விட்டால் அதை மீண்டும் சரிப்படுத்த முடியாது. பெண்ணின் இதயத்தோடு விளையாடலாமா?
திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி தருவதை நம்பி திருமணத்திற்கு முன் காதலனுடன் உடல் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். திருமணத்திற்கு முன் யாரையும் நம்பி தன்னை தர முன்வருவது மிகவும் ஆபத்தானது. வரம்பு முறையின்றி கண்டபடி நடந்துகொள்வது நமது மண்ணின் பழக்கமல்ல.
விருப்பமில்லை, திருமணத்திற்கு பிறகுதான் எல்லாம் என உறுதியாக சொல்லப் பழக வேண்டும். மருந்து குணமாக்கி விடும் என நம்பி விஷத்தை குடிப்பதை போன்றதே திருமணத்திற்கு முந்தைய பெண்ணுடனான உடல் தொடர்பு. பெண்ணின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். அவர்கள் மிக சிறப்பாக விளையாடத் தெரிந்தவர்கள். காதலில் நேர்மை வேண்டும். பெண்ணை அவமதித்தவர்கள், தவறிழைத்தவர்கள், பின்நாட்களில் தவறான துணைகளால் பழிதீர்க்கப் படுகிறார்கள் என்பதை காலம் உணர்த்துகிறது.
திருமணத்திற்கு முன் உடல் தொடர்பு நம் நாட்டின் பண்பாடு அல்ல என்பதை இத்தலைமுறை உணர வேண்டும் சிக்கி சீரழிந்தவர்கள், ஏமாந்தவர்கள், இனி ஏமாற காத்திருப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால் சரி. இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் கண்ணியத்துடனும், நாகரீகமாகவும் நடந்து கொண்டாலே அது பெண்களுக்கு செய்யும் பேருதவிதான்.

No comments:
Post a Comment