.
நான் யார்? எனக்கு ஏன் இந்த நிலை? மாரிமுத்தா அல்லது சீலனா ....... கடவுளே எனக்கேன் இந்தச்சோதனை ? என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்றான் சீலன்.
கால்முறிந்த நிலையில் தங்கை.கொழும்பில் வீடு எடுக்க ஆயத்தமாகும் அம்மா.பட்டப்படிப்பு படிக்க ஆசைப்படும் தங்கை.கனடாவில் காதலித்த பெண். காதலுக்குக் குறுக்கே வில்லனாய் முளைத்த முரளி.வேலையும் போய்... கொலையிலும் தேவையில்லாமல் மாட்டுப்பட்ட நிலை.இடமும் மாறி- பேரும் மாறி இக்கட்டாக வந்து விட்ட நிலைமை.
சீலனுக்கு என்ன முடிவு எடுப்பது? எங்குபோய் இது முடியப் போகிறது ..... என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது.
எல்லாக் கடவுளையும் மனதில் பிரார்த்தித்துக் கொண்டான்.விழுதல் என்பது எழுதலுக்கே என்றாலும் எனது நடைமுறை வாழ்க்கையிலே தொடர்ந்து விழுதலாகவே இருக்கிறதே என்று சீலன் மனத்துக்குள் வேதனைப் பட்டுக்கொண்டான்.
டேவிட்டைக் கண்டதும் அவரால் மக்டொனால்டில் வேலை கிடைத்ததும் ... தனது கஷ்டத்தை சொன்னதும்.. பானு; தான்இ காசுதருகிறேன் என்று சொன்ன தும்..யாவும் சீலனின் மனதில் படமாக ஓடியது.ஒரு சிறிது சந்தோஷமோ அல்லது நிம்மதியோ நிரந்தரமாக நிற்குது இல்லையே ..என எண்ணிய பொழுது சீலனிடம் வெளிப்பட்ட அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமற் போய்விட்டது. தன்னையும் மீறி சீலன் ஓவென்று அழுதே விட்டான்.
சீலனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சீலன் மாரிமுத்து என்ற பெயருடன் தங்கவிடப்பட்டான்.அடுத்த நாள் காலை மீண்டும் அதிகாரிகள் வரத்தொடங் கினார்கள். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன. சீலனின் நண்பன் சாந்தனின் சாதுர்யமான மொழிபெயர்ப்பால் மாரிமுத்து என மாறிய சீலனை வெளியில் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
சாந்தன் வெளியில் வந்து சீலனை தான் தங்கியிருந்த அறைக்குக் கூட்டிச் சென்றான். சீலனுக்கு இப்போது பெயர் ஒரு பிரச்சினையாகப் படவில்லை. இனிமேல் என்ன செய்வது என்பதே பெரும் கேள்விக்குறியாகி நின்றது.சீலன் என்றாலும் மாரிமுத்து என்றாலும் அகதி அகதி தானே என்ற எண்ணமே அவனுள் ஏற்பட்டது.
தங்கையின் கல்யாணத்துக்கு இருபதுலட்சம் தாய் கேட்டதும் ... அப்போது இருந்த நிலையில் சீலன் தலையாட்டி சம்பந்தத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமென்று தாய்க்கு உறுதியும் கொடுத்தான். வெள்ளவத்தையில் வீடு எடுக்க இ தங்கை படிக்க எல்லாவற்றும் காசுபற்றிக் கவலைப்படவேண்டா மென்று தைரியமும் கொடுத்தான்.
ஆனால் இப்போது சீலனோ தைரியம் இழந்து தடுமாறி நிற்கும் நிலைக்கு வந்துவிட்டான்.தான் தாய்க்குச் சொன்னதையெல்லாம் நினைத்துப்பார்க்கிறான். அழுவதைத் தவிர அவனால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை......
சீலனின் மனதில் பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். அப்பா இடையில் இறந்துவிட அம்மாதான் குடும்பப் பாரமனைத்தையும் சுமக்கும் நிலை. என்றாலும் எப்படியும் பிள்ளை களைப் படிப்பிக்க வேண்டும் என்னும் பேரவாவை மட்டும் தாய் விட்டு விடவில்லை.
மகன் சீலனை எப்படியும் ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார்.ஏழைக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால் ... மருத்துவம் ஏழைகளுக்கு நல்ல முறையில் கிடைக்கவில்லை என்பது சீலனின் மனதில் பதிந்திருந்தது. எனவே படிக்கும் காலத்திலேயே சீலனின் கனவு தான் ஒரு மருத்துவராகி தன்னைப் போல் இருகின்ற எத்தனையோ ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதேயாகும்.
அதேவேளை இலவச மருத்துவ மனை ஒன்று நிறுவி ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவத்தை வழங்கவேண்டும் எனக் கனவும் வைத்திரு ந்தான்.
யாழ் பல்கலைக்கழகத்துக்கு தனது மகன் தெரிவாகி விட்டான் என்பதைக் கேட்டதும் சீலனின் தாய் மகனைக் கட்டியனைத்து தேம்பித் தேம்பி அழுதே விட்டார்.அதுவும் மருத்துவத்துறைக்கு என்றதும் சீலனின் தாயாருக்கு ..... தான் பிறந்ததின் அர்த்தம் புரிந்தது போலாகிவிட்டது.சீலனின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.சீலனுக்கும் அவனது குடும்பத்துக்கும் ஏகப்பட்ட மரியாதை மாலைகள் வந்து குவிந்தபடியே இருந்தன.சீலனின் குடும்பத்தை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள் எல்லாம் பெரும் மரியாதை கொடுத்து நின்றனர்.
ஆனால் சீலன் மட்டும் என்றும் போல அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லா மல் தனது அன்றாட அலுவல்களைப் பார்த்தபடியே இருந்தான்.
யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற வேளையில் இவனது தனிப்பட்ட ஆற்றலாலும். இயல்பான நற்குணத்தாலும் விரிவுரையாளர்கள்இ பேராசிரியர்கள் அனைவரதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டான். இதனால் மருத்துவ பீட மாணவர் தலவனாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டான்.
பல்கலைக் கழகம் முழுவதும் சீலனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.
பல்கலைக் கழக நடவடிக்கைகள் அத்தனையிலும் மிகவும் நன்றாகவே ஈடு பட்டான். சீலனினுடன் கூடப்படித்த பத்மகலா என்பவளுக்கு சீலன் மீது ஒரு விருப்பு ஏற்பட்டது. அதனால் சீலனுடன் நெருங்கிப்பழக ஆசைப்பட்டாள். ஆனால் சீலனோ காதல் எதையும் காதில் போட்டதாகத்தெரியவில்லை. அவனது லட்சியம் படிப்பாகவே இருந்தது. மற்றயது தனது தாயும் தாய்பட்ட கஷ்டங்களும் அவன் மனத்தில் ஊன்றிப்போய் இருந்தன.
கலாவோ எப்படியும் சீலனை தன்வசப் படுத்திவிடுவதில் நோக்கமாகவே இருந்தாள்.நாளாவட்டத்தில் சீலனும் கலாபற்றி உணரத்தலைப் பட்டான். இருவருக்கும் இடையில் ஒரு காதல் பாலம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இருவரும் படிப்பில் அக்கறை கொண்டபடியால் வரம்புடன் காதலில் ஈடுப ட்டார்கள்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்ததுஇ படித்ததுஇ வேலை பார்த்ததுஇ யாவுமே இலங்கையில்த்தான்.
தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.

பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப்
பட்டதாரி.அத்தோடுஇ கல்வியியல் துறையில் டிப்ளோமாஇ சமூகவியல் துறையில்
டிப்ளோமாஇகற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும்
பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராகவும் இவட இலங்கை
புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ்இ இந்துகலாசார விரிவுரையாளராகவும்இ
யாழ்ஃ பேராதனை பல்கலைக்கழகங்களின்
வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்இஇலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் நாடகத்தயாரிப்பாளராகவும்
கடமையாற்றியுள்ளார்.மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி,
பட்டதாரி.அத்தோடுஇ கல்வியியல் துறையில் டிப்ளோமாஇ சமூகவியல் துறையில்
டிப்ளோமாஇகற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும்
பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராகவும்
புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ்இ இந்துகலாசார விரிவுரையாளராகவும்இ
யாழ்ஃ பேராதனை பல்கலைக்கழகங்களின்
வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்இஇலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் நாடகத்தயாரிப்பாளராகவும்
கடமையாற்றியுள்ளார்.மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி,
உதயசூரியன் இந்துசாதனம்,மெல்லினம்,உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை,கட்டுரை,சிறுகதை, விமர்சனம்,ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும் எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியா
வில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்ப்ட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும்,ஆய்வுக்கட்டுரையாள
ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ் கலாசாரம் இந்துசமயம், சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடு
சம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்இவிக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும் தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின்
இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

தொடர்கிறது 34
நான் யார்? எனக்கு ஏன் இந்த நிலை? மாரிமுத்தா அல்லது சீலனா ....... கடவுளே எனக்கேன் இந்தச்சோதனை ? என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்றான் சீலன்.
கால்முறிந்த நிலையில் தங்கை.கொழும்பில் வீடு எடுக்க ஆயத்தமாகும் அம்மா.பட்டப்படிப்பு படிக்க ஆசைப்படும் தங்கை.கனடாவில் காதலித்த பெண். காதலுக்குக் குறுக்கே வில்லனாய் முளைத்த முரளி.வேலையும் போய்... கொலையிலும் தேவையில்லாமல் மாட்டுப்பட்ட நிலை.இடமும் மாறி- பேரும் மாறி இக்கட்டாக வந்து விட்ட நிலைமை.
சீலனுக்கு என்ன முடிவு எடுப்பது? எங்குபோய் இது முடியப் போகிறது ..... என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது.
எல்லாக் கடவுளையும் மனதில் பிரார்த்தித்துக் கொண்டான்.விழுதல் என்பது எழுதலுக்கே என்றாலும் எனது நடைமுறை வாழ்க்கையிலே தொடர்ந்து விழுதலாகவே இருக்கிறதே என்று சீலன் மனத்துக்குள் வேதனைப் பட்டுக்கொண்டான்.
டேவிட்டைக் கண்டதும் அவரால் மக்டொனால்டில் வேலை கிடைத்ததும் ... தனது கஷ்டத்தை சொன்னதும்.. பானு; தான்இ காசுதருகிறேன் என்று சொன்ன தும்..யாவும் சீலனின் மனதில் படமாக ஓடியது.ஒரு சிறிது சந்தோஷமோ அல்லது நிம்மதியோ நிரந்தரமாக நிற்குது இல்லையே ..என எண்ணிய பொழுது சீலனிடம் வெளிப்பட்ட அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமற் போய்விட்டது. தன்னையும் மீறி சீலன் ஓவென்று அழுதே விட்டான்.
சீலனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சீலன் மாரிமுத்து என்ற பெயருடன் தங்கவிடப்பட்டான்.அடுத்த நாள் காலை மீண்டும் அதிகாரிகள் வரத்தொடங் கினார்கள். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன. சீலனின் நண்பன் சாந்தனின் சாதுர்யமான மொழிபெயர்ப்பால் மாரிமுத்து என மாறிய சீலனை வெளியில் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
சாந்தன் வெளியில் வந்து சீலனை தான் தங்கியிருந்த அறைக்குக் கூட்டிச் சென்றான். சீலனுக்கு இப்போது பெயர் ஒரு பிரச்சினையாகப் படவில்லை. இனிமேல் என்ன செய்வது என்பதே பெரும் கேள்விக்குறியாகி நின்றது.சீலன் என்றாலும் மாரிமுத்து என்றாலும் அகதி அகதி தானே என்ற எண்ணமே அவனுள் ஏற்பட்டது.
தங்கையின் கல்யாணத்துக்கு இருபதுலட்சம் தாய் கேட்டதும் ... அப்போது இருந்த நிலையில் சீலன் தலையாட்டி சம்பந்தத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமென்று தாய்க்கு உறுதியும் கொடுத்தான். வெள்ளவத்தையில் வீடு எடுக்க இ தங்கை படிக்க எல்லாவற்றும் காசுபற்றிக் கவலைப்படவேண்டா மென்று தைரியமும் கொடுத்தான்.
ஆனால் இப்போது சீலனோ தைரியம் இழந்து தடுமாறி நிற்கும் நிலைக்கு வந்துவிட்டான்.தான் தாய்க்குச் சொன்னதையெல்லாம் நினைத்துப்பார்க்கிறான். அழுவதைத் தவிர அவனால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை......
சீலனின் மனதில் பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். அப்பா இடையில் இறந்துவிட அம்மாதான் குடும்பப் பாரமனைத்தையும் சுமக்கும் நிலை. என்றாலும் எப்படியும் பிள்ளை களைப் படிப்பிக்க வேண்டும் என்னும் பேரவாவை மட்டும் தாய் விட்டு விடவில்லை.
மகன் சீலனை எப்படியும் ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக அவர் இருந்தார்.ஏழைக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால் ... மருத்துவம் ஏழைகளுக்கு நல்ல முறையில் கிடைக்கவில்லை என்பது சீலனின் மனதில் பதிந்திருந்தது. எனவே படிக்கும் காலத்திலேயே சீலனின் கனவு தான் ஒரு மருத்துவராகி தன்னைப் போல் இருகின்ற எத்தனையோ ஏழைகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதேயாகும்.
அதேவேளை இலவச மருத்துவ மனை ஒன்று நிறுவி ஆதரவற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவத்தை வழங்கவேண்டும் எனக் கனவும் வைத்திரு ந்தான்.
யாழ் பல்கலைக்கழகத்துக்கு தனது மகன் தெரிவாகி விட்டான் என்பதைக் கேட்டதும் சீலனின் தாய் மகனைக் கட்டியனைத்து தேம்பித் தேம்பி அழுதே விட்டார்.அதுவும் மருத்துவத்துறைக்கு என்றதும் சீலனின் தாயாருக்கு ..... தான் பிறந்ததின் அர்த்தம் புரிந்தது போலாகிவிட்டது.சீலனின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.சீலனுக்கும் அவனது குடும்பத்துக்கும் ஏகப்பட்ட மரியாதை மாலைகள் வந்து குவிந்தபடியே இருந்தன.சீலனின் குடும்பத்தை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள் எல்லாம் பெரும் மரியாதை கொடுத்து நின்றனர்.
ஆனால் சீலன் மட்டும் என்றும் போல அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லா மல் தனது அன்றாட அலுவல்களைப் பார்த்தபடியே இருந்தான்.
யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற வேளையில் இவனது தனிப்பட்ட ஆற்றலாலும். இயல்பான நற்குணத்தாலும் விரிவுரையாளர்கள்இ பேராசிரியர்கள் அனைவரதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டான். இதனால் மருத்துவ பீட மாணவர் தலவனாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டான்.
பல்கலைக் கழகம் முழுவதும் சீலனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.
பல்கலைக் கழக நடவடிக்கைகள் அத்தனையிலும் மிகவும் நன்றாகவே ஈடு பட்டான். சீலனினுடன் கூடப்படித்த பத்மகலா என்பவளுக்கு சீலன் மீது ஒரு விருப்பு ஏற்பட்டது. அதனால் சீலனுடன் நெருங்கிப்பழக ஆசைப்பட்டாள். ஆனால் சீலனோ காதல் எதையும் காதில் போட்டதாகத்தெரியவில்லை. அவனது லட்சியம் படிப்பாகவே இருந்தது. மற்றயது தனது தாயும் தாய்பட்ட கஷ்டங்களும் அவன் மனத்தில் ஊன்றிப்போய் இருந்தன.
கலாவோ எப்படியும் சீலனை தன்வசப் படுத்திவிடுவதில் நோக்கமாகவே இருந்தாள்.நாளாவட்டத்தில் சீலனும் கலாபற்றி உணரத்தலைப் பட்டான். இருவருக்கும் இடையில் ஒரு காதல் பாலம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இருவரும் படிப்பில் அக்கறை கொண்டபடியால் வரம்புடன் காதலில் ஈடுப ட்டார்கள்.
No comments:
Post a Comment