இருநூற்றாண்டில் தடம் பதிக்கும் எமது கல்லூரித் தாய் யா. யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை 1816 - 2016

.

இருநூற்றாண்டில் தடம் பதிக்கும் எமது கல்லூரித் தாய்  யா/ யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை  1816 - 2016
ஆயிரத்து எண்ணூற்றுப் பதினாறாம் ஆண்டு. மன்னர் காலத் தாய் மொழிக் கல்வி இறந்த காலம் ஆகி விட, புதிய உலகின் நவீன விஞ்ஞான தொழில் நுட்பக் கல்வி இன்னும் எதிர் காலத்தில் இருக்க, அறியாமை இருளில் மூழ்கி உறங்கிக் கிடந்தது யாழ்ப்பாணம். "வீடு தோறும் கலையின் விளக்கம், வீதி தோறும் இரண்டொரு பள்ளி, நாடு முற்றிலும் உள்ளன. ஊர்கள் நகர்கள் எங்கும் பல பல பள்ளி" என்று பாரதி கனவு காண்பதற்கே இன்னும் நூறு ஆண்டுகள் இருந்தன. வறுமை அணிந்து வாழ்ந்த சத்திமுற்றப் புலவரின் வகையறாவைச் சேர்ந்த ஏழையாளர்கள் ஆன புலவர்கள் சிலர், தம் குடிசைத் திண்ணைகளிலே, தோட்ட வேலையும் வீட்டு வேலையும் முடிந்து அலுத்துச் சலித்து வரும் மாணவர்களுக்கு முடிந்ததைச் சொல்லிக் கொடுப்பதே அன்று கல்வியாக இருந்தது. கல்வியை வளர்க்க வேண்டிய அரசோ கிராமப் புறங்களைத் திரும்பியும் பார்க்காமல் இருந்தது.




இந்நிலையில் தான், அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு ஆழ்கடலுக்கு உயிரை அர்ப்பணித்துக் கல்விப் பணியும் சமயப் பணியும் செய்ய வந்தார்கள் அருட்தந்தைமார் டானியல் பூவர், எட்வர்ட் வாரன் என்போர். ஆங்கில அரசால் யாழ்ப்பாணத்தை நோக்கிக் கை காட்டி விடப் பட்ட அவர்கள் தெல்லிப்பழையை அடைகிறார்கள். வெற்றிலையும் முந்திரியும் இராச வள்ளிக் கிழங்கும் செழித்து வளரும் அந்தச் செம்மண் நிலத்தில் அவர்கள் ஆறே ஆறு மாணவர்களுடன் ஒரு பாடசாலையைத் தொடங்குகிறார்கள். அந்தப் பாடசாலை தான் இன்றைய யூனியன் கல்லூரி - யாழ்ப்பாணத்தின் மிகப் பழைய ஆங்கிலப் பாடசாலை .  யாழ்மக்களின் அறிவுக் கண் திறக்கும் கல்லூரித் தாய்மார் எல்லோருக்கும் மூத்தவள் - தலைமகள்.

இன்று யூனியன் கல்லூரிக்கு இரு நூறு வயது.      இருநூறு வருடத்தில் அவள் கடந்து வந்த சோதனைகள் அநேகம் - அவளைக் காப்பாற்றி வளர்த்த பெரு மக்களும் பலர். 'கல்லூரி' அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்த ஐ. பி. துரைரத்தினம், மாணவர் தொகையை மட்டுமன்றிச் சாதனைகளையும் உச்சத்திற்குக் கொண்டு சென்ற பாலசுந்தரம் பிள்ளை, இடம் பெயர்ந்த போதும் அழிய விடாது கட்டிக் காத்த கந்தசாமி முதலிய அதிபர்கள் யூனியன் மைந்தர்களால் என்றும் பேசப் படுபவர்கள்.


தந்தை செல்வா எனப் போற்றப் படும் எஸ். ஜே. வி. செல்வநாயகம், யாழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்கள் பேராசிரியர்கள் வித்தியானந்தன், குணரத்தினம், மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை முதலானோர் புகழ் பூத்த பழைய மாணவர்கள். .                      இரு நூறாண்டு விழாக் காணும் யூனியன் கல்லூரி இடர் பல தாண்டி இன்னும் கன்னி அனைய கவினொடு வீறு நடை போடுவது

வாழ்த்தி வணங்கி மகிழ்வோம்! உவந்து தலை தாழ்த்திப் பணிந்து தொழுவோம்  



k. gputPzd;
ah. A+dpad; fy;Yhhp
rpl;dp gioa khzth; rq;f cWg;gpdh;

No comments: