மேற்குலகில் காணமுடியாத நமது திருமண சடங்கு முறைகள் தி. சுவாமிநாதன் நாமக்கல்.

.

திருமண நிகழ்ச்சி நமது வாழ்வில் நடக்கும் முக்கியமான முதல் நிகழ்ச்சி.
பால்ய விவாகம் சுயம்வரம் போன்ற பழைய நடைமுறைகள் மறைந்து விட்டன. ராமாயணத்தில் சீதையை மணப்பதற்கு வில்லை முறித்தான் ராமன். பழந்தமிழகத்தில் முரட்டுக் காளையை அடக்கிப் போட்டியில் வென்று வீர விளையாட்டுகளின் மூலம் விரும்பிய பெண்ணை மணம் புரிந்துள்ளனர். நடுக்கல் என்கிற பெரிய பாறாங்கல்லை மணமகன் தூக்கி காட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது. இன்று நல்ல வேலை-சம்பளம் இருந்தால் சரி. நமது நாட்டு தட்ப வெப்ப நிலை காரணமாக 8-9 ஆம் வகுப்பு படிக்கும்போதேää பெண் குழந்தைகள் பருவம் எய்து விடுகிறார்கள்.
பொன்நகைகள் பட்டுச்சேலை போன்ற வண்ணக் கனவுகளை நனவாக்கும் நிகழ்ச்சியே திருமண நிகழ்ச்சியாகும். திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர். ஒருவனுக்கு ஒருத்;தியே சமூகம் அங்கீகாரம் அளித்துள்ளது. திருமணம் என்றால் தெய்வகடாட்சம் பொருந்திய இணைதல் என்று பொருள். முற்காலங்களில் பத்து நாட்கள் வரை நடைபெற்று வந்த திருமண வைபவங்கள் தற்போது ஒன்றரை நாளில் முடிந்து விடுகிறது. வருங்காலங்களில் எப்படியோ?



பெண் பார்க்கும் படலம்:
மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருகிறார்கள். பெண் காபி கொடுக்க வரும்போது பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது குறைபாடு உள்ளதா என்பதை பார்ப்பார்கள். குரல் வளத்தை தெரிந்து கொள்ள பாடச் சொல்லி கேட்கும் வழக்கம் இருந்தது. இப்போதெல்லாம் வரன்களை தனியாக பேச அனுமதிக்கிறார்கள். திருமணத்திற்குப்  பின் பெண் வேலைக்கு போவதாää வேண்டாமா என்பது விவாதிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பின் பையனின் பெற்றோர் நம்முடன் இருப்பார்களா? தனிக்குடித்தனமா என்பதெல்லாம் முடிவெடுக்கப்படுகிறது. பெண்ணின் நிறம்ää உயரம் குடும்ப லட்சணம் எல்லாம் விவாதிக்கப்படும். ஒரே பையனா? உடன் பிறந்தவர்கள் உள்ளனரா? என்பதிலிருந்து சொத்து பிரியுமா? என்கிற வரை பொருளாதார கணக்கு இருக்கவே செய்கிறது. சமைக்கத் தெரியுமா? வீட்டு வேலை தெரியுமா? என்பதில் மாமியார் இனி ரிலாக்ஸ் ஆகலாம் என்ற எதிர்பார்;ப்பு உள்ளது. வேலைக்குப் போகும் பெண் என்றால் தன்னை ஆளாக்கிய குடும்பத்திற்கு ஆபத்துக் கட்டங்களில் உதவுவாளோ பிக்கல் பிடுங்கல் இருக்குமோ என்ற அச்சமும் உள்ளது. பெண் எப்படி? மணமகன் எப்படி? என்பதை அக்கம்பக்கம் விசாரிப்பது உண்டு. திருமண பத்திரிக்கையில் குடும்பத்தினர் படம் அரசியல் தலைவர்கள் படம்ää சுவாமிபடம் போடுவது. பின் அட்டையில் உறவினர்களை வரிசையாக பட்டியலிடுவது உண்டு. இது தவிர திருமண நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு நண்பர்கள் தனி அறையில் ரகசியமாக ‘பார்ட்டி’ கொடுப்பது உண்டு. இதை யார் தொடங்கி வைத்தது என்று தெரியவில்லை.

மணநாள் குறிப்பது:
வளர்பிறையில்தான் திருமணம் நடத்த வேண்டும் என்பர். மாப்பிள்ளை-பெண் பிறந்த நட்சத்திரங்களில் திருமணம் நடத்தக் கூடாது என்பது சோதிட நிபந்தனையாகும். பொதுவாக மழைக் காலங்களை தவிர்ப்பர். சனிää செவ்வாய் கிழமைகள் தவிர மற்ற நாட்களில் நல்ல நேரம் பார்த்து திருமணம் செய்விக்கின்றனர். இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வந்தால் மலமாதம் என்பர். மல மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் இடம் பெறக் கூடாது என்பர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் மண்டபம் கிடைப்பது போன்ற சிக்கல்களில் சில விதிமுறைகள் தளர்த்தப்படுவதும் உண்டு.
தாம்பூலத்தட்டில் திருமண அழைப்பிதழ் வைத்துக் கொடுத்தல்:
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அந்தஸ்த்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அந்த வேற்றுமை மனதில் இல்லை என்பதை காட்டுவதற்காகவே தாம்பூலத்தட்டில் திருமண அழைப்பிதழ் வைத்துக் கொடுக்கின்றனர். வெறுமனே கொடுத்தால் கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழும் இருக்கும் என்பதால் விஷயம் தெரிந்தவர்கள் தவிர்க்கின்றனர்.

காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது. திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் தங்கு தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.

பந்தக்கால் நடல்:
பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவதாகும்.

வாழை கட்டுதல்:
வாழை மரம் ஒரு முறைதான் குலை போடும். அது போல எனது வாழ்விலும் ஒரு முறைதான் திருமணம் என்பதை உணர்த்துகிறது.

கும்பம் வைத்தல்:
கும்பம் இறைவனின் திரு உடம்பின் அடையாளமாகும்.

அம்மி மிதிப்பது:
நான் கற்பு தன்மையில்  அம்மியை போல அதாவது கல்லை போல உறுதியாக இருப்பேன் என்றும்ää அம்மி வளையாதது. அது ஒரு உறுதிபாட்டின் சின்னமாகும். பெண்கள் வளையக் கூடாது. அம்மி மிதித்தல் என்பது வாழ்க்கையும் கடினப்பாதையால் ஆனது என்பதை இது உணர்த்துகிறது. மணப்பெண்னே இந்த கல் போல் உறுதியாயிருந்து பொறுமையுடன் எதிர்ப்புகளை சமாளி என்பதாகும்.

அருந்ததி பார்ப்பது:
வசிட்ட முனிவரும் அவரது மனைவியுமான அருந்ததியும் உள்ளத்தால் ஒன்றுபட வாழ்ந்து இல்லற  வாழ்விற்கு நல்ல உதாரணமாய் திகழ்ந்தார்கள். அவர்களை போன்றே இக்கால தம்பதிகளும் வாழ வேண்டுமென்பதை அறிவுறுத்தலே அருந்ததி பார்த்தல் என்பர். பகலில் நட்சத்திரத்தைää பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வுடன் என் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவேன் என்பது மற்றொரு பொருளாகும்.

தாரை வளர்த்தல்: உரிமையை விட்டுக் கொடுத்தலாகும்.

தாலி கட்டுதல்:
தாலி அவளது இறுதிக்காலம் வரை அவளது கழுத்தில் தொங்கும் மங்களச் சின்னமாகும். தாலி ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதுகாக்கும் வேலியை போன்றதாகும். தாலியணிந்த பெண் வேறொருவனுக்கு உரியவள் என்பதை அறிவிக்கும் சின்னமாகும். பெண்களின் திருமாங்கல்ய சரடு ஒன்பது இழைகளைக் கொண்டதாகும். அந்த ஒன்பது இழைகளும் ஒன்பது நற்குணம் கொண்டதாகும். அவை பக்திää தூய்மைää மேன்மைää ஆற்றல்ää விவேகம்ää தொண்டுää தன்னடக்கம் உண்மைää உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்  போன்றவையாகும். இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் ஒருங்கே அமையப் பெற வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்தும் பொருட்டு ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச் சரடு அணியப்படுகிறது.

மெட்டி அணிதல்:
தன்னை விட இளையவளான மணமகளின் காலை பிடித்து அதில் மணமகன் மெட்டி அணிவிப்பதன் மூலம் இருவரும் சமம் என்ற நிலையை உணர்த்துவதாகும். இதை மிஞ்சியென்றும் சொல்லுவார்கள். மெட்டி மெல்லியதாக அந்த விரலை அழுத்தும் போது கர்ப்பப்பை வலுவூட்டப்படுகிறது என நம்புகின்றனர். மெட்டி அணிந்த பெண்னை எதிர்வரும் ஆடவன் இவன் மாற்றான் மனைவியென்று அறிந்து ஒதுங்கி வழி விடுகிறான்.

மூன்று முடிச்சு:
முதல் முடிச்சி நீ  தெய்வத்திற்கும்ää மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதையும்ää இரண்டாவது முடிச்சு குலப் பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதையும்ää  மூன்றாவது முடிச்சு குல வாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

ஹோமம் வளர்த்தல்: அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக.

அட்சதை தூவுதல்: பழுதுப்படாத பச்சரிசிப் போல வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கி பெரியவர்கள் அட்சதை தூவுகிறார்கள்.

மணமக்கள் மாலை மாற்றுவது:
இருவரும் ஓருயிர் ஈருடலாக ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

மறுவீடு: மகளின் வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே மறுவீடு ஆகும்.

இல்லறதர்மம்:
இல்லறதர்மம் என்பது கற்பை காப்பதுடன்ää குலவிருத்திக்கு நல்ல பிள்ளைகளை பெற்றுத்தந்து கணவன் மனதில் இடம் பெற வேண்டும். அது போலவேää கணவனும் மனைவியை கடைசி வரை காப்பதுடன்ää அவளுடன் மட்டுமே கடைசி வரை வாழ வேண்டும் என்பதாகும்.

செய்யக்கூடாதது:
மூத்தவளைப் பெண் பார்க்கப் போய் அவளது தங்கை  அழகாக இருக்கிறாள் என்று தங்கையை பெண் கேட்பது தவறு. வரதட்சணை வாங்க மறுக்கும் நல்ல கொள்கை கொண்ட மணமகன் மீது உடலில் கோளாறு என புரளி பரப்புவதும் தவறு. நம் சமூகத்தில் அக்காள் மகளைää அத்தை மகளை மணந்து கொள்ளலாம். மூத்தவளுக்கு கல்யாணம் ஆகாமல் இளையவளுக்கு கல்யாணம் செய்யக் கூடாதென்பது நியதி.


புத்துணர்ச்சி தருகிறது:
நமது பாரம்பரிய திருமண சடங்குகள் புத்துணர்ச்சியைத் தருகிறது. மன நெகிழ்ச்சியைத் தருகிறது என்பது உண்மை. நம் நாட்டில் சடங்குகளும்ää சம்பிரதாயங்களும் பிரிக்க முடியாதவை. நாதஸ்வர மங்கள இசை மகிழ்வூட்டுகிறது. நமது பண்பாடு பரிசுத்தமானது. இரு இதயங்கள் வாழ்த்;துக்களுடன் இணைகிறது. ஓவ்வொரு சடங்கும் பொருள் பொதிந்தது. நமது சடங்குகள் அழகானவை. அர்த்தமுள்ளவை. மங்களமானவை. ஓவ்வொரு சடங்கும் ஒரு அழகான உட்கருத்துடன் இயற்றப்பட்டு இருக்கிறது. இது போல் மேற்குலகில் காணமுடியாது. அங்கு நம் நாட்டை விட விவாகரத்துக்கள்  மிக அதிகம்.
இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு:
இன்றைய அவசர உலகில் தனிக்குடித்தனத்தில் சமையல் அறையில் ஆணும் உதவ வேண்டும் என்று இன்றைய பெண்கள் எதிர்ப்பார்க்கின்றனர். பெண்களும் இன்று சம்பாதிப்பதால் ஆண்களிடம் மாப்பிள்ளை முறுக்கு  குறைய வில்லையே என்ற சிந்தனை உள்ளது. மனைவியின் எண்ணங்களைää ஆசைகளை கணவன்  மதிக்க வேண்டும். பெண் வீட்டு மனிதர்களை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றைய பெண்களிடம் உள்ளது. கணவர்கள் புரிந்து கொள்வார்களாக.
மற்றபடி மேற்குலக நாடுகளில் இப்படியான நிகழ்வுகள் இல்லை. நமது கலாச்சாரம் பாரம்பரியம் அன்னிய நாடுகளில் காண முடியாதது. பெருமை வாய்ந்தது. தனித்துவம் மிக்கது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்;;;;லை.
                                                                             தி. சுவாமிநாதன்
                                                                                   நாமக்கல்
                                                                              

No comments: