பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸில் ஆர்ப்பாட்டம்
குரோஷியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கொலிண்டா தெரிவு
எயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதி வெடித்து சிதறியுள்ளது
மத்திய ஆபிரிக்காவில் படகு விபத்து: 100 பேரை காணவில்லை
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸில் ஆர்ப்பாட்டம்
12/01/2015 பிரான்ஸில் 3 நாட்களாக இடம்பெற்ற வன்முறைகளில் 17 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் தலைநகர் பாரிஸில் பாரிய ஊர்வலமொன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஊர்வலத்தில் சுமார் 40 உலகத் தலைவர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர்.
முதல்நாள் சனிக்கிழமை அந்நகரில் இடம்பெற்ற எதிர்ப்பு ஊர்வலங்களில் 700,000 பேர் வரை கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பாரிஸ் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 2,000 பொலிஸ் உத்தி யோகத்தர்களும் 1,350 படைவீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாரிஸிலுள்ள சார்ளி ஹெப்டோ சஞ்சிகை அலுவலகத்தில் கடந்த 7 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 12 பேரை படுகொலை செய்து துப்பாக்கிதாரிகளுக்கு அனுசரணையாக செயற்பட்டவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேற்படி சகோதரர்களான செய்த் மற்றும் செரிப் கோயசி ஆகிய இரு சகோதரர்களும் சஞ்சிகை மீதான துப்பாக்கிச் சூட்டையடுத்து தமது காரை கைவிட்டு பிறிதொரு காரில் தப்பிச்சென்றிருந்தனர்.
அதன்பின் வில்லர்ஸ் கொட்டெரெட்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள சேவை நிலைய மொன்றை கொள்ளையிட்டு காரில் தப்பி சென்ற அந்த சகோதரர்களுக்கும் பொலிஸா ருக்குமிடையில் பாரிஸின் வடகிழக்கேயு ள்ள தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.
தொடர்ந்து பாரிஸிலிருந்து 35 கிலோ மீற் றர் தொலைவில் டம்மார்ரின் – என் – கோய லி நகரிலுள்ள தொழிற்சாலைக் கட்டடத்துக் குள் நுழைந்த அந்த அந்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த கட்டடத்தை விட்டு வெளியே வந்து பொலிஸாரின் மீது துப்பாக் கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிகளான சகோதரர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதே சமயம் கடந்த 8 ஆம் திகதி பாரிஸின் தெற்கே அமெடி கோலிபாலி என்ற துப்பாக்கிதாரி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சுட்டுக்கொன்றிருந்தார்.
அதன்பின் கோலிபாலி கிழக்கு பாரிஸிலுள்ள சிறப்புச் சந்தையொன்றில் பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட் டில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் கோலிபாலியின் வாழ்க் கைத் துணையான ஹாயத் போமெட்டியனி யை பொலிஸார் தொடர்ந்து வலை வீசித்தேடி வருகின்றனர்.பிரான்ஸில் எதிர்வரும் வாரங்களில் உயர் எச்சரிக்கை பிறப்பிக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கஸெனியுவி தெரிவித்தார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய உள்துறை அமைச்சர் தெரேஸா மே உள்ளடங்கலாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த உள்நாட்டு அமைச்சர்களை சந்தித்து போராளிக்குழுக்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து கலந்துரையாடினார்.
அதேசமயம் சார்ளி ஹெப்டோ சஞ்சிகையின் இறைதூதரை அவதூறு செய்யும் கேலிச்சித்திரங்களை மீள வெளியிட்ட ஜேர்மனிய பத்திரிகை அலுவலகமொன்றின் மீது தீ வைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹம்பேர்க் மோர்னிங் போஸ்ட் பத்திரிகை அலுவலகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எவரும் காயமடையவில்லை. நன்றி வீரகேசரி
குரோஷியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கொலிண்டா தெரிவு
13/01/2015 குரோஷியாவின் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை சேர்ந்த கொலிண்டா கிரபர் - கிராரோவிக் வெற்றி பெற்றுள்ளார்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள கொலிண்டா குரோஷியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
அவர் மேற்படி தேர்தலில் 50.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது போட்டியாளரான பதவி விட்டு விலகிச் செல்லும் ஜனாதிபதி ஐவோ ஜொஸிபோவிக் இந்தத் தேர்தலில் 49.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள ஜொஸிபோவிக், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கொலிண்டாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கொலிண்டாவின் தேர்தலிலான வெற்றியானது குரோஷியாவின் ஆட்சி, மத்திய இடது சாரி கூட்டமைப்பிலிருந்து வலது சாரி கட்சிக்கு மாறுவதற்கான அடையாளமாகவுள்ளது.
மேற்படி தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகளுக்கான முக்கிய பலப்பரீட்சையாக நோக்கப்படுகிறது.
முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 1991 ஆம் ஆண்டு குரோஷியா விடுதலை பெறுவதற்கு பங்களிப்புச் செய்த குரோஷிய ஜனநாயக ஒன்றிய கட்சியின் உறுப்பினரான கொலிண்டா (46 வயது), கடந்த காலங்களில் வெளிநாட்டு அமைச்சராகவும் நேட்டோ செயலாளர் நாயகத்தின் உதவியாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
தேர்தல் வெற்றியையடுத்து தலைநகர் ஸக்ரெப்பில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கொலிண்டா, குரோஷியாவை சுபீட்சமும் செல்வமும் அற்ற நாடென எவரும் கூறுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சூளுரைத்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடியை களைய மக்கள் அனைவரும் தேசிய மட்டத்தில் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
சட்ட நிபுணரான ஜொஸிபோவிக் 2010 ஆம் ஆண்டிலிருந்து குரோஷியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.அவரது மத்திய இடது சாரி கூட்டமைப்பு அரசாங்கமானது குரோஷியாவை 6 வருட கால பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கத் தவறியமையே அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
குரோஷியா 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. நன்றி வீரகேசரி
எயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதி வெடித்து சிதறியுள்ளது
14/01/2015 இரு வாரங்களுக்கு முன் விபத்துக்குள்ளான எயார் ஏசியா கியூ.இஸட். 8501 விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதிய பின்னர் வெடித்துச் சிதறியுள்ளதாக மேற்படி விமானத்தின் சிதைவுகள் தொடர்பான ஆரம்பகட்ட பகுப்பாய்வுகள் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிவீரர்கள் விமானிகளின் அறை ஒலிப்பதிவு கருவியை செவ்வாய்க்கிழமை கடலிலிருந்து வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
கறுப்புப் பெட்டியின் முதலாவது பாகமான விமான தரவு பதிவு கருவி மீட்கப்பட்டதற்கு மறுநாளே இந்த கருவி மீட்கப்பட்டுள்ளது.
எயார் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்தோனேசிய சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் பயணித்த வேளை காணாமல் போயிருந்தது.
மேற்படி விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்தவர்களது 48 சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஏனைய சடலங்கள் கடலின் அடித்தளத்தில் விமானத்தின் பிரதான உடல் பகுதிக்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த வாரம் விமானத்தின் வால் பகுதி கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் விமானத்தின் பிரதான உடல் பகுதி உள்ளது.
மேற்படி விமானத்தின் பிரதான உடல் பகுதியை கண்டு பிடித்து மீட்பதற்கு இதுவரை திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.பி.சுப்பிரியடி தெரிவித்தார்.
விமானத்தின் ஒலிப்பதிவு கருவி கடலின் கீழ் சுமார் 30 மீற்றர் ஆழத்தில் விமானத்தின் கனமான இறக்கை பாகமொன்றின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பானது எயார் ஏசியா விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பதை கண்டறிய உதவும் எனக் கூறப்படுகிறது.
தற்போது அந்த உபகரணம் ஜாவா கடலிலிலுள்ள இந்தோனேசிய பண்டா ஏக் போர்க் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி யொருவர் கூறினார். நன்றி வீரகேசரி
மத்திய ஆபிரிக்காவில் படகு விபத்து: 100 பேரை காணவில்லை
15/01/2015 மத்திய ஆபிரிக்காவில் படகொன்று தீப்பற்றி ஆற்றில் மூழ்கியதில் சுமார் 100பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பான் குயியிலிருந்து பயணத்தை மேற்படி படகானது ஒயு பான்குயி ஆற்றில் மூழ்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி படகு அனர்த்தத்தில் குழந்தையொன்றின் சடலம் மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.
படகு அனர்த்தத்தையடுத்து நடவடிக்கையில் மீட்புக் குழுவினர் எவரும் ஈடுபடுத்தப்படாததால் காணாமல் போனவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதை அறிய முடியாதுள்ளதாகவும் பிராந்திய அ திகாரிகள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment