இலங்கைச் செய்திகள்


ஆட்சியை தக்கவைப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதற்கு இறுதி நேரத்தில் சூழ்ச்சி

மர்மமான சிறிய ரக விமான மீட்பு: அருகில் இருந்த நாமலின் வாகனமும் கைப்பற்றல்

அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சுவா­ரஷ்ய சம்­ப­வங்கள்

உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன் : பரிசுத்த பாப்பரசர்

இதயத்தை கிளித்த இன்னல்களுடன் நீங்கள்: மடு அன்னை சக வாழ்வை அளிப்பார்: பாப்பரசர்

தீர்வு காண்பதற்கான பேச்சுக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார் : ஜோன் கெரி

இலங்­கை­யுடன் நெருங்­கிய உற­வு­களை பேண விரும்­பு­வ­தாக பிரித்­தா­னியா அறி­விப்பு

வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும


ஆட்சியை தக்கவைப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதற்கு இறுதி நேரத்தில் சூழ்ச்சி

12/01/2015 ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக தமது ஆட்­சி­யினை தக்கவைத்­துக்­கொள்ள இரா­ணுவ, அர­ச அதி­கா­ரங்­களை இறு­தி­வரை சட்­ட­வி­ரோ­த­மாக பயன்­ப­டுத்­திய குற்­றத்­திற்காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­ம் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரிவித்தார்.
போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் உள்­ளக செயற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­ப­டு­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவரின் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
இம்­முறை தேர்தல் ஜன­நா­யக ரீதியில் சுயா­தீ­ன­மாக இடம்­பெற்­றது. அதை மறுக்க முடி­யாது. ஆனால் திரை­ம­றைவில் பல சூழ்ச்­சிகள் சூட்­சு­ம­மாக நகர்த்­தப்­பட்­ட­தென்­பதே உண்மை. தேர்தல் முடி­வு­களை மாற்­றி­ய­மைக்க மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகியோர் பல முயற்­சி­களை மேற்­கொண்­டனர்.
இரா­ணு­வத்­தினை பயன்­ப­டுத்தி அடக்கு முறை­யினை மேற்­கொள்ள திட்டம் தீட்­டினர். ஜன­வரி ஏழாம் திகதி நள்­ளி­ரவு வரை இவர்­களின் தந்­தி­ரோ­பாயத் திட்­டங்கள் நகர்த்­தப்­பட்­டது. ஆனபோதிலும் இறுதி நேரத்தில் இரா­ணுவனத்தினர் பக்­கச்­சார்­பின்றி சுயா­தீ­ன­மாக செயற்­பட்­ட­மையும் பொலிஸார் சுயா­தீ­ன­மாக தனது கட­மை­யினை செய்­த­மை­யுமே ராஜ­பக்ஷ குடும்­பத்தின் திட்­டத்­திற்கு நெருக்­க­டி­யாகி விட்­டது.
எமக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டையில் சூழ்ச்சித் திட்­டங்­களின் பின்­ன­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் பெயர்­களே சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இவை தொடர்பில் ஆதா­ரங்கள் எம்­மிடம் உள்­ளன.
தேர்தல் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டமை மற்றும் இரா­ணுவ அதி­கா­ரங்­களை ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை மேற்­கொள்வோம். மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக பல குற்­றச்­சாட்­டுக்கள் இந்த தேர்தல் காலத்­தினுள் பதி­வா­கி­யுள்­ளன.
முழு­மை­யான ஆதா­ரங்­களை திரட்டி வரு­கின்றோம். எனவே, விசா­ர­ணை­களின் போது குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆதா­ரங்கள் வலுத்­தப்­படும் பட்­சத்தில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் இத­னுடன் தொடர்­பு­டைய நபர்கள், பிர­தான குற்­ற­வா­ளிகள் மீது கட்­டா­ய­மாக விசா­ரணை நடத்­தப்­படும். அவர்­க­ளுக்கு எதி­ராக சுயா­தீன சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.
அதேபோல் யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விவா­தித்­துக்­கொண்­டி­ருப்­பதை விடவும் நாட்டின் மாற்றம் குறித்தும் எமது அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்டும்.
முதலில் எமது நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்தில் 17வது திருத்தம், அதிகாரப் பகிர்வு என்பவற்றினை உடனடியாக செய்ய வேண்டும். அதேபோல் நூறு நாட்களில் மூவின மக்களையும் பாதுகாக்கும் வேலைத்திட்டங்களையும் செய்து கொடுக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சுயாதீன உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி மர்மமான சிறிய ரக விமான மீட்பு: அருகில் இருந்த நாமலின் வாகனமும் கைப்பற்றல்


13/01/2015 மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானமொன்று கொழும்பு 5இல் உள்ள பொருளாதார வலயத்தில் பொலிஸாரினால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இருந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சீ.எஸ்.என் நிறுவனத்தின் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பையடுத்தே மேற்படி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் இருவர் பயணிக்கலாம் எனவும் இந்த விமானத்தை இயக்குவதற்கு தேவையான பொருட்டிகள் அவ்விடத்தில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சுவா­ரஷ்ய சம்­ப­வங்கள்

13/01/2015 ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை மையில் நேற்று நடை­பெற்ற புதிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சில சுவா­ரஷ் ­ய­மான சம்­ப­வங்கள் இடம்­பெற்றதை அவ­தா­னிக்க முடிந்­தது.

அமைச்­சர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்கள் ஜனா­தி­ப­தி­யினால் வழங்­க ப்­பட்­டன. ஜனா­தி­பதி செய­லாளர் பி.பி. அபேகோன் நிய­மனக் கடி­தங்­களை வழங்கும் ஏற்­பா­டு­களை செய்­து­கொண்­டி­ருந்தார்.
ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன சபைக்கு வந்து ஆச­னத்தில் அமர்ந்­ததும் அதி­காரி ஒருவர் அமை ச்­சர்­க­ளுக்­கான நிய­மனக் கடி­தங்கள் அடங்­கிய அனைத்து கோப்­புக்­க­ளையும் ஒரு கதி­ரையில் வைத்து கதி­ரையை நகர்த்தி ஜனா­தி­பதி செய­லா­ள­ரிடம் கொண்­டு­வந்தார். அப் ­போது கதிரை திடீ­ரென சாய்ந்­து­விட்­டது. இதனால் கோப்­புக்கள் அனைத்தும் கீழே விழுந்­தன. இத னை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்க காத்­தி­ருந்­த­ வர்­களும் அவ­தா­னித்­தனர்.
பின்னர் குறித்து அதி­காரி உட­ன ­டி­யாக கோப்­புக்­களை சரி செய்து ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்தார். முதலில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சி ங்க திட்­ட­மிடல் மற்றும் பொரு­ளா­ தார அலு­வல்கள் அமைச்­ச­ராக பத ­வி­யேற்றார்.
அமைச்­சர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்­களை வழங்­கிய ஜனா­தி­பதி அனை­வ­ருக்கும் நிய­மனக் கடி­தங்­ களை வழங்­கி­விட்டு கைகூப்பி மரி­ யாதை செய்தார். ஆனால் அமைச்­ சர்­க­ளான ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் கபிர் ஹஷீம் ஆகி­யோ­ருக்கு ஜனா­தி­பதி கைலாகு கொடுத்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.
நிய­மனக் கடி­தங்­களில் உள்ள வாச­கத்தை வாசித்து சத்­திய பிர­மாணம் செய்­து­விட்டு அதில் கையொப் பம் இடு­வ­தற்கு இரண்டு பேனை­களை ஜனா­தி­பதி செய­லாளர் அபேகோன் அங்கு வைத்­தி­ருந்தார். இந்­நி­லையில் வீட­மைப்பு சமுர்த்தி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற சஜித் பிரே­ம­தாச நிய­மனக் கடி­தத்தில் தனது பேனையை எடுத்தே கையொப்பம் இட்டார். அதன் பின்னர் பல அமைச்­சர்கள் இவ்­வாறு செய்­தனர்.
எம்.கே.டி.எஸ். குண­வர்த்­தன காணி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற­போது ஜனா­தி­ப­தியின் பக்கம் திரு ம்பி நின்­று­கொண்டு கையொ­ப்பம் இட முயற்­சித்தார். அப்­போது ஜனா­தி­பதி அவரை மறு­பக்கம் அதா­வது செய­லாளர் பக்கம் திரும்பி கையொ ப்பம் இடு­மாறு கூறினார்.
சுகா­தார அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற ராஜித்த சேனா­ரட்ன சத்­தி­ய­ பி­ர­மா­ணத்தை வாசிக்கும் முன்னர் கையொப்பம் இட்­ட­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது. கையொப்பம் இட்ட பின்னர் அவர் சத்­தி­ யப் ­பி­ர­மா­ணத்தை வாசித் தார்.
பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற லக்ஷ்மன் கிரியெல்­லவும் சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற நவீன் திசா­நா­யக்­கவும் சத்­தி­ய­ப்பி­ர­மா­ணத்தை செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யிடம் நிய­மனக் கடி­தங்­களை வாங்­காமல் வந்­து­விட்­டனர். பின்னர் ஜனா­தி­பதி அழை த்து அவர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்­களை வழங்­கினார்.
மேலும் பிர­தி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்ற விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் இரா­ஜாங்க அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற ராதா­கி­ருஷ்­ணனும் தமிழ் மொழியில் சத்­தி­ய­பி­ர­மாணம் செய்­தனர்.
இதே­வேளை நிகழ்வு ஆரம்­பிப்­ப­தற்கு முன்னர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ரவிகரு­ணா­நா­யக்­க­வு டன் நீண்­ட­நேரம் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்தார். மேலும் சந்­தி­ராணி பண்­டார ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ர­ம­வுடன் கலந்­து­ரை­யா­டினார்.அத்­துடன் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பைசர் முஸ்­த­பா­வு­டனும் அர் ­ஜுன ரண­துங்­க­வு­டனும் சொற்­ப­நேரம் கலந்­து­ரை­யா­டினார். வீட­மை ப்பு அமைச்­ச­ராக பதவியேற்ற சஜித் பிரேமதாச நிகழ்வு ஆரம்பிக்க சற்று நேரத்துக்கு முன்னரே சபைக்குள் வந்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனா திபதி பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாசவும் வருகை தந் திருந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களின் உறவினர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன் : பரிசுத்த பாப்பரசர்


14/01/2015 உங்களுக்காக நான் பிரார்த்திகின்றேன்.எனக்காக இலங்கை வாழ்மக்களாகிய நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை ஆராதனை இடம்பெற்றது. இதில் நாடளாவிய ரீதியில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 
இங்கு மறையுரை ஆற்றிய பரிசுத்த பாப்பரசர்,
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்..' மேற்கூறப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட புகழ்ச்சி மிக்க தீர்க்கதரிசனமாகும். இயேசு கிறிஸ்த்துவின்  நற்செய்தி போதனை உலகின் எல்லைகள் எல்லாவற்றையும் சென்றடைவதை இறைவாக்கினர் எசாயா முன்னறிவிக்கின்றார். 
இந்த தீர்க்கதரிச முன்னறிவிப்பானது மிகவும் மேன்மையான நற்செய்தியின் மறைப்பரப்பாளரான யோசவாஸ் அவர்களின் புனித நிலைக்கு உயர்த்தும் திருவிழாவின் வேளையில் ஒரு சிறப்பான அர்த்தத்தை  கொடுகின்றது. திருச்சபையின் வரலாற்றில் காணப்படும் எண்ணிடலங்கா ஏனைய மறைப்பரப்பாளர்களைப் போல புனித யோசேவாஸ் அவர்களும் ' நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையுமண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்..' மேற்கூறப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட புகழ்ச்சி மிக்க தீர்க்கதரிசனமாகும். 

இயேசு கிறிஸ்த்துவின்  நற்செய்தி போதனை உலகின் எல்லைகள் எல்லாவற்றையும் சென்றடைவதை இறைவாக்கினர் எசாயா முன்னறிவிக்கின்றார். இந்த தீர்க்கதரிச முன்னறிவிப்பானது மிகவும் மேன்மையான நற்செய்தியின் மறைப்பரப்பாளரான யோசவாஸ் அவர்களின் புனித நிலைக்கு உயர்த்தும் திருவிழாவின் வேளையில் ஒரு சிறப்பான அர்த்தத்தை  கொடுகின்றது. 
திருச்சபையின் வரலாற்றில் காணப்படும் எண்ணிடலங்கா ஏனைய மறைப்பரப்பாளர்களைப் போல புனித யோசேவாஸ் அவர்களும் ' நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன்  தூய ஆவியின் பெயரரால் திருமுழுக்கு கொடுங்கள்' (மத்.:28:19) என்ற உயிர்த்த இயேசுவின் கட்டளைக்கு பதிலுரைத்தார். தனது வார்த்தைகளினாலும் மிகப்பிரதானமாக தனது வாழ்வின்  முன்னுதாரணத்தாலும் இந்நாட்டு மக்களை 'வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமை பேற்றையும்" தரவல்ல விசுவாச வாழ்விற்கு இட்டுச் சென்றுள்ளார்.
புனிதர் ஜோசோவாஸ் அவர்களின் இலங்கை மக்களுக்கான நன்மைத்தனமும் அன்பும் நிறைந்த கடவுளின் அதிசக்தி மிக்க அடையாளத்தை காண்கின்றோம். அத்தோடு கடவுளின் வழிகளில் நிலைத்து நிற்பதற்கும் புனிதத்த்துவத்தில் வளர்வதற்கும் அவர் தன் வாழ்வை முற்றுமுழுதாக அர்ப்பணித்து ஒப்புரவு எனும் நற்செய்தின் அழைப்பிற்கு சான்றுபகரவும் புனிதர் யோசேவாஸ் அவர்கள் சவால்விடுகின்றார். இந்தியாவின் கோவா நகரைப் பிறப்பிடமாக கொண்டு 'ஒறற்ரோறியன்" சபையைச் சார்ந்திருந்த புனிதர் யோசேவாஸ் அவர்கள் இந்நாட்டுக்கு மறைபரப்பு ஆர்வத்தாலும் இந்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பாலும் தூண்டப்பட்டு வந்து சேர்ந்தார். மதக்கலாபனைகள் நிலவியதால் ஏழைபோல உடைகள் அணிந்து கூடுதலாக இரவில் தனது குருத்துவ கடமைகளை இறைமக்களுக்காக மறைவான இடங்களில் நிறைவேற்றினார்.
அவரது முயற்சிகள் கலாபனைக்குட்படுத்தப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீக மற்றும் உள சக்தியை கொடுத்தன. நோயுற்றவர்களுக்கும் துன்பபட்டவர்களுக்கும் பணியாற்றுவதில் புனிதர் ஜேசேவாஸ் அதிக அக்கறை காட்டினார். கண்டியில் அம்மை நோய் பரவிய காலத்தில் நோயாளிகளுக்கு அவர் ஆற்றிய சேவை கண்டி மன்னனால் புகழப்பட்டு பின்னர் அங்கே மறைப்பணி ஆற்றுவதற்கு அதிக சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தது. கண்டியை மையமாக கொண்டு இத்தீவின் ஏனைய பகுதிகளுக்கு தனது பணியை விரிவடையச் செய்தார். மறையுரை பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு மிகவும் களப்படைந்து 59ஆவது வயதில் இறைப்பதம் அடைந்த இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதே தகுதியானதே. புனித யோசப்வாஸ் அடிகளார் பல காரணங்களை முன்னிட்டு ஒரு எடுத்துகாட்டாகவும் ஓர் ஆசானாகவும் தொடர்கிறார். ஆனால் நான் அதன் மூன்று விடயங்களை அவதானிப்புக்குட்படுத்த விரும்புகின்றேன்.
முதலாவதாக அவர் ஒரு முன்மாதிரியான குருவானவராக திகழ்ந்ததார்.யோசேவாஸை போன்று கடவுளுக்கு அயலவர்களுக்கு சேவையாற்ற தம்மை அர்ப்பணித்து பெரும்மளவான குருக்களும் துறவியர்களும் ஆண்களும் பெண்களுமாக எம்முடன் இருக்கின்றனர். 
உங்கள் ஒவ்வொருவருக்கும் புனித யோசேவாஸ் அடிகளாரை உங்கள்  வழிகாட்டியாக நோக்குமாறு பரிந்துரைக்கின்றேன். அவர் எல்லைகளுக்கும் அப்பாற் சென்று இயேசுவை அறியவும் அன்பு செய்யவும்எங்களுக்கு கற்பிக்கின்றார். அவர் நற்செய்தியின் நிமித்தம் பொறுமையாக துன்பங்களை சகித்து கொள்வதிலும் நமது மேற்படியில் இருப்பதவர்களுக்கு கீழ்படிவிலும் திருச்சபையின் நிமித்தமான அன்பின் கரிசனையிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.
எங்களைப்போலவே யோசேவாஸ் மாற்றங்கள் துரிதமாக ஏற்படுகின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தார். கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராகவும் தங்களுக்குள்ளே பிளவு பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குள்ளேயே பகைமை உணர்வு இருந்தது. உள்ளேயும் வெளியே நிறைந்த கலாபனைகள் இருந்தன. புனித யோசேவாஸ் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கி தொடர்;ந்து பிரார்த்தனையில் ,ணைந்திருந்தார்.

எல்லா மக்களக்கும் கடவுளினது அன்பினதும் இரக்கத்தினதும் அடையாளமாக இருந்தார். யோசேவாஸ் அமைதி நோக்கிய பணியில் சமைய பிரிவினைககளை தாண்டி செல்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவரது ,றைவன்பால் கொண்ட பிளவு படாத அன்பு அயலவர்களை நோக்கிய அன்பிற்கு அவரைத திறந்து விட்டது. 
தேவையுள்ள எவருக்கும் அவர் எவ்விடத்தவராக இருந்தாலும் அவர் பணிப்புரிந்தார். இலங்கை திருச்சபை தாயானவள் மகிழ்வுடனும் தாராளமாகவும் சமூகத்தின் எல்லா அங்கத்தவர்களுக்கும் பணியாற்றி கொண்டிருக்கிறாள். தனது சேவைகளை சமய இன சமூக நிலை போன்ற வேறுப்பாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி மருத்துவ மற்றும் இரக்கப் பணிகளை ஆற்றுகின்றார். மாறாக இந்த பணிகளை ஆற்றுவதற்று உரிய சுதந்திரத்தையே அவர் கோருகின்றார்.

சமய சுதந்திரம் என்பது அடிப்படையான மனித உரிமையாகும். ஒவ்வொரு தனி நபரும்; தனிப்பிட்ட முறையிலோ அல்லது உறவு முறையிலோ உண்மையை அறிவதற்கும் பகிரங்கமாக தனது சமய நம்பிக்கைகளை அறிக்யையிடுவதற்கும் அச்சுறுத்தலும் அழுத்தமும் இல்லாமல் வாழ்வதற்கும் சுதந்திரம் உடையவர்.யோசேவாஸ் அடிகளார் வாழ்க்கை கற்பிப்பது போன்று உண்மையான இறைவழிபாடு என்பது பிரவினைகள் வெறுப்பு வன்முறை ஆகியவற்றை கொடுக்காது என்பதாகும். மாறாக வாழ்வின் புனித தன்மையையும் மற்றவர்களின் சுதந்திரத்தையும் மான்பையும் மதிப்பையும் அனைவருடைய நல் வாழ்வுக்காகவும் அன்புடன் அர்ப்பணம் செய்வதை விளைவாக கொடுக்கும். யோசேவாஸ் இலங்கை கத்தோலிக்க மக்களுக்கு பணியாற்ற வந்த போதிலும் அவரது நற்செய்தியானது அனைத்து மக்களையும் சென்றடைந்தது. தனது வீட்டை குடும்பத்தை வசதியான  வாழ்க்கைச் சூழலை விட்டு நீங்கி கடவுளின் கட்டளைக்கு செவிமெடுத்தார். எனவே யோசேவாசின் உதாரண வாழ்வை பின்பற்றி இந்நாட்டு கிறிஸ்த்தவர்களும் நம்பிக்கையில் உறுதிப்பெற்று இலங்கையில் அமைதிக்கும் நீதிக்கும் ஒப்புரவுக்கும் பாரிய பங்களிப்பை வழங்குபவர்களாக மாறவேண்டும் என ஆசிக்கின்றேன்.
இறைவன் இதனையே உங்களிடம் இருந்து எதிர்பாரக்கின்றார். 

'தந்தை மகன்  தூய ஆவியின் பெயரரால் திருமுழுக்கு கொடுங்கள்' (மத்.:28:19) என்ற உயிர்த்த ,யேசுவின் கட்டளைக்கு பதிலுரைத்தார். தனது வார்த்தைகளினாலும் மிகப்பிரதானமாக தனது வாழ்வின்  முன்னுதாரணத்தாலும் இந்நாட்டு மக்களை 'வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமை பேற்றையும்" தரவல்ல விசுவாச வாழ்விற்கு இட்டுச் சென்றுள்ளார்.
புனிதர் ஜோசோவாஸ் அவர்களின் ,லங்கை மக்களுக்கான நன்மைத்தனமும் அன்பும் நிறைந்த கடவுளின் அதிசக்தி மிக்க அடையாளத்தை காண்கின்றோம். அத்தோடு கடவுளின் வழிகளில் நிலைத்து நிற்பதற்கும் புனிதத்த்துவத்தில் வளர்வதற்கும் அவர் தன் வாழ்வை முற்றுமுழுதாக அர்ப்பணித்து ஒப்புரவு எனும் நற்செய்தின் அழைப்பிற்கு சான்றுபகரவும் புனிதர் யோசேவாஸ் அவர்கள் சவால்விடுகின்றார். இந்தியாவின் கோவா நகரைப் பிறப்பிடமாக கொண்டு 'ஒறற்ரோறியன்" சபையைச் சார்ந்திருந்த புனிதர் யோசேவாஸ் அவர்கள் இந்நாட்டுக்கு மறைபரப்பு ஆர்வத்தாலும் இந்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பாலும் தூண்டப்பட்டு வந்து சேர்ந்தார். மதக்கலாபனைகள் நிலவியதால் ஏழைபோல உடைகள் அணிந்து கூடுதலாக இரவில் தனது குருத்துவ கடமைகளை இறைமக்களுக்காக மறைவான இடங்களில் நிறைவேற்றினார்.
அவரது முயற்சிகள் கலாபனைக்குட்படுத்தப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீக மற்றும் உள சக்தியை கொடுத்தன. நோயுற்றவர்களுக்கும் துன்பபட்டவர்களுக்கும் பணியாற்றுவதில் புனிதர் ஜேசேவாஸ் அதிக அக்கறை காட்டினார். கண்டியில் அம்மை நோய் பரவிய காலத்தில் நோயாளிகளுக்கு அவர் ஆற்றிய சேவை கண்டி மன்னனால் புகழப்பட்டு பின்னர் அங்கே மறைப்பணி ஆற்றுவதற்கு அதிக சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தது. கண்டியை மையமாக கொண்டு இத்தீவின் ஏனைய பகுதிகளுக்கு தனது பணியை விரிவடையச் செய்தார். மறையுரை பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு மிகவும் களப்படைந்து 59ஆவது வயதில் இறைப்பதம் அடைந்த இவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதே தகுதியானதே. புனித யோசப்வாஸ் அடிகளார் பல காரணங்களை முன்னிட்டு ஒரு எடுத்துகாட்டாகவும் ஓர் ஆசானாகவும் தொடர்கிறார். ஆனால் நான் அதன் மூன்று விடயங்களை அவதானிப்புக்குட்படுத்த விரும்புகின்றேன்.
முதலாவதாக அவர் ஒரு முன்மாதிரியான குருவானவராக திகழ்ந்ததார்.யோசேவாஸை போன்று கடவுளுக்கு அயலவர்களுக்கு சேவையாற்ற தம்மை அர்ப்பணித்து பெரும்மளவான குருக்களும் துறவியர்களும் ஆண்களும் பெண்களுமாக எம்முடன் இருக்கின்றனர். 
உங்கள் ஒவ்வொருவருக்கும் புனித யோசேவாஸ் அடிகளாரை உங்கள்  வழிகாட்டியாக நோக்குமாறு பரிந்துரைக்கின்றேன். அவர் எல்லைகளுக்கும் அப்பாற் சென்று இயேசுவை அறியவும் அன்பு செய்யவும்எங்களுக்கு கற்பிக்கின்றார். அவர் நற்செய்தியின் நிமித்தம் பொறுமையாக துன்பங்களை சகித்து கொள்வதிலும் நமது மேற்படியில் இருப்பதவர்களுக்கு கீழ்படிவிலும் திருச்சபையின் நிமித்தமான அன்பின் கரிசனையிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.
எங்களைப்போலவே யோசேவாஸ் மாற்றங்கள் துரிதமாக ஏற்படுகின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தார். கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராகவும் தங்களுக்குள்ளே பிளவு பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குள்ளேயே பகைமை உணர்வு இருந்தது. உள்ளேயும் வெளியே நிறைந்த கலாபனைகள் இருந்தன. புனித யோசேவாஸ் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கி தொடர்;ந்து பிரார்த்தனையில் இணைந்திருந்தார்.

எல்லா மக்களக்கும் கடவுளினது அன்பினதும் இரக்கத்தினதும் அடையாளமாக இருந்தார். யோசேவாஸ் அமைதி நோக்கிய பணியில் சமைய பிரிவினைககளை தாண்டி செல்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவரது இறைவன்பால் கொண்ட பிளவு படாத அன்பு அயலவர்களை நோக்கிய அன்பிற்கு அவரைத திறந்து விட்டது. 
தேவையுள்ள எவருக்கும் அவர் எவ்விடத்தவராக இருந்தாலும் அவர் பணிப்புரிந்தார். அவரது முன்னுதராணங்கள் இங்கை திருச்சபையை தொடர்ந்து ஊக்கப்படுத்திக கொண்டிருக்கின்றன. இலங்கை திருச்சபை தாயானவள் மகிழ்வுடனும் தாராளமாகவும் சமூகத்தின் எல்லா அங்கத்தவர்களுக்கும் பணியாற்றி கொண்டிருக்கிறாள். தனது சேவைகளை சமய இன சமூக நிலை போன்ற வேறுப்பாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி மருத்துவ மற்றும் இரக்கப் பணிகளை ஆற்றுகின்றார். மாறாக இந்த பணிகளை 
ஆற்றுவதற்று உரய சுதந்திரத்தையே அவர் கோருகின்றாள்.

சமய சுதந்திரம் என்பது அடிப்படையான மனித உரிமையாகும். ஒவ்வொரு தனி நபரும்; தனிப்பிட்ட முறையிலோ அல்லது உறவு முறையிலோ உண்மையை அறிவதற்கும் பகிரங்கமாக தனது சமய நம்பிக்கைகளை அறிக்யையிடுவதற்கும் அச்சுறுத்தலும் அழுத்தமும் இல்லாமல் வாழ்வதற்கும் சுதந்திரம் உடையவர்.யோசேவாஸ் அடிகளார் வாழ்க்கை கற்பிப்பது போன்று உண்மையான இறைவழிபாடு என்பது பிரவினைகள் வெறுப்பு வன்முறை ஆகியவற்றை கொடுக்காது என்பதாகும். மாறாக வாழ்வின் புனித தன்மையையும் மற்றவர்களின் சுதந்திரத்தையும் மான்பையும் மதிப்பையும் அனைவருடைய நல் வாழ்வுக்காகவும் அன்புடன் அர்ப்பணம் செய்வதை விளைவாக கொடுக்கும். யோசேவாஸ் இலங்கை கத்தோலிக்க மக்களுக்கு பணியாற்ற வந்த போதிலும் அவரது நற்செய்தியானது அனைத்து மக்களையும் சென்றடைந்தது. தனது வீட்டை குடும்பத்தை வசதியான  வாழ்க்கைச் சூழலை விட்டு நீங்கி கடவுளின் கட்டளைக்கு செவிமெடுத்தார். எனவே யோசேவாசின் உதாரண வாழ்வை பின்பற்றி இந்நாட்டு கிறிஸ்த்தவர்களும் நம்பிக்கையில் உறுதிப்பெற்று இலங்கையில் அமைதிக்கும் நீதிக்கும் ஒப்புரவுக்கும் பாரிய பங்களிப்பை வழங்குபவர்களாக மாறவேண்டும் என ஆசிக்கின்றேன். இறைவன் இதனையே உங்களிடம் இருந்து எதிர்பாரக்கின்றார்.  நன்றி வீரகேசரி 

இதயத்தை கிளித்த இன்னல்களுடன் நீங்கள்: மடு அன்னை சக வாழ்வை அளிப்பார்: பாப்பரசர்


14/01/2015 இங்கு இன்று  ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்;பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர்.  இலங்கை வாழ் எவராலும் இவ்விடத்தின் துன்பம் நிறைந்த சம்பவங்களை, கால வரையறைகளை மறக்க முடியாது  என்று பரிசுத்த பாப்பரசர்  தெரிவித்தார். 
இருப்பினும் மருதமடு அன்னை என்றுமே உங்களுடன் உறுதுணையாக இருக்கின்றார். அனைத்து வீடுகளிலும் அவள் தான் அன்னை. வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒப்புரவு சக வாழ்வை மீளப்பபெறுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவரிலும் அவள் வீற்றிருக்கின்றாள் என்றும்  பரிசுத்த தந்தை குறிப்பிட்டார். 
இலங்கையில் சிங்கள் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களாக மரியன்னையோடு இணைந்து அவருடைய பரிந்து பேசுதலின் வழியாக அழிந்து போன ஒற்றுமையை மீள கட்டியெழுப்புவோம் என மனம் திறந்து மன்றாடுவோம். உங்களோடு இணைந்து மரியன்னையின் இல்லத்தில் நிற்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இட்டு மகிழ்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மடு தேவாலயத்துக்கு இன்று மாலை  விஜயம் செய்த பாப்பரசர் அங்கு அன்னை திருத்தலத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்pப்பிட்டார்.   நன்றி வீரகேசரி 
தீர்வு காண்பதற்கான பேச்சுக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார் : ஜோன் கெரி

14/01/2015 இலங்கை மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும் அமை­தி­யான முறையில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும் அமெ­ரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மகிழ்ச்சி வெளி­யிட்­டுள்ளார்.
இலங்­கையில் மனித உரி­மை­க­ளையும், ஜன­நா­ய­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக புதி­தாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள அர­சாங்­கத்­திற்கு உத­வு­வ­தற்கு தாம் தயார் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
தனது இந்­திய விஜ­யத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளி­யிட்­டுள்ளார். இலங்­கை­யு­ட­னான உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான அமெ­ரிக்­காவின் விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­து­வற்­காக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யுடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்ள கெரி, அதற்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் அமை­தி­யான தேர்­தலை வலி­யு­றுத்தி மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வு­டனும் தான் உரை­யா­டியதாக குறிப்­பிட்­டுள்ளார்.
இலங்கை மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும், அமை­தி­யான முறையில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும், மகிழ்ச்சி வெளி­யிட்­டுள்ள அவர், இலங்­கையில் இன்­னமும் பல சவால்கள் உள்­ளன என்றும் எச்­ச­ரித்­துள்ளார்.
மனித உரி­மைகள், நல்­லாட்சி போன்ற விட­யங்­க­ளுக்கு தீர்வை காண்­ப­தற்­கான பேச்­சுக்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு நாங்கள் தயார் என உட­ன­டி­யாக தெரி­வித்­துள்­ளோம். இலங்கை மக்­க­ளுக்­கான புதிய அத்தியாயத்தை, புதிய தருணத்தை, புதிய வாய்ப்பை ஏற்படுத்துவதாக இந்த புதிய அரசு அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 
இலங்­கை­யுடன் நெருங்­கிய உற­வு­களை பேண விரும்­பு­வ­தாக பிரித்­தா­னியா அறி­விப்பு

14/01/2015 இலங்­கை­யுடன் நெருங்­கிய உற­வு­களைப் பேண விரும்­பு­வ­தாக பிரித்­தா­னியா அறி­வித்­துள்­ளது. இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துடன் நெருங்­கிய உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­வ­தாக பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரி­வித்­துள்ளார்.
இலங்­கையின் புதிய பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு, பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துள்ளார்.
இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துடன் உற­வு­களை வலுப்­ப­டுத்திக் கொள்­ளவே விரும்­பு­வ­தாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ஸ்வாயார் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 


வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும்

கேபி மற்றும் கருணா ஆகியோரிடம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்
- சரத் பொன்சேகா
15/01/2015 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களான குமரன் பத்மநாதன் மற்றும் வினாயகsarath-fonsekaமூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஒரு சமயம் கடும்போக்கு பயங்கரவாதிகளாக இருந்துள்ள படியால் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அந்த விசாரணை கைப்பற்றப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயின் சொத்துக்களின் இருப்பிடத்தை கண்டறிவதிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா கூறுகிறார்.
தமிழ் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளராகிய குமரன் பத்மநாதன் அல்லது கேபி என்பவர் இராணுவத்தின் காவலின் கீழ் இருந்தபடியே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக கிளிநொச்சியில் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார். கருணா அம்மான் என்று பொதுவாக அழைக்கப்படும் முரளிதரன், முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (யு.பி.எப்.ஏ) அரசாங்கத்தில் ஒரு பிரதி அமைச்சராக இருந்துள்ளார்.
டைம்ஸ் ஒப் இந்தியாவுடனான ஒரு நேர்காணலில், தற்போது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் இராணுவத் தலைவர், கேபி மற்றும் கருணா ஆகியோர் சட்ட நடவடிக்கைக்கு முகங் கொடுக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் “கடும் போக்கு பயங்கரவாதிகள்” என்று சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயிடம் இருந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைப் பற்றிக் கேட்டபோது, எல்.ரீ.ரீ.ஈயின் பெரும் பகுதி பணம் மற்றும் தங்கம் என்பன கேபி வசம் இருந்தன அந்தக் காரணத்தால்தான் அவர் ராஜபக்ஸ அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு வந்தார் என்று பொன்சேகா தெரிவித்தார்.
“கேபி மூலமாக தொன் கணக்கான தங்கம் ராஜபக்ஸ குடும்பத்தாரால் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது, இது சம்பந்தமாக நிச்சயம் ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று அவர் சொன்னார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழுள்ள புதிய அரசாங்கத்தில் அவரது பொறுப்புகள் பற்றிக் கேட்டபோது, பாதுகாப்பு அம்சத்தில் தான் ஒரு பங்கு வகிக்கக்கூடும் என்று முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
“தேசிய பாதுகாப்பு சேவையில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் தற்சமயம் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் நான் ஒரு அரசியல் பதவியை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் சொன்னார்.
பொன்சேகா மேலும் தெரிவிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது ஏற்பட்டதாக கூறப்படும் மனித உரிமைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் பற்றி சட்டபூர்வமான விசாரணைகள் எதற்கும் முகங்கொடுக்கத் தான் தயார் என்றார்.
“சட்டபூர்வமான விசாரணை ஒன்று இருக்குமானால், அப்போது கள நடவடிக்கைகளை மேற்கொண்டவன் என்பதால் அதற்கு முகங்கொடுக்க நான் தயார். யுத்த வெற்றி வீரர்கள் விசாரணையை எதிர்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன்  என்பன போன்ற கருத்துக்களை சொல்வதன் மூலம் ராஜபக்ஸ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தார். இதுபோன்ற முட்டாள் தனமான அநேக அறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் போரைப்பற்றியும் மற்றும் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய அறிவு அவருக்கு கொஞ்சமே உள்ளது”
வட பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது பற்றி அவரிடம் வினாவியபோது, “உள்நாட்டு பாதுகாப்புக்காக மட்டுமன்றி வெளிநாட்டு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டும் நாங்கள் இராணுவத்தை அங்கு வைத்திருக்க வேண்டும்” என்று பொன்சேகா தெரிவித்தார்.
இராணுவம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளது,மற்றும் “வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும்” என்று அவர் சொன்னார்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை கொழும்பில் இருந்து அவர்களின் இராஜதந்திரிகள் மூலமாக மேற்கொள்வதாக வெளியான சமீபத்தைய அறிக்கைகளைப் பற்றி கேட்டபோது, புதிய அரசாங்கம்  உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இந்தியாவின் தென் பகுதியில் தாக்குதல் நடத்த இலங்கை மண்ணைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் சொன்னார்.
“ அப்படி நடக்குமானால் இறையாண்மை உள்ள ஒரு நாடு என்கிற வகையில் அப்படியான பயங்கரவாத செயற்பாடுகளை எங்களால் அனுமதிக்க முடியாது. எந்த வகையான பயங்கரவாத செயற்பாடுகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்”
அந்த நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:
 • கேள்வி: தேர்தல் முடிவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பொன்சேகா: ராஜபக்ஸ இராணுவம், நீதிச்சேவை, காவல்துறை, அரச நிர்வாகம் போன்ற சகலதையும் அரசியல்மயம் ஆக்கிவிட்டார். அங்கு நல்லாட்சி என்பது ஒருபோதும் கிடையாது. நிருவாகத்தில் அவரது குடும்ப அங்கத்தவர்களே பெருமளவு தொடர்பு கொண்டுள்ளார்கள். ஊழல் மிகவும் உயர்வாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்துப் பிரிவு மக்களும் அவரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். எனவே மக்கள் அவரை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து விட்டார்கள்.
 • கேள்வி: புதிய அரசாங்கத்தில் உங்கள் பங்கு என்ன? எந்த வகையான பொறுப்பை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பொன்சேகா: பாதுகாப்பு அம்சத்தில் ஒரு பிரதான பங்கை நான் வகிக்க உள்ளேன். தேசிய பாதுகாப்பு சேவையில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் தற்சமயம் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் நான் ஒரு அரசியல் பதவியை எதிர்பார்க்கிறேன் (பாதுகாப்பு அமைச்சைக் குறிப்பிடுகிறார்).
 • கேள்வி: ராஜபக்ஸ தோற்கடிக்க முடியாத ஒரு தலைவரைப் போல தோன்றினார். அவரைத் தோற்கடிக்க முடியும் என்று எதிரணி எப்போது நம்பத் தொடங்கியது?
பொன்சேகா: நான் சிறையை விட்டு 2012ல் வெளியே வந்தேன். 2015க்கு முதல் நாங்கள் அவரை விரட்டுவோம் என்று நான் ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டேன். பிரதான எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ராஜபக்ஸவுக்கு எதிராக போராட முடிவு செய்தன. சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்கா போன்ற மூத்த தலைவர்கள் மற்றும் நான் ஆகியோர் ஒரு வலிமையான எதிரணிக்கான ஆவலை வெளியிட்டோம் மற்றும் மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஸவை விட்டு வெளியேறினார். ஐக்கியமான இந்த எதிரணியால் அவரைத் தோற்கடிக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றின் ஆதரவு மிகவும் இன்றியமைததாக இருந்தது. சிறுபான்மையினர் மிகவும் முக்கியமான பங்கினை வகித்தார்கள்.
 • கேள்வி: ராஜபக்ஸவுக்கு எதிராக ஐக்கியமான ஒரு எதிரணியை அமைக்க சர்வதேச சமூகம் உதவியதாக அறிக்கைகள் உள்ளனவே, அப்படி நடந்ததா?
பொன்சேகா: சர்வதேச சமூகத்தை சேர்ந்த எவரும் எனக்கு வழிகாட்டவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை. ராஜபக்ஸவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உண்மையிலேயே சர்வதேச சமூகம் விரும்பியிருந்தால் அந்த மனிதர் பல நாடுகளையும் விரோதித்துக் கொள்வதற்கு முன்பே அவர்கள் அதைச் செய்திருப்பார்கள். அவர் சீனாவுடன் மட்டுமே நட்புறவை வைத்துக் கொண்டு உலகின் ஏனைய நாடுகளை அலட்சியம் செய்தார். மற்ற நாடுகளுடனான அவரது உறவு சரியானது அல்ல. அவரது வெளியுறவுக் கொள்கை தவறானது.அவரது ஆட்சியின்போது நாட்டில் மனித உரிமைகள் இருக்கவில்லை.
 • கேள்வி: நீங்கள் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால்  ஐக்கிய நாடுகள் சபை உட்பட அநேக சர்வதேச அமைப்புகள் ஸ்ரீலங்காவில் நடந்த யுத்தக் குற்றங்கள் பற்றிய உள்ளக விசாரணையை விரும்புகின்றன. இந்த விசாரணைக்கு புதிய அரசாங்கம் ஒத்துழைக்குமா?
பொன்சேகா: எந்த விசாரணைக்காகவும் எந்த நாட்டுடனும் நாங்கள் எந்த விதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. மனித உரிமை மீறல்களோ அல்லது யுத்தக் குற்றங்களோ இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருந்தால் பின்னர் ஏனைய சர்வதேச சமூகம் அதை விசாரிப்பதில் ஆர்வம் காட்டும். ஒவ்வொருவரையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் ஒவ்வொருவரையும் எங்களால் அனுமதிக்கவும் முடியாது. ஆனால் எங்களது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தும். அங்கு திரளான படுகொலைகள் இடம்பெற்றிருந்தால் எங்கள் இராணுவம் அதையும் விசாரிக்கும். அரசாங்கத்தால் இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
 • கேள்வி: ஆனால் யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையை போன்ற மன்றங்கள் ஒரு விசாரணைக்காக கோரிக்கை எழுப்பியபோது, அங்கு வன்முறைகள் இல்லாவிட்டால் அதை எதிர்கொள்வதற்கு ஏன் நீங்கள் தயங்கினீர்கள்?
பொன்சேகா: அங்கு ஒரு நியாயமான விசாரணை இருக்குமானால், அப்போது நாட்டின் ஒரு அங்கத்தவர் என்கிற வகையில் அதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும். இராணுவத்தை பொறுத்த மட்டில் நான்தான் அதை எதிர்கொள்ள வேண்டும். ஒரு சட்டபூர்வமான விசாரணை நடக்குமானால் அப்போது கள நடவடிக்கைகளை மேற்கொண்டவன் என்பதால் அதற்கு முகங்கொடுக்க நான் தயார். யுத்த வெற்றி வீரர்கள் விசாரணையை எதிர்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன்  என்பன போன்ற கருத்துக்களை சொல்வதன் மூலம் ராஜபக்ஸ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தார். இதுபோன்ற முட்டாள் தனமான அநேக அறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் போரைப்பற்றியும் மற்றும் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய அறிவு அவருக்கு கொஞ்சமே உள்ளது.
 • கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ யினை அழித்து பல தசாப்தங்களாக நீண்டுநின்ற போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக ராஜபக்ஸ முன்னிலைப் படுத்தப் படுகிறார்……..
பொன்சேகா: ஒரு ஜனாதிபதி என்கிற வகையில் முந்தைய ஜனாதிபதிகள் செய்ததைப் போல அவர் கட்டளைகளை மட்டுமே வழங்கினார். ஆனால் நடவடிக்கைகள் வெற்றியடையவில்லை. தந்திரோபாய மற்றும் மூலோபாய நடவடிக்கைகள் அவருக்குத் தெரியாது. ஒவ்வொரு ஜனாதிபதியும் யுத்தத்தை முடிக்கவே விரும்பினார்கள். ஆனால் 2005ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தான் பிரபாகரனோடு சமாதானப் பேச்சுக்களை நடத்துவதாக ராஜபக்ஸ சொல்லியுள்ளார். 2007ல் இராணுவம் எல்.ரீ.ரீ.ஈயினை துரத்தியபோது போர்க்களத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே அவருக்குத் தெரியவில்லை. ஆயுத உபகரணங்களுக்காக கூட அவர் பணம் ஒதுக்கவில்லை. மேலதிகமாக 85,000 இராணுவ வீரர்களை நான் நியமித்தேன். நான் தளபதியாக பதவியேற்றதும் ஒரே மாதத்தில் 4,000 பேர்களை நியமித்தேன். முன்பெல்லாம் ஒரு வருடத்தில் 3,000 பேர் மட்டுமே நியமிக்கப் படுவார்கள். முழு நடவடிக்கையையும் நான் திட்டமிட்டதோடு, சகல மட்டங்களிலும் உள்ள இராணுவத்தினரோடும் நான் தொடர்பு கொண்டிருந்தேன்.
 • கேள்வி: இன்னமும் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியினர் பிரபாகரன் இன்னமும் உயிரோடிருப்பதாகச் சொல்கிறார்களே. இதில் உண்மை என்ன?
பொன்சேகா: இறந்த உடலை எல்லோரும் கண்டார்கள். பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியினதும் உடல்களை நாங்கள் கண்டோம். அவரது மனைவி மதிவதனி மற்றும் மகளது உடல்களை நாங்கள் காணவில்லை. நான் கண்ட குமரன் பத்மநாதனின் ஒரு நேர்காணலில் அவர்கள் இருவரும் யுத்தத்தில் முன்னணி வரிசையில் இருந்ததாக அவர் சொன்னார். அவர்கள் போர்க்களத்தில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம். பிரபாகரனின் மனைவி போராளிகளுக்கு தளவாடங்கள் வழங்குவதற்கு உதவியுள்ளார் மற்றும் அவரது மகள் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு பெண் போராளி. யுத்த களத்தில் இருந்து யாரும் தப்பியிருக்க முடியாது.
கேள்வி: அவரது இளைய மகன் பாலச்சந்திரனுக்கு என்ன நடந்தது? அவன் ஒரு சிறுவன். இராணுவம் ஏன் அவனைக் கொன்றது?
பொன்சேகா: எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவனை உயிருடன் பிடிக்கவில்லை. ஊடகங்கள் வழியாகத்தான் அவனது உடலின் படங்களை நான் பார்த்தேன். இராணுவம் அவனைக் கொன்றிருந்தால் அது எனக்கு அறிவிக்கப் பட்டிருக்கும்.
 • கேள்வி: உங்களைப் பொறுத்த மட்டில் இராணுவம் பிரபாகரனையும் அவரது மூத்த மகனையும் மட்டுமே கொன்றதா?
பொன்சேகா: யுத்தம் முடிந்ததின் பின்னர் நாங்கள் அவர்களது உடல்களை மட்டுமே கண்டோம்.
 • கேள்வி: பின்னாட்களில் ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்ட குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகியோருக்கு என்ன நடக்கும்?
பொன்சேகா: அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் கடும் போக்கு பயங்கரவாதிகள்.
 • கேள்வி: எல்.ரீ.ரீ.ஈயிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நடந்தது?
பொன்சேகா: எல்.ரீ.ரீ.ஈயின் பெரும் பகுதி பணம் மற்றும் தங்கம் என்பன குமரன் பத்மநாதன் (கேபி) வசம் இருந்தன அந்தக் காரணத்தால்தான் அவர் ராஜபக்ஸ அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு வந்தார். கேபி மூலமாக தொன் கணக்கான தங்கம் ராஜபக்ஸ குடும்பத்தாரால் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது, இது சம்பந்தமாக நிச்சயம் ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும்.
 • கேள்வி: தமிழர் பெரும்பான்மையாக உள்ள வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை விலக்கும்படி ஒரு கோரிக்கை உள்ளதே இது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன?
பொன்சேகா: நாங்கள் அங்கு இராணுவத்தை பராமரிக்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்புக்காக மட்டுமன்றி வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு வேண்டியும் அது தேவையாக உள்ளது.
 • கேள்வி: ஸ்ரீலங்காவில் போராளிக் குழுக்களில் ஒரு புத்துயிர்ப்பு எழலாம் என நீங்கள் எண்ணுகிறீர்களா?
பொன்சேகா: நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை அப்படி நடப்பதை அனுமதிக்க மாட்டோம்.
 • கேள்வி: அப்படியானால் பெருமளவு இராணுவத்தை வட மாகாணத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
பொன்சேகா: இராணுவம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளது,மற்றும் வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும்.
 • கேள்வி: புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை என்ன?
பொன்சேகா: நாங்கள் கூட்டுச் சேரா கொள்கையை பின்பற்றுவோம். ஒரு நாட்டுடன் மட்டுமே நாங்கள் நட்புடன் இருக்க மாட்டோம். அனைவருடனும் நல்லுறவைப் பேணுவோம்.
 • கேள்வி: சமீபத்தைய கடந்த காலத்தில் பாகிஸ்தானின் ஐ.ஏஸ்.ஐ இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை  தங்களுடைய இராஜதந்திரிகள் ஊடாக கொழும்பிலிருந்து நடத்தியுள்ளது….
பொன்சேகா: அப்படி நடக்குமானால் இறையாண்மை உள்ள ஒரு நாடு என்கிற வகையில் அப்படியான பயங்கரவாத செயற்பாடுகளை எங்களால் அனுமதிக்க முடியாது. எந்த வகையான பயங்கரவாத செயற்பாடுகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்.  நன்றி தேனீ 


No comments: