சிட்னியில் நடந்தேறிய அஞ்சலிப் பகிர்வு நிகழ்வு

.



சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வந்த இலக்கிய ஆளுமைகள்அமரர் காவலூர் இராசதுரை, அமரர் எஸ்.பொ என்றழைக்கப்படும் எஸ் பொன்னுத்துரை மற்றும் கனடா வாழ் ஈழத்துக் கல்வி அறிஞர், எழுத்தாளர்அமரர் பொ.கனகசபாபதி  ஆகியோர் குறித்த அஞ்சலி நினைவரங்கு நேற்று ஜனவரி மாதம் 18 ஆம் திகதி 
நடந்தேறியது. இந்த நிகழ்வை சிட்னியில் வாழும் இலக்கிய ஆர்வலர்கள் ஒருங்கமைத்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கான மண்டப வசதியையும், தேநீர், சிற்றுண்டி வசதியையும்
Mayura Function Centre அரங்க நிர்வாகத்தினர் ஏற்படுத்தி உதவியிருந்தனர்.

போரினாலும் இயற்கை அநர்த்தங்களாலும் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கான அஞ்சலியைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் திரு.நீர்வை பொன்னையன், திரு.வசீ ராஜதுரை, திருமதி டாக்டர் பொன் அநுரா, மற்றும் திரு.நிக்கல்ஸ் ராஜநாயகம் ஆகியோர் செய்திருந்தார்கள்.



இந்த அஞ்சலி நிகழ்வின் வரவேற்புரையை திரு.கானா பிரபா வழங்க, தொடர்ந்து நிகழ்வின் தலைவராக இருந்து முன்னெடுத்துச் சென்றார் திரு,திருநந்த குமார் அவர்கள்.
எழுத்தாளர் திரு.மாத்தளை சோமு, எழுத்தாளர் டாக்டர் ஆ.சி.கந்தராசா, வானொலியாளர் திரு.ஈழலிங்கம், எழுத்தாளர் ரஞ்சகுமார், வானொலியாளர் ஸ்ரீமதி செளந்தரி கணேசன்,
கல்வியாளர் திருமதி கலையரசி சின்னையா ஆகியோர் வழங்கிய நினைவுப்பகிர்வுகளோடு நிகழ்வின் முதலாவது அமர்வு அமைந்திருந்தது.


தொடர்ந்து இடம்பெற்ற பார்வையாளர் அரங்கில் திரு.வசீ.ராஜதுரை, வானொலியாளர் திரு.பால விக்னேஸ்வரன், வானொலியாளர் திருமதி சோனா பிறின்ஸ்,
கவிஞர் திரு.குமாரசெல்வம், திரு.பொன்.மயிலை நாதன் ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.



ஈழத்தின் ஆளுமைகள் காவலூர் இராசதுரை, எஸ்.பொ மற்றும். பொ.கனகசபாபதி ஆகியோரது நினைவுகளைத் தாங்கிய பகிர்வாக, அவர்களுக்கு வாசகர்களாகிய சிட்னி வாழ் அன்பர்கள் வழங்கிய
நன்றிக்கடனாக இந்த நிகழ்வு அமைந்து நிறைவேறியது.









No comments: